நாடாளுமன்றத் தேர்தலால் பிற்போடப்படுகிறது க.பொ.த உயர்தரப் பரீட்சை
இலங்கையில் வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை ஆண்டுதோறும் ஓகஸ்ட் மாத முற்பகுதியில் இடம்பெறுவது வழக்கம். ஆனால், ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இந் தேர்வுகளைப் பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்கள், மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர்,க.பொத உயர்தரப் பரீட்சை குறித்த முடிவை கல்வி அமைச்சு அறிவிக்கும் என்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.