Breaking News

த.தே.கூட்டமைப்பால் ஒரு மலசலகூடமாவது கட்ட முடியாது - ஸ்ரீ.சு.க.அமைப்பாளர் சாணக்கியன்.

 



தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பற்றி நான் பிளையாகக் கூறவில்லை ஆனால் அவர்கள் உரிமை, உரிமை என கத்துகின்றார்கள், அவர்கள் உரிமையைப் பெறட்டும் ஆனால் நாங்கள் அபிவிருத்திகளைப் பெற்றுக் கொள்வோம்.

உரிமை வேண்டும் என்பவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பக்கம் செல்லுங்கள், பின்னர் தண்ணீர் வேண்டும், வீதி அபிவிருத்தி செய்ய வேண்டும், எனக் கேட்டு என்னிடம் வரக் கூடாது ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பனரால் உரிமை உரிமை என்று கத்தத்தான் தெரியும் மாறான அவர்களால் ஒரு மலசலகூடமாவது கட்ட முடியாது.

என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை மாலை (05) மட்டக்களப்பு மாவட்டம் - களுவாஞ்சிகுடி கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பாக நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

களுவவாஞ்சிகுடி வடக்கு பொதுக்கட்டிடத்தில் கிராம அபவிருத்திச் சங்கத் தலைவர் எஸ்.விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…..

பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 5000 வாக்குகள்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கசவுக்குக் கிடைத்தன. ஆனால் சரத் பொன்சேகாவுக்கு 60000 வாக்குகள் கிடைத்திருந்தன. இப்படி எமது மக்கள் வாக்களித்தும் சரத் பொன்சேகா தோல்வியடைந்தார். எனவே இந்த நிலையில் இருந்து கொண்டு நான் எவ்வாறு ஜனாதிபதியிடம் போய் பட்டிருப்புத் தொகுதிக்கு அபிவிருத்தி செய்வதற்கு உதவுங்கள் என்று கேட்பது.  இப்படியிருந்து கொண்டு எமக்கு இந்த அரசாங்கம் உதவி செய்யவில்லை என்று கேட்பதற்கு எந்த உரிமையும் இல்லை.

இவ்வாறு மக்கள் கடந்த காலங்களில் செய்ற்பட்டு வந்த காரணத்தினால்தான் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புத் தொகுதி இதுவரையில் எந்தவித அபிவிருதிகளும் அடையாமலிருக்கின்றது.

கடந்தவைகள் கடந்தவைகளாகவே இருக்கட்டும் தற்போது ஜனாதிபதியின் “மகநெகும” எனும் திட்டத்தினூடாக பட்டிருப்புத் தொகுதியில் பல வேலைத் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம். இது எமக்குக் கிடைத்திருக்கின்ற கடைசி வசதி வாய்ப்பாகும் எனவே இதற்கு மக்கள் சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும். இந்த வாய்ப்பை கைநழுவ விட்டால் அடுத்த 6 வருடங்களுக்கு எதுவித உதவிகளும் கிடைக்காமல் போய்விடும்.

எதிர் வரும் காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் வர இருக்கின்றது. அதங்கு பட்டிருப்புத் தொகுதிவாழ் மக்கள் அனைவரும் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

பட்டிருப்புத் தொகுதி மக்களின் வாக்குக்களை பெற்றுத் தருவேன் என்று இங்குள்ள மக்களை நம்பி ஜனாதிபதியிடம் வாக்குக் கொடுத்திருக்கின்றேன்.
அந்த வகையில் தற்போதிருந்தே  “மகநெகும” எனும் திட்டத்தினூடாக பல அபிவிருத்திகளை மேற்கொள்வதற்குத் திட்மிட்டுள்ளேன். 20000 தென்னங் கன்றுகளை பட்டிருப்புத் தொகுதியிலுள்ள மக்களுக்கு வழங்கப்படவுள்ளன, இதனைவிட கிராமங்களிலுள்ள பழுதடைந்து கிடக்கும் உள்வீதிகள் அனைத்தும் கிறவல் இட்டு செப்பனிடப்படவுள்ளன, கோழிவளர்ப்புத் திட்டத்தினை ஊக்குவித்தல், நண்டு வளர்ப்பு, இறால் வளர்ப்பு, போன்ற பல செயற்பாடுகளை மேற்கொண்டு மாதாந்தம் ஆக்க குறைந்தது 5000 ரூபா வருமானம் பெறக் கூடிய அளவிற்கு திட்டங்கள் வகுக்கப் பட்டுள்ளன.  இந்த அபிவித்தித் திட்டங்கள் யாவும் எதிர் வருகின்ற 3 மாதகாத்திற்குள் ஆரம்பிக்கப்படும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பற்றி நான் பிளையாகக் கூறவில்லை ஆனால் அவர்கள் உரிமை, உரிமை என கத்துகன்றார்கள் அவர்கள் உரிமையைப் பெறட்டும் ஆனால் நாங்கள் அபிவிருத்திகளைய் பெற்றுக் கொள்வோம்.
உரிமை வேண்டும் என்பவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பக்கம் செல்லுங்கள், பின்னர் தண்ணீர் வேண்டும், வீதி அபிவிருத்தி செய்ய வேண்டும், எனக் கேட்டு என்னிடம் வரக் கூடாது ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் உரிமை உரிமை என்று கத்தத்தான் தெரியும் மாறாக அவர்களால் ஒரு மலசலகூடமாவது கட்ட முடியாது.

ஐஸ்லான் நாட்டில் மூன்றாவது தலைமுறைக்குப் பின்னர்தான் தனிநாடு கிடைத்தது. ஆனால் தமிழ் தேயிசயக் கூட்டமைப்பினால் கோரப்பட்டுக் கொண்டிருக்கும் தனிநாட்டுக் கோரிக்கை என்பது எதிர் வரும் 50 வருடத்திற்குள் முடியாத காரியமாகும். எனவே இனிமேலும் உரிமை என்று கத்திக் கொண்டு இராமல் அபிவிருத்தியின்பால் செல்வோம்.

எப்போது எதிர் தரப்புக்கு வாக்களித்துப் பழகிய எமது மக்கள் இம்முறை மாத்திரம் ஜனாதிபதிக்காக  இல்லாவிட்டாலும் எனக்காக மட்டுமாவது வர இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் எமது தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு வாக்களியுங்கள். எனவே எமது மக்கள் சிந்தித்து செயற்படுங்கள் இது எமது மக்களுக்குக் கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பாகும். என அவர் மேலும் தெரிவித்தார்.