எனக்கும் பிக்பாஸ் பாலாஜிக்கும் ஒரு உறவு இருந்துச்சு..ஆனா அதுக்கப்புறம்? உண்மையை உடைத்த யாஷிகா!
விஜய் டிவி நடத்திவரும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விட்டார் பாலாஜி. ஆரம்பத்தில் தலைக்கணம் பிடித்தவராக காட்டப்பட்டாலும் கடந்த சில வாரங்களாக அவர் மீது ரசிகர்களுக்கு ஒரு கரிசனம் ஏற்பட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள பாலாஜி ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான கனெக்சன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என்பது பலருக்கும் தெரியாது. அதில் நடிகை யாஷிகாவுடன் அவர் கலந்து கொண்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.
யாஷிகா மற்றும் பாலாஜி இருவருமே மாடலிங் துறையை சேர்ந்தவர்கள். மாடலிங் துறையில் இருப்பவர்களுக்கு பார்ட்டி என்பது சாதாரண விஷயம். அதேபோல் மாடலிங் துறையில் இருவருக்குள்ளும் கசமுசா இருக்கிறது என்று கிளப்பி விட்டு அந்த சூட்டில் குளிர்காய்பவர்கள் ஏராளம் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து யாஷிகாவுக்கும் பாலாஜிக்கும் ஏற்கனவே பழக்கம் இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. பலரும் பலவிதமாக இருவரைப் பற்றியும் பேசி வந்த நிலையில் தற்போது யாஷிகா முதல் முறையாக பாலாஜிக்கும் தனக்கும் என்ன உறவு என்பதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
யாஷிகாவும் பாலாஜியும் ஒரு காலத்தில் நட்புறவில் இருந்தார்களாம். அப்போது பாலாஜி தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து குடித்து விட்டு காரில் சென்று விபத்தை ஏற்படுத்தி விட்டாராம். அப்போது உடனடியாக யாஷிகா மற்றும் அவரது குழுவினருக்கு போன் பண்ணி தங்களை காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டாராம்.
இதனை அறிந்து உடனடியாக அங்கேயே வந்த யாஷிகாவை பார்த்து மீடியா துறையினர், யாஷிகாதான் குடித்துவிட்டு அந்த விபத்தை ஏற்படுத்தியது போல் சித்தரித்து விட்டார்களாம். அந்த பிரச்சனைக்கு பிறகு பாலாஜி யாஷிகாவிடம் மன்னிப்பு கூட கேட்க வில்லையாம்.
இதனால் பாலாஜி மீது யாஷிகாவுக்கு சிறு வருத்தம் இருந்ததாகவும் அதன் பிறகு பாலாஜி மற்றும் யாஷிகா பேசுவதை தவிர்த்து கொண்டதாகவும் யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.