இலங்கையின் வட பகுதியில் ஐ.நா முன்னெடுக்கும் திட்டங்களுக்கு கனடா உதவி
வடக்கின் அபிவிருத்தி திட்டங்களுக்கு கனடா உதவியளிக்கவுள்ளதாக, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் கொழும்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
கனடாவின் உயர்ஸ்தானிகர் செல்லி விட்டிங் உட்பட்ட குழுவினர், வடக்கின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.
இந்தநிலையில் உணவு மற்றும் விவசாயம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்திதிட்டம் ஆகியவற்றின் திட்டங்களுக்கு கனேடிய அரசாங்கம் 6 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளது.
இந்த நிதியுதவின் கீழ் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
இலங்கையில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் மேற்கொண்டு வரும் உதவி நடவடிக்கைகளுக்கு நிதியுதவி தரும் மூன்றாவது நன்கொடையாளராக கனடா விளங்குகிறது.








