அந்த நைட்டியை நான் தான் வாங்கி கொடுத்தேன்: விஜே சித்ரா மரணம் குறித்து இயக்குனர்!
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 9ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்த போது சின்னத்திரை மட்டுமின்றி பெரிய திரையும் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும் அவர் நைட்டியுடன் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது தற்கொலைக்கு காரணம் அவரது கணவர் ஹேமந்த் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சித்ரா முதன்முதலாக நடித்த திரைப்படம் ’கால்ஸ்’. இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆன நிலையில் அந்த படத்தின் இயக்குனர் சபரிஸ் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில் சித்ரா தற்கொலை செய்து கொண்ட போது அணிந்திருந்த நைட்டி நான் தான் என்னுடைய படத்திற்காக வாங்கி கொடுத்தேன் என்றும் அந்த நைட்டியின் பிங்க் கலர் அவருக்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதி நான் வாங்கினேன் என்றும் ஆனால் அதே நைட்டியில்தான் அவர் இறந்து கிடந்தார் என்ற தகவலை நான் தொலைக்காட்சியில் பார்த்த போது அதிர்ச்சி அடைந்தேன் என்றும் இந்த செய்தியை முதன்முதலில் அறிந்ததும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் சித்ரா மிகவும் சுறுசுறுப்பாக இருப்பவர் என்றும் அவரிடம் சோர்வு என்பதே பார்க்க முடியாது என்றும் சாதாரணமாக இருப்பவர்கள் கூட அவர் அருகில் இருந்தால் கலகலப்பாக மாறி விடுவார்கள் என்றும் அந்த அளவுக்கு இருக்கும் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதை நம்ப முடியவில்லை என்றும் அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.