Breaking News

தமிழீழத்துக்கு முஸ்லிம்-சிங்கள இனவாதம் தீ மூட்டப்பட வேண்டும்- விமல்



வடக்கையும் கிழக்கையும் இணைக்கச் செய்வதற்கு, முஸ்லிம்களை சிங்களவர்களிடமிருந்து தூரமாக்க மேற்கொள்ளப்பட்ட சதியே, கடந்த அரசாங்கத்தில் ஏற்படுத்தப்பட்ட சிங்கள தீவிரவாத முஸ்லிம் எதிர்ப்பு செயற்பாடுகள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

நேற்று (9) நள்ளிரவு வரை தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

முஸ்லிம்களை சிங்களவர்களிடமிருந்து தூரமாக்கினால் அவர்கள் தமிழர்களுடன் கூட்டுச் சேர்வார்கள். இதனால், வடக்கு கிழக்கு இணைப்பை இலகுவாக்கலாம் என வெளிநாட்டு சக்திகள் திட்டமிட்டனர். அது தற்பொழுது நடைபெறுகின்றது. ரவுப் ஹக்கீம் சம்பந்தனுடன் இணைவதற்கு எடுக்கும் முயற்சி.

சாதாரண சிங்கள மக்களையும் முஸ்லிம்களையும் மோதவிட்டு சிங்கள இனவாதமொன்றை உருவாக்க வேண்டும். இதனால், தமிழீழ கனவை நனவாக்கிக் கொண்டு அரசியல் சக்திகளுக்கு இலகுவாகின்றது. இதுதான் உண்மையான நோக்கம். சிங்களவர்களை முஸ்லிம்கள் எதிரிகளாக கருதும் போது தமிழ் மொழிபேசும் நாங்கள் ஒன்று சேர்வோம் என்ற உந்துதல் ஏற்படுகின்றது. இதனை சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.