Breaking News

தமிழரசுக் கட்சியின் மாநாடும் த.தே.கூட்டமைப்பும் -வீரகேசரி


தமிழரசுக்கட்சியின் மாநாடும் தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பும் செல்­வ­ரட்னம் சிறி­தரன் மனித உரிமை மீறல்­க­ளுக்குப் பொறுப்பு கூற வேண்டும் மீள்­கு­டி­யேற்ற நட­வ­­டிக்­கைகள் பய­னுள்­ள­தாக மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.

தமிழ் மக்­களின் தாயகப் பிர­தே­சங்­களில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள இன­வி­கி­தா­சா­ரத்தை மாற்­றி­ய­மைப்­ப­தற்­கான அடக்­கு­முறை நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக நிறுத்­த­வேண்டும். இனப்­பி­ரச்­சி­னைக்கு சர்­வ­தேச பிர­சன்­னத்­துடன் கூடிய, ஆக்­க­பூர்­வ­மான குறு­கிய காலப் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட வேண்டும் என்­பதை இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் 15 ஆவது தேசிய மாநாடு முக்­கி­ய­மாக வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றது.

கட்­சியின் 15 ஆவது தேசிய மாநாடு என்­ப­தற்­கா­கவோ, என்­னவோ தெரி­ய­வில்லை, முக்­கி­ய­மான பல்­வேறு விட­யங்­களை உள்­ள­டக்­கி­ய­தாக 15 தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்தத் தீர்­மா­னங்கள் முதலில் பேரா­ளர்கள் மத்தியில் சமர்ப்­பிக்­கப்­பட்­ட­போது, காலத்­திற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து, அவைகள் திருத்­திய வடி­வத்தில் வெளி­யி­டப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

அன்­றாடப் பிரச்­சி­னை­யாகக் கரு­தப்­ப­டு­கின்ற இரா­ணுவ அடக்­கு­முறை, சிவில் வாழ்க்­கையில் இரா­ணு­வத்தின் தலை­யீடு, நிர்­வாகச் செயற்­பா­டு­களில் அவர்கள் மேற்­கொண்­டுள்ள ஆதிக்கம் என்­பவை மட்­டு­மல்­லாமல் பெண்­களும், இளை­ஞர்­களும் எதிர்­நோக்­கி­யுள்ள பாது­காப்­பற்ற நிலை­மைகள், அடா­வ­டித்­த­ன­மான திட்­ட­மிட்ட சிங்­க­ள­வர்­களின் குடி­யேற்றம்,

இரா­ணுவ குடி­யி­ருப்­புக்­களை ஏற்­ப­டுத்தும் நட­வ­டிக்கை என்­ப­வற்றை உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும் என்றும் மாநாட்டில் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. அது மட்­டு­மல்­லாமல், தமிழர் தாயகப் பிர­தே­சத்தின் இன விகி­தா­சா­ரத்தைத் தலை­கீ­ழாக மாற்­றி­ய­மைப்­பதன் ஊடாக, இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு அவ­சி­ய­மற்­றது என்ற யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள தமிழ் மக்­க­ளுக்குப் பாத­க­மான ஒரு நிலை­மையை இல்­லாமல் செய்ய வேண்டும் என்றும் கோரப்­பட்­டி­ருக்­கின்­றது.

இதனை எதிர்­வரும் டிசம்பர் மாதத்­திற்குள் செய்­யா­விட்டால், அடுத்த வருடம் ஜன­வரி முதல் பல இடங்­க­ளிலும் சாத்­வீகப் போராட்டம் வெடிக்கும் என்று தீர்­மா­னத்தின் ஊடாகத் தமி­ழ­ரசுக் கட்­சி­அ­ர­சாங்­கத்தை எச்­ச­ரிக்கை செய்­தி­ருக்­கின்­றது.

அதே­நேரம் நாட்டில் உள்ள அனைத்து தமிழ், முஸ்லிம் அர­சியல் கட்­சி­களும் அனைத்து முற்­போக்கு சக்­தி­களும் மட்­டு­மல்­லாமல், இந்­தியா உள்­ளிட்ட சர்­வ­தேச நாடு­களும் இந்தப் போராட்­டத்­திற்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்று மாநாட்டில் கோரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

வடக்­கிலும் கிழக்­கிலும் இன்று தமிழ் மக்­களின் வாழ்க்கை என்­பது பல்­வேறு அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கின்­றது. பாதிக்­கப்­பட்ட மக்கள் இந்த அச்­சு­றுத்­தல்கள், நெருக்­கு­தல்கள், அடக்­கு­மு­றை­க­ளுக்கு எதி­ராக முதலில் குரல் கொடுக்க வேண்டும்.

தமக்கு இழக்­கப்­ப­டு­கின்ற அநீ­திகள் குறித்து, ஆதா­ர­பூர்­வ­மான தக­வல்­களை வெளியில் கொண்டு வர வேண்டும். அது மட்­டு­மல்­லாமல், அவைகள் முறை­யாக – சட்ட வலு­வுள்ள ஆவ­ணங்­க­ளாக்­கப்­பட வேண்டும். ஒழுங்­க­மைக்­கப்­பட்ட ஒரு தொடர் நட­வ­டிக்­கை­யாக இது மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.

இத்­த­கைய ஒரு செயற்­பாட்டின் ஊடா­கத்தான் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு இடம்­பெ­யர்ந்­தி­ருந்து யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் சொந்த இடங்­க­ளுக்குத் திரும்­பி­யி­ருப்­ப­வர்­க­ளுக்கு, ஓர் இறை­மை­யுள்ள அரசு, மீள்­கு­டி­யேற்ற திட்­டத்தின் கீழ், முறை­யாகச் செய்ய வேண்­டிய மறு­வாழ்வு மற்றும் மறு­சீ­ர­மைப்புச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வில்லை, மாறாக அந்த மக்­களை அடக்கி ஒடுக்­கு­வ­தற்­கான செயற்­பா­டு­க­ளையே மேற்­கொண்டு வரு­கின்­றது என்­பதை உறு­தி­யாக நிலை­நி­றுத்த முடியும்.

அத்­த­கைய ஒரு நிலை­நி­றுத்­தலின் பின்­ன­ணி­யி­லேயே ஏனைய தரப்­பி­ன­ரி­னதும், இந்­தியா உள்­ளிட்ட சர்­வ­தே­சத்­தி­னதும் உத­வி­களை அந்­தந்த மட்­டங்­களில் உரிய சந்­தர்ப்­பங்­களில் கோரவும், கோரி பெறு­வ­தற்கும் முடி­யு­மாக இருக்கும்.

ஜன­வரி மாதத்தில் பல இடங்­க­ளிலும் போராட்­டமா? 

பல்­வேறு தலை­யீ­டுகள் கார­ண­மாக, அன்­றாட வாழ்க்­கை­யையே மக்கள் இன்று ஒரு போராட்­ட­மா­கவே நடத்த வேண்டி ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. அதே­நேரம், காணாமல் போயி­ருப்­ப­வர்கள், விசா­ர­ணை­க­ளின்றி சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்கள், பொது மக்­க­ளுக்கே சொந்­த­மாக இருக்­கின்ற போதிலும்,

பொதுத் தேவை என்றும் தேசிய பாது­காப்­புக்­கான தேவை­யென்றும், பல்­வேறு சட்­ட­வி­தி­களைக் காட்டி, மீள்­கு­டி­யேற்றம் என்ற பெயரில் திட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்­றத்­திற்கும்.

இரா­ணுவ குடி­யேற்­றத்­திற்­கு­மாக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற காணி அப­க­ரிப்பு போன்­ற­வற்­றிற்கு எதி­ராகப் பெரிய அள­விலும் சிறிய அள­விலும் மக்கள் போராடிக் கொண்­டுதான் இருக்­கின்­றார்கள். அடக்­கு­மு­றை­க­ளுக்கு எதி­ரான போராட்­டங்­களை அவ்­வப்­போது அர­சியல் கட்­சி­களும் பொது­மக்­களும் இணைந்து மேற்­கொள்­ளத்தான் செய்­கின்­றார்கள்.

எனவே உரி­மை­க­ளுக்கும் வாழ்­வ­தற்­கு­மான போராட்­டங்கள் நடந்து கொண்­டுதான் இருக்­கின்­றன. இந்தப் போராட்­டங்­களில் உண்­மை­யி­லேயே அர­சியல் கட்­சி­க­ளிலும் பார்க்க, பாதிக்­கப்­பட்ட பொது­மக்கள் மிகவும் தீவி­ர­மாக இருப்­பதைப் பல இடங்­க­ளிலும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருக்­கின்­றது.

இத்­த­கைய ஒரு நிலை­மை­யில்தான், பெரிய அளவில் - பர­வ­லாகப் போராட்­டங்­களை நடத்தப் போகின்றோம் என்ற முன்­ன­றி­வித்­தலை இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சி தனது தேசிய மாநாட்டில் பிர­க­ட­ன­மாக வெளி­யிட்­டி­ருக்­கின்­றது.

அர­சாங்கம் தனது அடக்­கு­மு­றை­களை நிறுத்த வேண்டும் இல்­லையேல் போராட்டம் வெடிக்கும் என எச்­ச­ரிக்கை விடுத்து, காலக்­கெடு ஒன்­றையும் குறித்­துள்ள இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சி இந்தக் கைங்­க­ரி­யத்தைத் தனித்­தி­ருந்து ஆரம்­பிக்கப் போகின்­றதா அல்­லது தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் தன்­னுடன் இணைந்­துள்ள ஏனைய பங்­காளிக் கட்­சி­க­ளையும் இணைத்துக் கொண்டு தொடங்கப் போகின்­றதா என்­பது தெளி­வில்­லாமல் இருக்­கின்­றது.

பல இடங்­க­ளி­லு­மான இந்த சாத்­வீகப் போராட்டம் பற்­றிய பிர­க­டனம் வரு­டத்தின் இறுதிக் காலாண்டு பகு­தி­யா­கிய செப்­டம்பர் மாதத்தின் முதல் வாரப்­ப­கு­தியில் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. போராட்டம் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்ள ஜன­வரி மாதத்திற்கு இன்னும் மூன்று மாதங்­களே இருக்­கின்­றன.

இந்த நிலையில் பர­வ­லான ஒரு போராட்­டத்தை முன்­னெ­டுப்­பது தொடர்பில் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளுடன் பேச்­சுக்கள் நடத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும். அதற்­கான ஏற்­பா­டுகள் குறித்து விவா­திக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். அத்­த­கைய செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.

இத்­த­கைய ஒரு நிலை­மையில் பர­வ­லான போராட்­டத்தைத் தமி­ழ­ரசுக் கட்சி என்ன வகையில் முன்­னெ­டுக்கப் போகின்­றது என்­பது கேள்­விக்­கு­றி­யா­கவே இருக்­கின்­றது. அவ­ச­ர­காலச் சட்டம் இப்­போது நடை­மு­றையில் இல்லை. ஆனால் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் இன்னும் நடை­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

யுத்த நிலைமை கார­ண­மாக நீண்­ட­கா­ல­மாக அமுல் செய்­யப்­பட்­டி­ருந்த அவ­ச­ர­காலச் சட்டம் அதி­கா­ர­பூர்­வ­மாக நீக்­கப்­பட்­டுள்ள போதிலும், அந்தச் சட்­டத்தின் முக்­கிய சரத்­துக்கள் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தில் சேர்க்­கப்­பட்டு அவைகள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் விடுக்கும் எந்த ஒரு செய­லையும் அனு­ம­திக்க முடி­யாது என்­பது அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டாகும். காணாமல் போயி­ருப்­ப­வர்­களைத் தேடிக் கண்­டு­பி­டிப்­ப­தற்­கான முயற்­சி­களில் தொடர்ச்­சி­யாக ஈடு­பட்டு, எந்­த­வி­த­மான பல­னையும் காணாத நிலையில் வீதியில் இறங்கிப் போரா­டி­ய­மையும், இந்தப் பிரச்­சினை குறித்து சர்­வ­தேச மட்­டத்­திலான பிர­மு­கர்­க­ளிடம் எடுத்துக் கூறி­ய­மை­யு ம்­கூட தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லா­கவே அர­சாங்­கத்­தினால் கரு­தப்­ப­டு­கின்­றது.

இதன் கார­ண­மா­கவே, காணாமல் போயுள்ள தமது பிள்­ளை­களைத் தேடி அலையும் தாய்­மார்­களில் ஒரு­வ­ரா­கிய ஜெயக்­கு­மாரி பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு இன்று பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கின்றார். அவ­ரு­டைய 14 வயது மகள் கிளி­நொச்­சியில் சிறுவர் இல்லம் ஒன்றில், சுய அடை­யாளம் மறைக்­கப்­பட்ட நிலையில் பரா­ம­ரிப்­ப­தற்­காக விடப்­பட்­டி­ருக்­கின்றார்.

ஜெயக்­கு­மா­ரிக்கு நேர்ந்­தது போன்று பல­ருக்கும் பல்­வேறு வழி­மு­றை­களில் நேர்ந்­தி­ருக்­கின்­றது. நேர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­ப­டு­வது, பேர­ணி­யாகச் செல்­வது என்­ப­தெல்லாம், சிக்­கலும், சிர­மங்­களும் நிறைந்த காரி­ய­மாக இருக்­கின்­றது.

இதுதான் இன்­றைய யதார்த்தம். இத்­த­கைய ஒரு சூழலில் பர­வ­லாக சாத்­வீகப் போராட்­டங்­களை நடத்­து­வ­தற்கு, தகுந்த முன்­னேற்­பா­டு­களும், இறுக்­க­மான செயற்­றிட்­டங்­களும் அவ­சியம் என்­பது சொல்லித் தெரிய வேண்­டி­ய­தில்லை. இத னைப் பழம்­பெரும் கட்­சி­யா­கிய இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியும் அதன் பழுத்த தலை­ வர்­களும் சிந்­திக்­காமல் விட்­டி­ருப்­பார்­களா?

தமிழ்த்தேசிய கூட்­ட­மைப்­பு­ட­னான செயற்­பா­டுகள் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வ­ரா­கவும், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வ­ரா­கவும் பாராளு­மன்ற உறுப்பினர் ஆர்.சம்­பந்தன் செயற்­பட்டு வந்தார். தமி­ழ­ரசுக் கட்­சியின் இந்த தேசிய மாநாட்டில் அந்தக் கட்­சியின் தலை­வ­ராக, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராஜா தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்றார்.

அவ­ருக்கு இப்போது 71 வயது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­ வ­ராகச் செயற்­பட்டு வந்த 81 வய­து­டைய சம்­பந்தன், அந் தக் கட்­சியின் அர­சியல் செயற்­ கு­ழுவின் தலை­வ­ராகச் செயற்­ப­ட­வுள்­ள­துடன், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வ­ராகத் தொடர்ந்தும் செயற்­ப­டுவார் என அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை மைப் பத­வியில் மேற்­கொள்­ளப் பட்ட இந்த மாற்­ற­மா­னது, சம்­பந் தன் படிப்­ப­டி­யாக அர­சி­யலில் இருந்து ஓய்வு பெறு­வ­தற்­கான ஆரம்ப நட­வ­டிக்­கையா என்ற சந்­தேகம் பல­ருக்கு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த சந்­தேகம் குறித்து செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய சம்­பந்தன், தற்­போது தமிழ் மக்கள் பல்­வேறு பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கி­யி­ருக்­கின்­றார்கள்.

இந்த நிலையில் அர­சி­யலில் இருந்து எவ்­வாறு ஓய்வு பெறு­வது என்ற தொனியில் பதி­ல­ளித்­தி­ருக்­கின்றார். அதே­நேரம், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வ­ராகத் தொடர்ந்து செயற்­ப­டு­வது என்­பது, கூட்­ட­மைப்பின் அங்­கத்­துவ கட்­சி­களின் முடி­வி­லேயே தங்­கி­யி­ருக்­கின்­றது என்றும் அவர் கூறி­யி­ருக்கின்றார்.

ஆனால், தமி­ழ­ரசுக் கட்­சி­யினர் மட்­டு­மல்­லா மல், கூட்­ட­மைப்பில் இணைந்துள்ள கட்­சி­க ளைச் சேர்ந்­த­வர்­களும், தமிழ் மக்­க­ளும்­கூட, கூட்­ட­மைப்பில் சம்­பந்­தனின் தலைமை தொடர வேண்டும் என்­ப­தையே விரும்­பு­கின்­றார்கள். புதி­தாகத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைமைப் பொறுப்பை ஏற்­றுள்ள மாவை சேனா­தி­ராஜா, அந்தத் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிச் செல்­கின்ற சம்­பந்தன் ஆகிய இரு­வ­ருமே 50 வரு­டத்­திற்கும் மேற்­பட்ட அர­சியல் அனு­ப­வ­மிக்­க­வர்கள்.

பல்­வேறு போராட்ட களங்­களை அவர்கள் சந்­தித்­தி­ருக்­கின்­றார்கள். மாவை சேனா­தி­ராஜா 7 வரு­டங்கள் சிறை­வா­சனம் அனு­ப­வித்­தவர். கடந்த 1960 ஆம் ஆண்டு சத்­தி­யாக்­கி­ரகப் போராட்­டத்தில் கலந்து கொண்­டி­ருந்­த­போது கைது செய்­யப்­பட்ட சம்­பந்தன் 6 மாதங்கள் சிறை­வாசம் அனு­ப­விக்க நேர்ந்­தது. இரு­வ­ருமே பழுத்த அர­சி­யல்­வா­திகள்.

இவர்­க­ளி­டையே தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைமை பொறுப்பு மாற்றம் செய்­யப்­பட்­டுள்ள சூழலில், இரு­வ­ருமே, தமி­ழ­ரசுக் கட்­சியின் தேசிய மாநாட்டில், தமி­ழ­ரசுக் கட்சி என்­ன­வி­த­மான முறையில் எதிர்­கா­லத்தில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் பங்­க­ளிப்பு செய்யப்போகின்­றது, கூட்­ட­மைப்பின் எதிர்­காலம் குறித்தும், அதன் எதிர்­கால அர­சியல் நட­வ­டிக்­கைகள் பற்­றியும் வாய் திறக்­க­வில்லை.

புதி­தாகத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைமைப் பொறுப்பை ஏற்­றுள்ள மாவை சேனா­தி­ராஜா தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பு­ட­னான பங்­க­ளிப்பு குறித்து கருத்து வெளி­யி­டா­விட்­டா­லும்­கூட, கூட்­ட­மைப்பின் தலை­வ­ராகத் தொடரப் போகின்ற சம்­பந்தன் அது­பற்­றிய நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும் என்று பலரும் கரு­து­கின்­றார்கள்.

பழம் பெரும் கட்­சி­யாகக் கரு­தப்­ப­டு­கின்ற தமி­ழ­ரசுக் கட்­சி­யா­னது தமிழ் மக்­களைப் பொறுத்­த­மட்டில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு என்ற அச்­சி­லேயே சுழன்று கொண்­டி­ருக்­கின்­றது. தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு இன்றும் ஓர் அர­சியல் கட்­சி­யாகத் தேர்தல் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை. அதற்­கென ஒரு சின்­னமோ, கொடியோ கிடை­யாது.

அது இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் வீட்டுச் சின்­னத்­தையே, தேர்தல் காலச் செயற்­பா­டு­களில் தங்­கி­யி­ருக்­கின்­றது. கூட்­ட­மைப்பின் அங்­கத்­துவ கட்­சிகள் என்று வரும்­போது, இலங்தைக் தமி­ழ­ரசுக் கட்­சியின் பெயர் அந்தக் கட்­சியை அடை­யாளப் படுத்­து­வ­தற்­காகப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

தேர்தல் திணைக்­க­ளத்­திலும், ஏனைய சட்­ட பூர்­வ­மான ஆவ­ணங்­க­ளிலும் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பை அடை­யா­ளப்­ப­டுத்­து­கின்­றது. ஆனால், பொது மக்கள் மத்­தி­யிலும், அதே­போன்று அர­சியல் அரங்­கு­க­ளிலும், சர்­வ­தேச மட்­டங்­க­ளிலும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பே, தமிழ் மக்­களின் அர­சியல் அடை­யா­ள­மாக, தமிழ் மக்­களின் அர­சியல் தலை­மை­யாகப் பிர­கா­சிக்­கின்­றது.

இத்­த­கைய ஒரு நிலை­மை­யி­லேயே, இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தேசிய மாநாட்டில், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு கவ­னத்தைப் பெறாமல் போயி­ருப்­பது பல­ரு­டைய கவ­னத்­தையும் ஈர்த்­தி­ருக்­கின்­றது. பேச்­சு­வார்த்­தைகள் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கான பேச்­சு­வார்த்­தைகள், குறிப்­பிட்ட ஒரு கால எல்­லைக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற கருத்து தமி­ழ­ரசுக் கட்­சியின் மாநாட்டில் அழுத்தி உரைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

மாநாட்டில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­க­ளுக்கு அப்பால், மாநாட்டின் இறுதி நிகழ்வில் உரை­யாற்­றிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சம்­பந்தன், அர­சியல் தீர்­வுக்­கான பேச்­சு­வார்த்­தைகள் குறித்து மூன்று முக்­கிய விட­யங்கள் பற்றி குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். பத்து வரு­டங்­க­ளாக ஜனா­தி­ப­தி­யாக இருக்­கின்ற ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஷ அனைத்­து­கட்சிப் பிர­தி­நி­தி­க­ளையும் அழைத்துப் பிரச்சினைக்குத் தீர்வு காண்­பது குறித்து பேசச் செய்­தி­ருக்­கின்றார்.

அதே­வேளை நிபு­ணர்கள் அடங்­கிய குழு­வொன்றை அமைத்து அர­சியல் தீர்­வு­பற்றி ஆராய்ந்து அது­பற்­றிய முடி­வொன்றைப் பெற்றிருக்­கின்றார். இந்த இரண்டு நிலை­க­ளிலும் அவர் ஓர் அர­சியல் தீர்வு குறித்து, முற்­போக்­கான கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருக்­கின்றார்.

அந்த நிலைப்பாட்டின் அடிப்படை யில் ஒரு பேச்சுவார்த்தையை நடத்துவதற்குத் தயார் என்பது ஒரு விடயம்; இரண்­டா­வது விட­ய­மாக, பேச்­சு­வார்த்­தை­யா­னது 6 வாரங்­க­ளுக்குள் நடத்தி முடிக்­கப்­பட வேண்டும் என்­பது அவ­ரு­டைய நிபந்­த­னை­யாகும். இனிமேலும் பேச்­சு­வார்த்தை என கூறிக் கொண்டு பேச்­சு­வார்த்தை மேசையில் காலத்தை இழுத்­த­டிக்க முடி­யாது. அதற்கு இட­மில்லை.

குறி­கிய காலத்தில் ஆக்­க­பூர்­மான முறையில் பேச்­சுக்­களை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். மூன்­றா­வ­தாக, நடக்­கப்­போகும் பேச்­சு­வார்த்­தை­யா­னது, சர்­வ­தேச பிர­சன்­னத்தில் நடை­பெற வேண்டும் என்­பதை மற்­று­மொரு நிபந்­த­னை­யாக அவர் முன்­வைத்­தி­ருக்­கின்றார்.

இரு பகு­தி­யி­ன­ருக்கும் இடையில் நடை­பெ­று­கின்ற பேச்­சுக்­களில் என்­னென்ன பேசப்­ப­டு­கின்­றது, அங்கு உண்­மையில் என்ன நடக்­கின்­றது என்­பதைப் பொது­மக்­களும், உல­கமும் அறிந்து கொள்­வ­தற்கு இது அவ­சி­ய­மா­னது என்று அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தீர்­மா­ன­மாக தமிழர் பிர­தே­சங்­களில் இப்­போ­துள்ள அடக்­கு­முறை நிலை­மைகள் டிசம்பர் மாத­ம­ளவில் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். குறிப்­பிட்­ட ஒரு காலப்­ப­கு­திக்குள் பேச்சு வார்த்தை நடத்தி முடிக்­கப்­பட வேண்டும் என்ற விட­யங்­களை அர­சாங்கத் தரப்பில் அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா ஏற்க மறுத்­தி­ருக்­கின்றார்.

அர­சாங்­கத்தைப் பய­மு­றுத்தி அடி­ப­ணிய வைக்க முடி­யாது. கூட்­ட­மைப்­புடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட மாட்­டாது. பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வி­லேயே பேச்­சுக்கள் நடத்­தப்­படும் என்று அவர் திட்­ட­வட்­ட­மாகக் கூறி­யி­ருக்­கின்றார்.

இந்த நிலை­மையில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது, தமிழரசுக் கட்சி என்ன செய்யப் போகின்றது என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. இனிவரும் நிலைமைகள் இந்த வினாக்களுக்கு விடையளிக்குமா என்பது தெரி யவில்லை.