வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் உழவு இயந்திரப்பெட்டியின் கீழ் சிக்குண்டு சாவு - THAMILKINGDOM வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் உழவு இயந்திரப்பெட்டியின் கீழ் சிக்குண்டு சாவு - THAMILKINGDOM
 • Latest News

  வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் உழவு இயந்திரப்பெட்டியின் கீழ் சிக்குண்டு சாவு

  வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் இளையகுட்டி கேதீஸ்வரன் உழவியந்திர பெட்டிக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. 

  வவுனியா வடக்கு நெடுங்கேணி மாறாயிலுப்பை பகுதியில் தனது சகோதரரின் வீட்டில் இருந்து உழவு இயந்திரத்தில் நெல் மூட்டைகளை ஏற்றி தனது வீட்டில் பறிப்பதற்கு முயற்சி செய்த போது உழவு இயந்திரத்திரப் பெட்டியின் டிப்பர் பம் சீராக இயங்காததால் அதனை சீர்செய்ய முயற்சித்த போது பெட்டியின் டிப்பர் பம் வெடித்து உழவு இயந்திரப்பெட்டி அவர் மீது விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது, வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினரான இவர் மாறாயிலுப்பை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவருமாவார். 

  42 வயதான கேதீஸ்வரன் மூன்று பிள்ளைகளின் தந்தையுமாவார். இந்த விபத்து குறித்து நெடுங்கேணிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் உழவு இயந்திரப்பெட்டியின் கீழ் சிக்குண்டு சாவு Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top