நேற்றைய தினம் 649 பேருக்கு கொரோனா- மூவர் உயிரிழப்பு! - விபரம் உள்ளே
இவர்களுள் 129 பேர் சிறைச்சாலைக் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
166 பேர் பேலியகொட கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மூவரின் மரணம் இன்று மாலை உறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்கமைவாக மரண எண்ணிக்கை 140ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று மாலை அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கொரோனா 19 வைரசு தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மூவரின் (03) மரணம் ,டம் பெற்றிருப்பதாக சற்று முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் , ,தற்கமைவாக ,லங்கையில் பதிவான கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 140ஆகும்.
01. கொட்டே பிரதேசத்தைச் சேர்ந்த 98 வயதான ஆண் நபர். கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என ,னங்காணப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அந்த வைத்தியசாலையில் 2020 டிசம்பர் மாதம் 06ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் தொற்று நிமோனியா நிலையாகும்.
02. காஹதுட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான ஆண் நபர். ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் 2020 டிசம்பர் மாதம் 05ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் சிறுநீரக செயலிழப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
03. மக்கோன பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான ஆண் நபர். ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த வேளையில் 2020 டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்று நிமோனியா நிலை ஆகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27ஆயிரத்து 877ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து ,ன்று 370 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். ,துவரை 20 ஆயிரத்து 460 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்நி.லையில்,இன்னும் ஏழாயிரத்து 273 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்