Breaking News

பாப்பரசர்களின் விஜயத்தின் போது இலங்கையில் ஏற்பட்டிருந்த ஆட்சி மாற்றங்கள்

இலங்கைக்கு பாப்பரசர்கள் விஜயம் செய்தபோது இலங்கையில் மூன்று முறை ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.


1970ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி பாப்பரசராக இருந்த நான்காவது போல் இலங்கைக்கு விஜ யம் செய்த போது, இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருந்தது.ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர் ந்த பிரதமரான டட்லி சேனநாயக்க இல ங்கைக்கு விஜயம் செய்யுமாறு அப் போது பாப்பரசருக்கு அழைப்பு விடுத்தி ருந்தார். 

ஆனால் பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்த போது,  ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி கவிழ்ந்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது. இத னால், பாப்பரசர் நான்காவது போலை இலங்கையின் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்கவே வரவேற்றார்.

1995ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாப்பரசர் இரண்டாவது ஜோன் போல் இலங்கைக்கான விஜயம் இடம்பெற்றது.இதன்போது, பாப்பரசரை இலங் கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க பதவியில் இருக்கவில்லை.

இரண்டாவது ஜோன் போல் கொழு ம்புக்கு சென்ற போது அவரை, ஜனாதி பதியாகப் பொறுப்பேற்றிருந்த சந்திரிகா குமாரதுங்கவே வரவேற்றார். அதுபோலவே, இம்முறையும் பாப் பரசரை இலங்கைக்கு வருமாறு கடந்த நவம்பர் மாதம் வத்திக்கானுக்குச் சென்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்தார். 

ஆனால், இலங்கைக்கு பாப்பரசர் நேற்று முன்தினம் விஜயம் செய்த போது, மகிந்த ராஜபக்சவின் ஆட்சி பறிபோயிரு ந்த நிலையில், இலங்கையின்; புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பாப்பரசரை வரவேற்றிருந்தார்.