Breaking News

புலிப்பார்வை திரைப்பட குழு தொடர்பில் அதிரவைக்கும் தகவல்கள்(காணொளி)


புலிப்பார்வை திரைப்படம் தெடர்பாக
ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருக்கின்ற வேளையில் புலிப்பார்வை படக்குழுவின் உண்மை முகங்களும் திரைப்படத்தின் பின்னணியும் அதிரவைக்கும் ஆதாரத்துடன் கிடைத்துள்ளது.

இந்த திரைப்படத்தில் மிகவும் சிறிய வயதுடைய சிறுவர்கள் பயிற்சி எடுப்பது போன்ற காட்சிகளும் அந்த சிறுவர்களுள் நிராயுதபாணியாக சரணடைந்து சிங்களப்பேரினவாதிகளால் படுகொலைசெய்யப்பட்ட தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் இணைந்து பயிற்சி எடுப்பதுபோன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இன்னொரு காட்சியில் மிகவும் சிரமமான பயிற்சிகளை பாலச்சந்திரன் எடுப்பதுபோலவும் கைத்துப்பாக்கியில் சுடுவது போன்றதும் கனரக துப்பாக்கியை வைத்திருப்பது போன்ற காட்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பட வெளியீட்டுக்கு பேரம் பேசல்களும் நடைபெற்றதா? 

படம் வெளியாக எந்தவித தடையும்இருக்கக்கூடாது என்பதற்காக தனது நண்பரான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கதையை சொல்லி அனுமதி பெற்றுள்ளாராம் இயக்குனர் பிரவீன்காந்த். இது தொடர்பில் நாம் தமிழர் தோழர்களும் கட்சியின் தலைவர் திரு சீமான் அவர்களும் தமது நிலைப்பாடுகளை வெளிப்படையாக வெளியிடவேண்டும்.

இன்னும் தமிழ் தேசிய உணார்வாளர்களான வைகோ, திருமாவளவன் போன்றவர்களிடமும் இப்படத்தைப் பற்றிய விவரங்களை பேசி அவர்களிடமம் ஒப்புதல் பெறப்பட்டதாகவும் தகவல்.

வழமையாக ஈழம் தொடர்பில் வாய்திறந்தாலே தடைசெய்யும் சென்சர் போட் இப்படத்துக்கு ஒப்புதல் வழங்குவதற்கு சில நிபந்தனைகளை விதித்திருந்ததா என்ற கேள்வி எழுகின்றது.

இவ்வாறான விட்டுக்கொடுப்புகளை செய்ததால் இந்திய நாட்டுக்கு எதிராக எந்தக் கருத்தையும் சொல்லாததால், சென்சார் வாங்குவது சுலபமாக இருந்ததாகவும் சென்சார் உருப்பினர்கள் படத்தைப் பாராட்டினார்கள் என்று இயக்குனர் தெரிவித்த கருத்தும் நோக்கத்தக்கது. ’வீ லவ் இந்தியா’ என்ற கருத்தையே இப்படம் பேசுவதாக மேலும் அவர் கூறினார்.

யார் இந்த பாரிவேந்தன் ? (கீழே அவரது உரையை கேளுங்கள்)

பிரவீன் காந்த்தின் இயக்கத்தில் பாரி வேந்தர் வழங்க வேந்தர் மூவீஸ் மதன் தயாரிக்க, இந்த பாரிவேந்தனின் மகன்தான் இந்த மதன்(தயாரிப்பாளர்) ஒரு குடும்ப நிர்வாகத்தை வைத்து புலிகளின் பெயரை படத்திற்கு சூட்டி தமிழர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதோடு பாலச்சந்திரனை ஒரு பயங்கரவாதியாக சித்தரிப்பதே இவர்களின் உள்நோக்கம்.

பயங்கரவாதியாக பயிர்ச்சி பெற வைத்து அவனை ஆயுதத்துடன் கைது செய்த இராணுவம் அவனை போர்களத்தில் ஆயுதத்துடன் கைது செய்து பின்னர் சுட்டு கொன்றமை ஓர் பயங்கரவாதியை அழிப்பதுபோல் சித்தரித்து சிறீலங்காவின்மானத்தை காப்பாற்ற முயல்கிறார்களா?

பாரிவேந்தனின் உரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும், விடுதலைப்புலிகள் மக்களை மனித கேடயமாக பயன்படுத்தினார்களாம்

 


முன்னைய பதிவு

விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு விருப்பத்துடன் இணையும் வயதில் குறைந்த சிறுவர்களை புலிகளே அவர்களால் பாராமரிக்கப்பட்டுவந்த செஞ்சோலை,காந்தரூபன் அறிவுச்சோலை போன்ற இல்லங்களுக்கு அனுப்பி வைத்து அவர்களுக்கு கல்வி அறிவு போதிக்கப்பட்டு விரும்பினால் அவர்கள் குறிப்பிட்ட வயதை அடையும் போது இயக்கத்தில் இணையலாம் என்பது வழமை.

ஐ.நா மற்றும் சர்வதேச நாடுகள் அப்பாவிச்ச சிறுவனான பாலச்சந்திரனை நிராயதபாணியாக கைது செய்து சுட்டுக்கொன்றமை சர்வதேச போர்க்குற்ற மீறல் எனத் தெரிவித்து அதற்கான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுவரும் வேளை.


அந்த போராட்டத்தை கொச்சைப்படுத்துவதுபோல அந்த பாலகனையும் கைத் துப்பாக்கியும் விடுதலைப்புலிகளின் வரிச்சீருடையுடன் கைதுசெய்து அழைத்துவருவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளமை மிகவும் ஆச்சரியப்பட வைப்பதோடு இறுதி இனவழிப்பு கொடுமையினை தமிழ்நாட்டிற்கு திரிபுபடுத்தி வைளியிட முயற்சிக்கிறார்களா என எண்ணத்தோன்றுகின்றது.

அத்தோடு அதில் தோன்றும் போராளிகளில் சீருடை மற்றும் படையினரின் சீருடைகள் நியத்தில் அவர்கள் பயன்டுத்தும் சீருடைகளுடன் வேறுபடுகின்றன.

ஒரு விடுதலைப்போராட்டத்தின் வரலாற்று நிகழ்வுகளை மையப்படுத்தியதாக கூறிக்கொண்டு யதார்த்தத்திற்கு புறம்பான வகையில் நிகழ்வுகளை சித்தரிப்பது மேலும் ஈழத்தமிழர்களை வேதனைப்படுத்துவதாக அமைவதோடு, போராட்டம் தொடர்பில் தவறான புரிதல்களையும் ஏற்படுத்திவிடும்.

எனவே இது தொடர்பாக தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவு அமைப்புகள்,ஆர்வலர்கள் விரைந்து செயற்பட்டு புலிப்பார்வை திரைப்படத்தின் ஆதாரமற்ற விடயங்களை நீக்குவதோடு உண்மையான போராட்ட நிகழ்வுகளை மையப்படுத்தும் காட்சிகளை தத்துருவமாக வெளிவருவதற்கு ஒத்துழைப்பும் ஆலோசனையும் வழங்குவது காலத்தின் கட்டாயமாகும்.

இதனை தயாரிப்பாளர்கள் ஏற்காத பட்சத்தில் இந்த திரைப்படம் மூலமாக போராட்டத்தை சிதைப்பதற்கும் அதன் உண்மைத்தன்மையை மூடிமறைப்பதற்கும் வேறு யாராவது  பின்னணியில் செயற்படுகின்றார்களா என்பதை அனைவரும் ஆராய வேண்டும்.

இது தொடர்பான கருத்துக்களை வாசகர்களும் கீழ்க்குறிப்பிடும் முகநூல் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் இந்த திரைப்படத்தை ஓர் வரலாற்று ஆவணமாக தயாரிப்பதற்கு உதவும் என நம்புகின்றோம்.
https://www.facebook.com/pulipaarvai/info