தென்னாபிரிக்காவுக்கு வெற்றி
தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 148 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
ஜொஹனர்ஸ் பேர்க்கில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை தென்னாபிரிக்க அணிக்கு வழங்கியது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 2 விக்கட்டுகளை இழந்த நிலையில் 439 ஓட்டங்களை பெற்றது.இதன்போது ஏ பி டிவில்லியர்ஸ் 31 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்து, சர்வதேச ஒருநாள் போட்டியில் வேகமான சதத்தை பெற்றவர் என்ற உலக சாதனையை நிலைநாட்டினார்.
பதிலளித்த மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்த நிலையில், 291 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.








