தனித்து ஆட்சியமைக்க சந்தர்ப்பம் வழங்குங்கள்.!
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்பதால் ஆட்சியமைப்பதற்கு சந்தர்ப்பம் தாரு ங்கள் என ஐ.ம.சு.வின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் நேற்றிரவு கேசரியிடம் கருத்து வெளியிட்ட அமை ச்சர் மஹிந்த அமரவீர, சுதந்திரக் கட்சியினதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் தீர்மானத்திற்கு அமையவே இந்த முடிவு எடுக்கப்ப ட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னர் நல்லாட்சி அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையையடுத்தே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறது. ஏற்கனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி வகிக்கும் அரசாங்கத்தில் தாம் அங்கம் வகிக்கப் போவதில்லை என சுதந்திரக் கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால் ஐக்கிய தேசி யக் கட்சியினர் பிரதமர் பதவியில் ரணில் விக்ரமசிங்க நீடிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
இந் நிலையில் தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொட ர்ந்து கொண்டிருக்கின்றது.
குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரும் இரண்டு பக்கங்களில் இருந்து கொண்டு தனித்து ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையிலேயே ஐ.ம.சு.வின் செயலாளர் மஹிந்த அமரவீர தனித்து ஆட்சியமைக்க சந்தர்ப்பம் தருமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரி க்கை விடுத்துள்ளார்.