Breaking News

சிங்களவர்களை ஆள அல்ல கௌரவமாக வாழத்தான் கேட்கிறோம் – சார்ள்ஸ் எம்.பி



இந்த புதிய அரசாங்கம் ஒன்றை விளங்க வேண்டும் எங்களுடைய மக்கள் சிங்கள மக்களை ஆளுகின்ற உரிமையை கேட்கவில்லை மாறாக எங்களை நாங்களே ஆளுகின்ற கௌரவமான உரிமையைத்தான் கேட்கின்றோம் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிடும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் மூலம் தமிழ் மக்களும் இணைந்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்தார்கள், மக்கள் தெரிவு செய்யும்போது அவர்களினுடைய மனங்களிலிருந்த விருப்பம் இப்பொழுது இல்லை, மஹிந்தவின் ஆட்சியில் அனுபவித்த அந்த கொடூரமான ஏகாதிபத்திய சிந்தனை கொண்ட அந்த செயல் வடிவங்களிலிருந்து தப்பிப்பதற்காக தமிழ் மக்களும் இணைந்து இந்த புதிய அரசாங்கத்தை அமைத்தார்கள்.

இந்த அரசாங்கத்தை அமைத்த ஆரம்பத்தில் ஓரளவு சந்தோசமாக இருந்தாலும் தற்பொழுது மஹிந்தவும் மைத்திரியும் ஒன்றுதான் என்ற நிலைப்பாட்டுக்கு இந்த அரசாங்கமும் நடந்துகொள்கின்ற முறை மக்கள் மத்தியில் வேதனையை தோற்றுவித்திருக்கின்றது.

இந்த புதிய அரசாங்கம் ஒன்றை விளங்க வேண்டும் எங்களுடைய மக்கள் சிங்கள மக்களை ஆளுகின்ற உரிமையை கேட்கவில்லை மாறாக எங்களை நாங்களே ஆளுகின்ற உரிமையைத்தான் கேட்கின்றோம்,

எங்களுக்காக முன்னாள் ஆயுதமேந்திய தலைவர்களோ, ஜனநாயக வழியில் போராடிய தலைவர்களோ எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கையையோ சிங்கள மக்களையோ பௌத்த மதத்தையோ ஆழ வேண்டும் என்று கேட்கவுமில்லை போராடவுமில்லை.

எங்களுடைய மக்கள் வடகிழக்கு இணைந்த பிரதேசத்தில் கௌரவமாக வாழவேண்டும் என்றே கேட்கின்றோம். நாம் சகல உரித்துடைய இலங்கை பிரைஜையாக எங்களுடைய மண்ணில் நாங்கள் வாழவேண்டுமென்றுதான் முன்னைய தலைவர்களும் கேட்டார்கள் இப்போது நாங்களும்
கேட்கிறோம்.

மே 18ம் திகதி உலகத்திலுள்ள அனைத்து தமிழர்களினுடைய மனங்களிலும் அளிக்க முடியாத வடுக்களை சுமந்த நாளாகும் அனைத்து தமிழர்களும் அந்த நாளை துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டும் அந்த நாள் தமிழர்களினுடைய ஆயுதப்போராட்டம் மௌனித்த நாள்.

இன அழிப்பு நடந்தேறி 8வது வருடத்தை எட்டி இருக்கின்றோம் ஆனால் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த அரசியல்வாதிகளால் இன்னும் தமிழர்கள் நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கிராறாக்கள். ஒவ்வொரு துறைசார்ந்து வாழ்வாதாரம் தொடர்பான அனைத்து விடையங்களிலும், எம்முடைய மக்கள் இரண்டாம் தர பிரஜையாகவே கணிக்கப்படுகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்