கப்பலில் கனடா சென்றவர்களின் நிலை வெளிப்படுத்தியது அல்யசீரா (காணொளி) - THAMILKINGDOM கப்பலில் கனடா சென்றவர்களின் நிலை வெளிப்படுத்தியது அல்யசீரா (காணொளி) - THAMILKINGDOM
 • Latest News

  கப்பலில் கனடா சென்றவர்களின் நிலை வெளிப்படுத்தியது அல்யசீரா (காணொளி)


  போருக்குப் பின்னர் இலங்கையிலிருந்து பிரிட்டிஸ்
  கொலம்பியா வழியாக கனடாவைச் சென்றடைந்த ‘எம்வீ சன் சீ’ கப்பலில் சென்ற புகலிடக் கோரிக்கையாளர்களில் பெருமளவானவர்கள் இன்னமும் அகதி அந்தஸ்தினைப் பெறுவதில் தொடர்ந்தும் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.

  அகதிகள் சென்றடைந்த காலப் பகுதியில் அவர்கள் தொடர்பில் பெருமளவு முக்கியத்துவம் கொடுத்த ஊடகங்கள் காலப் போக்கில் அவர்கள் தொடர்பில் கண்டுகொள்ளாத நிலையே காணப்படுகின்றது.

  இவ்வாறு பயணம் செய்த ஒரு இளைஞன்  பயணத்தின்போது கப்பல் நிர்வாகிகளால் இதில் பயணம் செய்யும் ஒரு குழுவிற்கு தலைவராக கையொப்பமிடும்படி பணிக்கப்பட்டதாகவும் அந்த ஆவணம் தாய் மொழியிலிருந்ததாகவும்.

  அதில் ஒப்பம் வாங்கியதாகவும்,ஆனால் அதன் பொருள் இந்த கப்பலிற்கு தான்தான் நிர்வாகி என்றவாறிருந்ததாகவும் அதனால் தனது கணவன் தற்போது சிறையிலிருப்பதாகவும் தெரிவிக்கிறார். இவ்வாறு பொக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகவும் தெரிவித்தார் அவரின் மனைவி.

  இன்னொருவரான சுரேன் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் ஊடகவியலாளராக கடமையாற்றியவர் இறுதியுத்தத்தில் கடுமையாக காயமடைந்திருக்கிறார்,நடைபெற்ற இறுதி போரின் சாட்சியங்களுடன் இருக்கின்றார்.


  இருந்தபோதும் சகல ஆதாரங்களும் இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாகவும் இருப்பதாக கூறும் இவர் அங்குகடமையாற்றியமையால் இவர் விடுதலைப்புலிகளின் நிகழ்ச்சிநிரலில் இயங்கலாம் எனத் தெரிவித்து நாடுகடத்தலை எதிர்நோக்கியிருப்பதாகவும் காண்பிக்கப்படுகின்றது.

  இந்த நிலையில் அல்ஜசீரா ஊடகம் அந்த அகதிகளின் இன்றைய நிலை தொடர்பிலும் ஈழத்தில் இறுதிப்போர் தொடர்பிலும் அகதிகள் புலம்பெயர்வதற்கான சூழல் தொடர்பிலும் ஆவணப் படம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: கப்பலில் கனடா சென்றவர்களின் நிலை வெளிப்படுத்தியது அல்யசீரா (காணொளி) Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top