Breaking News

அமைச்சரின் கிழிந்த பாதணியை விற்கவும் மகிந்த நிபுணர் குழு நியமனம்


பல­மிக்க நாடு ஒன்றின் தலை­வரை சந்­தித்து கைலா­கு­கொ­டுக்­கப்­போகும்
அளப்­ப­ரிய ஆர்வம் அமைச்­ச­ருக்கு. கைலாகு கொடுக்­கும்­போது அணி­ வ­தற்­கான உடை தயா­ரா­கி­விட்­டது. ஆனால் அதற்­கேற்ற பாதணி தெரிவு செய்­வ­திலும் மிகவும் அக்­கறை. அணி­யப்­போ­கின்ற உடை வெள்ளை நிறம் என்­பதால் பாத­ணியும் வெள்ளை நிறத்தில் அமை­ய­வேண்டும் என்­பதில் அவர் உறு­தி­யாக இருந்தார். 
இதனால் வீட்டில் சில­காலம் பயன்­ப­டுத்­தப்­ப­டாமல் இருந்த வெள்ளை நிற பாத­ணி­யை தூசு தட்டி அணிந்­து­கொள்­கிறார். குறித்த உலகப் பலம்­வாய்ந்த நாட்டின் தலை­வரை சந்­திப்­ப­தற்­கான நேரமும் நெருங்­கி­விட்­டது. அமைச்சர் மிகவும் நேர்த்­தி­யான முறையில் உடை அணிந்து பாத­ணி­யையும் அணிந்து ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கு செல்­கின்றார். அங்­குதான் அவ­ருக்கு அந்த அதிர்ச்சி காத்­தி­ருந்­தது. அந்த ஒரு கணம் அவர் உலக அளவில் பிர­ப­ல­ம­டைந்­து­விட்டார்.
உலகில் பலர் பல வழி­களில் ஒரே இரவில் உலகப் பிர­ப­ல­ம­டை­வ­துண்டு. சில சந்­தர்ப்­பங்­களில் இடம்­பெறும் நிகழ்­வுகள் சிலரை ஒரு கணத்தில் திடீ­ரென பிர­ப­லத்தின் உச்­சிக்கே கொண்டு சென்­று­விடும். இவ்­வா­றான நிலை­மை­களை உலகில் நாம் பல நிலை­களில் கண்­டுள்ளோம்.
அவ்­வா­றா­ன­தொரு சுவாரஷ்­ய­மான சம்­பவம் எமது நாட்­டிலும் கடந்­த­வாரம் நடந்­து­விட்­டது. ஆம். அடி­க­ழன்ற பாதணி வடி­வத்தில் மிக முக்­கிய அமைச்சர் ஒருவர் ஒரே இரவில் உலகப் பிர­பலம் அடைந்­து­விட்டார். உலகின் பிர­பல நாடுகள் பிர­பல நிறு­வ­னங்கள் அவரை தொடர்­பு­கொண்ட வண்ணம் உள்­ளன. அடி­க­ழன்ற பாத­ணி­களை 1000 மில்­லியன் டொலர்­க­ளுக்கு மேல் செலுத்தி கொள்­வ­னவு செய்­வ­தற்கு நாடுகள் முன்­வந்­துள்­ளதாக தெரிவிக்கப்படுகிறது. கலை கலா­சார அமைச்சர் டி.பி. ஏக்­க­நா­யக்­க­வுக்கு ஏற்­பட்ட அசெ­ள­க­ரியம் தற்­போது அவரை சர்­வ­தேச ரீதியில் பிர­ப­ல­மிக்க மனி­த­ராக மாற்­றி­விட்­டது. உலகின் கண் அவரின் பக்கம் தற்­போது உள்­ளது என்று கூறினால் அது மிகை­யா­காது.
அது­வொரு வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மிக்க சந்­தர்ப்பம். 28 வரு­டங்­களின் பின்னர் உலகின் பலம்­வாய்ந்த நாடான சீனாவின் ஜனா­தி­பதி இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த மிக முக்­கிய தரு­ண­மாக அது அமைந்­தது. அவரின் இலங்கை விஜ­யத்­தின்­போது ஜனா­தி­பதி செய­ல­கத்தில் அவ­ருக்கு செங்­கம்­பள வர­வேற்பும் அரச மரி­யா­தையும் வழங்­கப்­பட்­டது. அப்­போது இலங்­கையின் தெரிவு செய்­யப்­பட்ட சில அமைச்­சர்கள் ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கு வர­வ­ழைக்­கப்­பட்டு சீன ஜனா­தி­ப­திக்கு அறி­முகம் செய்து வைக்­கப்­பட்­டனர்.
இந்த சந்­தர்ப்­பத்தில் குறி­ப்பிட்ட சில அமைச்­சர்­களில் ஒருவர் அடி­க­ழன்ற பாத­ணி­யுடன் அவஸ்தைப் பட்­டுக்­கொண்­டி­ருந்­ததை யாரும் அந்த சந்­தர்ப்­பத்தில் அறிந்­தி­ருக்­க­வில்லை. ஆனால் குறித்த அமைச்­சரும் சமா­ளித்­துக்­கொண்­டே­யி­ருந்தார். (அவரும் எவ்­வ­ளவு நேரம்தான் சமா­ளிப்பார்) ஜனா­தி­பதி செய­ல­கத்தின் நுழை­வா­யி­லுக்கு செல்­லும்­போதே பாத­ணியின் அடிப்­பக்கம் கழன்­று­விட்­டது. 
அமைச்­சரும் சமா­ளித்­துக்­கொண்டே சீன ஜனா­தி­ப­திக்கும் கைலாகு கொடுத்­து­விட்டார். (அப்­பாடா ஒரு கட்­டத்தை தாண்­டி­விட்டோம் என்று அமைச்­ச­ருக்கு மகிழ்ச்­சி­யாக இருந்­தி­ருக்கும்) அதன் பின்னர் சீன தூதுக்­கு­ழுவின் பிர­தி­நிதி ஒரு­வ­ருடன் உடன்­ப­டிக்கை ஒன்றில் கைச்­சாத்­திடும் சந்­தர்ப்பம். அடி­க­ழன்ற பாத­ணி­யுடன் உடன்­ப­டிக்­கையிலும் அமைச்சர் கைச்­சாத்­திட்டார். யாரும் கண்­டி­ருக்­க­மாட்­டார்கள் என்று அமைச்சர் கரு­தி­யி­ருக்­கலாம். ஆனால் பாத­ணி­யி­லி­ருந்து அமைச்­சரின் பாதங்கள் வெளியே எட்­டிப்­பார்த்­ததை படப்­பி­டிப்பில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்த புகைப்­ப­டப்­பி­டிப்­பா­ளர்கள் அவ­தா­னித்­து­விட்­ட­துடன் புகைப்­படங்­களை எடுத்து வெளி­யிட்­டு­விட்­டனர். இந்த கணம்தான் நாங்கள் ஆரம்­பத்தில் கூறி­யவாறு அமைச்­சரை ஒரே இரவில் உலகப்பிர­ப­ல­மாக்­கி­யது. இனி அமைச்சர் எம்­முடன் அந்த நிகழ்வை பகிர்ந்­து­கொள்­கிறார்.
கேள்வி: அன்­றைய தினம் என்ன நடந்­தது?
பதில்: உலகின் மிகவும் பலம் வாய்ந்த நாடான சீனாவின் ஜனா­தி­பதி இலங்கை வந்­தி­ருந்தார். அவரை சந்­திப்­ப­தற்கு ஒரு சில அமைச்­சர்­க­ளுக்கே ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கு வரு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் எனக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டது. நானும் மிகவும் மகிழ்ச்­சி­யுடன் நிகழ்­வுக்கு தயா­ரா­கினேன். வெள்ளை நிற உடையை அணி­வது என்று தீர்­மா­னித்தேன். அதன்­படி வெள்ளை நிற உடைக்கு ஏற்ற பாத­ணி­­ தெரிவு செய்­ய­வேண்­டி­யேற்பட்­டது. அப்­போது வீட்டில் இருந்த வெள்ளை நிற பாத­ணி­யை அணிந்­து­கொண்டு ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கு புறப்­பட்டேன்.
ஜனா­தி­பதி செய­ல­கத்தின் நுழை­வா­யி­லுக்கு சென்­ற­போதே ஒரு பாத­ணியின் அடிப்­பக்கம் கழன்­று­விட்­டது. என்னால் ஒன்றும் செய்ய முடி­யாத நிலை ஏற்­பட்­டது. சமா­ளித்­துக்­கொண்டு சென்றேன். சீன ஜனா­தி­ப­திக்கு கைலாகும் கொடுத்தேன். பின்னர் சீன தூதுக்­கு­ழுவின் பிர­தி­நிதி ஒரு­வ­ருடன் இரண்டு நாட்டு ஜனா­தி­பதிகள் முன்­னி­லையில் உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திடும் நிகழ்வு வந்­தது. உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­தி­டும்­போது அடுத்த பாத­ணியின் அடிப்­பக்­கமும் கழன்­று­விட்­டது. நான் சமா­ளித்­துக்­கொண்டு கைச்­சாத்­திட்டேன். ஆனால் மேல் பகு­தி­யி­லி­ருந்து புகைப்­படம் எடுத்­துக்­கொண்­டி­ருந்த புகைப்­பட பிடிப்­பாளர் ஒரு­வரின் கம­ராவில் எனது பாதங்கள் சிக்­கி­விட்­டன. அவர்கள் அதனை வெளிப்­ப­டு­த்­தி­விட்­டனர். இதுதான் நடந்­தது.
கேள்வி: பாத­ணியை அணி­யும்­போது அவை கழன்­று­விடும் அபா­யத்தை நீங்கள் உண­ர­வில்­லையா?
பதில்: இல்லை.
கேள்வி: தற்­போ­தைய நிலைமை என்ன?
பதில்:வெளி­நாட்­டு­ஊ­ட­கங்கள் அதனை வெளிப்­ப­டுத்­திய பின்னர் உலகம் என்னை பார்க்க ஆரம்­பித்­து­விட்­டது. ஜேர்மன், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடு­களின் உலகப் பிர­பல நிறு­வ­னங்கள் என்னை தொடர்­பு­கொண்டு மிகப்­பெ­ரிய விலைக்கு எனது பாத­ணி­யைக் கேட்­கின்­றன. நான் இன்னும் ஒரு முடி­வுக்கும் வர­வில்லை.
கேள்வி: என்ன செய்­யப்­போ­கின்­றீர்கள்?
பதில்: மிகப்­பெ­ரிய விலைக்கு வந்தால் விற்­பனை செய்­யலாம். ஆனால் நான் ஒன்றும் செய்­ய­மாட்டேன். இது தொடர்பில் செயற்­ப­டு­வ­தற்­காக மூவர்­கொண்ட குழுவை நிய­மித்­துள்ளேன். பேரா­சி­ரியர் முதி­யன்ஸே திசா­நா­யக்க, நாடக தயா­ரிப்­பாளர் சுகத் ரோஹன மற்றும் கலா­சார பணிப்­பாளர் விஜித் கணு­கல ஆகி­யோரை நிய­மித்­துள்ளேன். அவர்கள் அது தொடர்­பான விட­யங்­களை ஆராய்ந்து உயர் விலைக்கு வந்தால் விற்­பனை செய்­வார்கள். அதில் வரும் பணத்­தைக்­கொண்டு வடமேல் மாகா­ணத்தில் வறிய பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு பாத­ணி­களை பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுப்பேன். இதுதான் எனது எண்ணம்.
கேள்வி: எவ்­வா­றான நிறு­வ­னங்கள் உங்­களை அணு­கின?
பதில்:உலகப் பிர­ப­ல­மான ஆப­ர­ணங்­களை சேக­ரிக்கும் நிறு­வ­னங்கள்.
கேள்வி: 1000 மில்­லியன் டொல­ருக்கு பாத­ணி­களை கேட்­ட­னரா?
பதில்: பெரிய விலைக்கு கேட்­டனர். தற்­போது மூவர் கொண்ட குழு நிய­மிக்­கப்­பட்­ட­மை­யினால் அவர்கள் இனி அதனை தீர்­மா­னிப்­பார்கள்.
கேள்வி: பாத­ணியின் அடி­க­ழன்ற அந்த சந்­தர்ப்பம் எவ்வாறு இருந்தது? அசெளகரியமாக இருந்ததா?
பதில்: இல்லை. நாங்கள் மண்ணில் காலடி வைத்து வாழ்ந்தவர்கள். குறிப்பாக நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். எனவே எனக்கு இது புதிய விடயமல்ல. பாதணி இல்லாமல் இருப்பது ஆச்சரியமான விடயமல்ல. நான் இது தொடர்பில் கவலையடையவில்லை. அசெளகரிய மடையவுமில்லை. எனது நிலை குறித்து பெருமையடைகின்றேன். உலகம் என்னை பார்க்கின்றது. 
கேள்வி: அரசாங்கம் ஏதாவது விளக்கம் கோரியதா?
பதில்: ஒரு விளக்கமும் என்னிடம் கோரவில்லை.
கேள்வி:சீனாவின் பக்கத்தில் ஏதாவது கூறப் பட்டதா?
பதில்: ஒன்றும் கூறவில்லை.