இனப்படுகொலை இராணுவத்தை ஆபிரிக்க குடியரசிற்கு அழைத்தது ஐ.நா - THAMILKINGDOM இனப்படுகொலை இராணுவத்தை ஆபிரிக்க குடியரசிற்கு அழைத்தது ஐ.நா - THAMILKINGDOM
 • Latest News

  இனப்படுகொலை இராணுவத்தை ஆபிரிக்க குடியரசிற்கு அழைத்தது ஐ.நா


  ஐக்­கிய நாடுகள் அமை­தி­காக்கும் படைக்கு ஒத்­து­ழைப்பு
  வழங்­கு­வ­தற்­காக இனப்படுகொலை இராணுவம் எனக் குற்றச்சாட்டிலுள்ள இலங்கை விமா­னப்­படையைச் சேந்த 17 அதி­கா­ரிகள் அடங்­கிய குழு­வொன்று எம்.ஐ.17 ஹெலி­கொப்டர் சகிதம் மத்­திய ஆபி­ரிக்க குடி­ய­ர­சுக்கு புறப்­படுச் சென்­றுள்­ள­து.
  இலங்கை விமா­னப்­ப­டையின் ஏற்­பாட்டில் விமா­னப்­ப­டைத்­த­லை­மை­ய­கத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் பாது­காப்பு அமைச்சின் பேச்­சாளர் பிரி­கே­டியர் ருவான்­வ­ணி­க­சூ­ரிய, விமானப் படையின் பதில் ஊடகப் பேச்­சாளர் வின்ங் கொமான்டர் பி.என்.டி.கொஸ்தா, உட்­பட முக்­கிய அதி­கா­ரிகள் பங்­கேற்­றி­ருந்­தனர்.
  அங்கு தொடர்ந்தும் விமா­னப்­படைத் தள­பதி உரை­யாற்­று­கையில்,
  சுமார் ஐந்து வரு­டங்­க­ளுக்கு முன்ன­தாக ஐக்­கிய நாடுகள் சபை­யா­னது அதன் அமை­திப்­ப­டையில் இலங்கை படைத்­த­ரப்­பி­ன­ரையும் உத­வி­களை வழங்­கு­மாறு கோரி­யி­ருந்­தது. இருப்­பினும் நாட்டில் காணப்­பட்ட அசா­தா­ரண நிலை­மை­யினால் அவ்­வா­றான செயற்­பாட்டை மேற்­கொள்­ள­மு­டி­யாது போனது. அதற்குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் இரா­ணுப்­ப­டை­யினர் ஐ.நா.படை­யி­ன­ருக்கு ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­கு­வ­தற்­காக சென்­றி­ருந்­தனர்.
  இந்­நி­லையில் முதற்­த­ட­வை­யாக இலங்­கையின் விமா­னப்­ப­டை­யினர் ஐக்­கிய நாடுகள் அமை­திப்­ப­டை­யி­ன­ருக்கு ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­கு­வ­தற்­காக மத்­திய ஆபி­ரிக்க குடி­ய­ர­சுக்கு புறப்­பட்டுச் சென்­றுள்­ளனர். நேற்று முன்­தினம் கட்­டு­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தின் ஊடாக 17விமா­னப்­படை அதி­கா­ரிகள் அடங்­கிய குழு­வினர் எம்.ஐ 17 ஹெலி­கொப்டர் சகிதம் புறப்­பட்­டுள்­ளனர். இக்­கு­ழுவில் விமா­னிகள், பொறி­யி­யலா­ளர்கள், மற்றும் ஏனைய துறை­சார்ந்த வல்­லு­நர்கள் உள்­ள­டங்­கி­யுள்­ளனர். இத்­துடன் அவர்­க­ளுக்­கான அனைத்து உப­க­ர­ணங்­களும் கப்பல் மூலம் அனுப்­பப்­பட்­டுள்­ளன.
  எமது நாட்டு படைத்­த­ரப்பின் செயற்­பாட்டு சாத­னைகள் சர்­வ­தேச மட்­டத்­திற்கு கொண்டு செல்­லப்­பட்டு நன்­ம­திப்பை பெறு­தற்கு உறு­து­ணை­யாக இருக்கும். அத்­துடன் இவ்­வாறு ஐ.நா.அமைதி காக்கும் படையில் பங்­கேற்கும் எமது விமா­னப்­படைக் குழா­மா­னது பிர­புக்­களின் பய­ணத்­திற்கு உத­வுதல், கரை­யோரக் கண்­கா­ணிப்பு, காயப்­பட்­ட­வர்­க­ளுக்­கான போக்­கு­வ­ரத்து, உணவு மற்றும் அத்­தி­யா­வ­சிய பொருள்­களை எடுத்துச் செல்லல், உள்­நாட்டு வான்­ப­ய­ணங்கள் ஆகிய பிரி­வு­களில் கட­மை­யாற்­ற­வுள்­ளனர். இவர்கள் சுமார் ஒரு­வ­ரு­டத்­திற்கு இக்­க­ட­மையில் இருப்­பார்கள்.
  அதே­நேரம் ஐக்­கிய நாடுகள் பாது­காப்புச் சட்­டத்தின் கீழே அமை­தி­காக்கும் படையில் செயற்படுவதற்காக மொத்தமாக 100 முதல் 150வரையிலான அதிகாரிகளும் மூன்று எம்.ஐ.17ஹெலிகொப்டர்களும் மற்றும் உபகரணங்களும் எம்மால் அனுப்பிவைப் பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இரண்டாவது கட்டமாக தென்சூடானுக்கு எம்.ஐ.17 ஹெலி கொப்டர் சகிதம் குழுவொன்று அனுப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது என்றார்.
  1
  2
  3
  6
  9
  10
  11
  26
  27
  37


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: இனப்படுகொலை இராணுவத்தை ஆபிரிக்க குடியரசிற்கு அழைத்தது ஐ.நா Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top