வெள்ளைவான் கலாச்சாரம் முடிவுக்கு வரவுள்ளது - பாதுகாப்பு அமைச்சர் - THAMILKINGDOM வெள்ளைவான் கலாச்சாரம் முடிவுக்கு வரவுள்ளது - பாதுகாப்பு அமைச்சர் - THAMILKINGDOM
 • Latest News

  வெள்ளைவான் கலாச்சாரம் முடிவுக்கு வரவுள்ளது - பாதுகாப்பு அமைச்சர்

  வெள்ளைவான் கலாச்சாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு  அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.


  கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

  பாரியளவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வாகனத் தொடரணிகளுடன், மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அரசியல்வாதிகள் பயணங்களை மேற்கொண்ட காலம் முடிந்து விட்டது. நான் எந்தக் காலத்திலும் இவ்வாறு மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட்டதில்லை.

  இதுவரையில் உத்தியோகபூர்வ வாகனமொன்றையோ, வீடு ஒன்றையோ நான் பெற்றுக்கொள்ளவில்லை. எதிர்காலத்திலும் இவ்வாறான சலுகைகளை பெற்றுக்கொள்ள நான் விரும்பவில்லை. தற்போதைய அரசாங்கம் நீதிமன்றின் மீதோ அல்லது பொலிஸார் மீதோ அழுத்தங்களை பிரயோகிக்கப் போவதில்லை.தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட மாட்டாது. யோசித ராஜபக்ச தொடர்பில் ஜே.வி.பி செய்த முறைப்பாடு குறித்து விசாரணை நடத்தப்படும் என ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: வெள்ளைவான் கலாச்சாரம் முடிவுக்கு வரவுள்ளது - பாதுகாப்பு அமைச்சர் Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top