Breaking News

காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை இன்று திருமலையில்

காணாமல் போனோர் தொடர்­பான முறைப்­பா­டு­களை விசா­ரிப்­ப­தற்­கான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு இன்­று ­ச­னிக்­கி­ழ­மை­முதல் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் விசா­ர­ணை­களை ஆரம்­பிக்­க­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்டு ஏற்­பா­டுகள் இடம்பெற்­றுள்­ளன.

இன்று முதல் 30ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் இந்த ஆணைக்­குழு திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் காலை 9 மணி­யி­லி­ருந்து மாலை 5 மணி வரை சாட்­சி­யங்­களைப் பதிவுசெய்­ய­வுள்­ளது. அத்­துடன்,இன்று சனி ­மற்றும் நாளை ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் மூதூர் பிர­தேச செய­ல­கத்தில் சாட்­சி­யங்கள் பதிவு செய்­யப்­ப­ட­வுள்­ளன. அவ்­விரு தினங்­களில் மூதூர் சேரு­வி­ல,ஈச்­சி­லம்,பற்று மற்றும் கிண்­ணியா, தம்­ப­ல­காமம் ஆகிய ஐந்து பிர­தேச செய­லகப் பிரி­வு­களைச் சேர்ந்த 326 பேர் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்­கென அழைக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

29 ஆம் திகதி மற்றும் 30ஆம் திக­தி­களில் திரு­கோ­ண­மலை மாவட்ட செய­ல­கத்தில் காணாமல் போனோர் பற்­றிய சாட்­சி­யங்கள் பதிவு செய்­யப்­பட உள்­ள­தா­கவும் ஆணைக்­கு­ழுவின் அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.அத்­துடன் மொற­வெவ பத­வி­சி­றி­புர கோம­ரங்­க­ட­வெல ,குச்­ச­வெளி கந்­தளாய் ஆகிய ஐந்து பிர­தேச செய­லகப் பிரி­வி­லுள்­ள­வர்கள் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்­கான ஒழுங்­குகள் செய்­யப்­பட்­டுள்­ளன

திரு­கோ­ண­மலை மாவட்டச் செய­ல­கத்தில் 29ஆம் திகதி திங்­க­ளன்று இடம்­பெறும் சாட்­சி­ய­ம­ளிப்­புக்­காக 181 விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு கடி­தங்கள் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. எனினும் இது­வரை தமது உற­வுகள் காணாமல் போனது பற்றி காணாமல் போனோர் தொடர்­பான முறைப்­பா­டு­களை விசா­ரிப்­ப­தற்­கான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழு­விற்கு விண்­ணப்­பிக்­காதோர் விசா­ரணை நடை­பெறும் அனைத்து தினங்­க­ளிலும் புதி­தாக தமது விண்­ணப்­பங்­களைச் சமர்ப்­பிக்க ஏற்ற ஒழுங்­குகள் செய்­யப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் ஆணைக்­கு­ழு­வினர் தெரி­வித்­துள்­ளனர்.

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் இந்த அமர்­வுடன் காணாமல் போனோர் தொடர்­பான சகல முறைப்­பா­டு­க­ளையும் நிறைவு செய்­வ­தற்கு தமது ஆணைக்­குழு முயற்­சிப்­ப­தா­கவும் அவர் கூறினார். வழ­மை­யான தமது விசா­ர­ணையில் நாளொன்­றுக்கு 60 பேரின் விசா­ரணை மனுக்கள் விசா­ரிக்­கப்­பட்டு வந்­த­தா­கவும் ஆனால் இம்­முறை நாளொன்­றுக்கு 120 பேர் என்ற அடிப்­ப­டையில் விசா­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் ஆணைக்­கு­ழுவின் பேச்­சா­ள­ரொ­ருவர் தெரி­வித்தார்.

அதற்­கேற்­ற­படி ஆணைக்­கு­ழுவில் ஓய்வு பெற்ற மேல் நீதி­மன்ற நீதி­பதி டபிள்யூ.ஏ.தில­க­ரத்ன ரத்­னா­யக்க மற்றும் அமைச்சுக்களின் ஓய்வு பெற்ற செயலாளர் ஹேவாஹெற்றிகே சுமணபால ஆகிய இரு அங்கத்தவர்கள் மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதகவும் ஆணைக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.திருகொமலை மாவட்டத்தில் நடைபெறும் இரண்டாவது அமர்வுகள் இதுவாகும் கடந்த அமர்வை காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் எதிர்த்திருந்தனர்