மச்ச சாஸ்திரம் உங்களுக்கு எப்படி ? - THAMILKINGDOM மச்ச சாஸ்திரம் உங்களுக்கு எப்படி ? - THAMILKINGDOM

 • Latest News

  மச்ச சாஸ்திரம் உங்களுக்கு எப்படி ?


  சாஸ்திர, சம்பிரதாயங்கள் என்பது நம்
  பாரத நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு ஒரு வழிமுறை வைத்திருக்கிறார்கள்.

  இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அதற்கு சாஸ்திர, சம்பிரதாயம் என்று வைத்திருக்கின்றனர். ஆய கலைகள் 64&ல் ஜோதிட சாஸ்திரம் முக்கியமானது. ஜோதிடக் கலை ஒரு மரம் போன்றது. அதில் இருந்து பல சாஸ்திரங்கள் பல்வேறு கிளைகளாக பிரிந்துள்ளன.

  அதன் ஒரு கிளையாக விளங்குவது அங்க லட்சண சாஸ்திரம். நம் அங்கம், அதாவது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம்.

  பெரும்பாலான பலன்கள் ஒத்துப்போவதை நடைமுறையில் காண்கிறோம். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை வரும்போது ‘அவன் மச்சக்காரன்’ என்பார்கள். பிறக்கும்போதே மச்சம் இருக்கும். நடுவே தோன்றுவதும் உண்டு.

  ஆனால் இது அபூர்வமான அமைப்பாகும். பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது.

  இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களை கொடுக்கும். இந்த பலன்கள் ஆண், பெண் என்று தனித்தனியாக வெவ்வேறு யோகங்கள் தரவல்லது.

  ஆண்களுக்கான மச்ச பலன்

  புருவங்களுக்கு மத்தியில் & நீண்ட ஆயுள்நெற்றியின் வலது புறம் & தனயோகம்வலது புருவம் & மனைவியால் யோகம்வலது பொட்டு (நெற்றி) & திடீர் அதிர்ஷ்டம்வலது கண் & நண்பர்களால் உயர்வுவலது கண் வெண்படலம் & புகழ், ஆன்மீக நாட்டம்இடது புருவம் & ஏற்ற, இறக்கம், செலவாளிமூக்கின் மேல் & சுகபோக வாழ்க்கைமூக்கின் வலதுபுறம் & நினைத்ததை அடையும் அம்சம்மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண்களால் அவமானம்மூக்கின் நுனி & ஆவணம், கர்வம், பொறாமைமேல், கீழ் உதடுகள் & அலட்சியம், காதல் வயப்படுதல்மேவாய் (உதடுகளுக்கு மேல்) & செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம்வலது கன்னம் & வசீகரம், தயாள குணம்இடது கன்னம் & ஏற்றத்தாழ்வுவலது காது நுனி & சில கண்டங்கள் வரலாம்இடது காது நுனி & தகாத சேர்க்கை, அவமானம்காதுகளின் உள்ளே & பேச்சாற்றல், திடீர் யோகம்தொண்டை & திருமணத்துக்கு பிறகு யோகம்கழுத்தின் வலதுபுறம் & சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கைஇடது மார்பு & ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார்வலது மார்பு & பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்வயிறு & பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசைஅடிவயிறு & திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கைபுட்டம் & அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு

  பெண்களுக்கான மச்ச பலன்

  நெற்றி நடுவே & புகழ், பதவி, அந்தஸ்துநெற்றி வலதுபுறம் & தைரியம், பணிவு இல்லாத போக்குநெற்றி இடதுபுறம் & அற்ப குணம், டென்ஷன், முன்கோபிமூக்கின் மேல் & செயல்திறன், பொறுமைசாலிமூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண்களால் அவமானம்மூக்கின் நுனி & வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்மேல், கீழ் உதடுகள் & ஒழுக்கம், உயர்ந்த குணம்மேல் வாய் பகுதி & அமைதி, அன்பான கணவர்இடது கன்னம் & வசீகரம், விரும்பியதை அடையும் போக்குவலது கன்னம் & படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலைவலது கழுத்து & பிள்ளைகளால் யோகம்நாக்கு & வாக்கு பலிதம், கலைஞானம்கண்கள் & கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்இடது தோள் & சொத்து சேர்க்கை, தயாள குணம்தலை & பேராசை, பொறாமை குணம்தொப்புளுக்கு மேல் & யோகமான வாழ்க்கைதொப்புளுக்கு கீழ் & மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்தொப்புள் & ஆடம்பரம், படாடோபம்வயிறு & நல்ல குணம், நிறைவான வாழ்க்கைஅடிவயிறு & ராஜயோக அம்சம், உயர்பதவிகள்இடது தொடை & தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்வலது தொடை & ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமைபுட்டங்கள் & சுகபோக வாழ்க்கை, எதையும் சாதிக்கும் வல்லமை
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மச்ச சாஸ்திரம் உங்களுக்கு எப்படி ? Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top