கோத்தபாயவுக்கு எதிராக முறைப்பாடு
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரத்துபஸ்வல மற்றும் வெலிவேரிய பிரதேசத்தில் குடிநீர் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.இந்த சம்பவத்தில் சிலர் கொல்லப்பட்டதுடன் சிலர் காயமடைந்திருந்தனர்.
இந்த உயிரிழப்புக்கள் மற்றும் காயமடைந்தமை தொடர்பிலேயே முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.மனித உரிமை ஆணைக்குழுவில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சியனே நீரைப் பாதுகாக்கும் அமைப்பினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.முன்னாள் பாதுகாப்பு செயலாளர் படையினரைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.








