ஒரே மரத்தில் 40 வகையான பழங்கள்-காணொளி,புகைப்படங்கள் - THAMILKINGDOM ஒரே மரத்தில் 40 வகையான பழங்கள்-காணொளி,புகைப்படங்கள் - THAMILKINGDOM
 • Latest News

  ஒரே மரத்தில் 40 வகையான பழங்கள்-காணொளி,புகைப்படங்கள்


  ஒரே மரத்தில் 40 வகையான பழங்களை உருவாக்கி
  அமெரிக்க விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள சைரகஸ் பல்கலைக்கழகத்தில் சாம் வான் அகேன் தாவரவியல் பேராசிரியராக உள்ளார்.

  விஞ்ஞானியான சாம் வான் அகேன் மரத்தில் பல்வேறு வகையான பழங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த முயற்சி எப்படி என்றால் “ஒட்டு மாங்கனி’ என்ற முறையை பயன்படுத்தப்படுத்தி புளிப்பான மரத்தின் தண்டில், இனிப்பான மாம்பழத்தின் தண்டை ஒட்ட வைத்து சிறிது நாளில் புளிப்பான மாம்பழத்தை இனிப்பாக மாற்றுவர் அதேபோல்தான் இவரும் ஒரே மரத்தில் பல்வேறு மரங்களின் தண்டுகளை படிப்படியாக இணைத்தும், சில மாற்றங்களை செய்தும் வளர்த்தார்.  தற்போது அந்த மரத்தில் 40 வகையான பழங்கள் காய்த்து தொங்குன்றன. இந்த காட்சி அங்குள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அழகான அந்த மரம் அனைவரையும் அருகில் ஈர்க்கும் வண்ணம் காட்சியளிக்கிறது. இதுகுறித்து சாம் வான் அகேன் கூறுகையில்,என்னுடைய ஆராய்ச்சியின் பயனாக,

  அம்மரத்தை குளிர்காலத்தில் பார்ப்பவர்களுக்கு செம்பழுப்பு, ஊதா மற்றும் வெள்ளை என வானவில்லை போல் காட்சியளிக்கும் என்றும், கோடை காலத்தில் அம்மரம் பல்சுவை கொண்ட பழங்களை வழங்குவதாகவும், இதுபோன்ற தாவர ஆராய்ச்சியை தான் இனி அதிகமாக மேற்கொள்ளவுள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஒரே மரத்தில் 40 வகையான பழங்கள்-காணொளி,புகைப்படங்கள் Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top