தென்னாப்பிரிக்கா வெற்றி
தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 33.4 ஓவர்களில் 122 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது.தென்னாப்பிரிக்காவின் சார்பில் இம்ரான் தாஹீர் 4 விக்கட்டுகளையும், வெர்னன் பிலிண்டர் 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.
123 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய தென்னாப்பிரிக்கா, 24.4 ஓவர்களில் ஒருவிக்கட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
ஹசீம் அம்லா 61 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
ஆட்டநாயகனாக தென்னாப்பிரிக்காவின் வெர்னன் பிலிண்டர் தெரிவானார்.
இதன்படி ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் 3க்கு0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா முன்னிலையில் இருக்கிறது.








