Breaking News

எம்மை நாமே ஆள வேண்டும் அதுவே எமது இலட்­சியம் - யாழில் மாவை தெரிவிப்பு

எமது தாய­கத்தில் எம்மை நாமே ஆள­வேண்டும் என்­பதே எமது இலட்­சியம் என தெரி­வித்த இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழர் நலனில் சர்­வ­தேசம் அக்­கறை கொண்­டி­ருக்­கின்ற நிலையில் அதனை இரா­ஜ­தந்­திர ரீதியாக பயன்­ப­டுத்­த­வேண்டும் என்றும் கூறி னார். எமது இலட்­சி­யத்­திற்கான பயணங்கள், போராட்­டங்கள் மாறு­கின்­ற போதும் இலட்­சியம் மாறாது என குறிப்பிட்ட அவர்,

தமிழ்­மக்கள் தமது ஜனநா­ய­கப்­ப­லத்­தினை நிரூபிப்­பதன் ஊடா­கவே அதனை விரை­வாக அடை­ய­மு­டியும் எனவும் வலி­யு­றுத்­தி­யுள்ளார். இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் கிளைக் ­கா­ரி­யாலயம் நேற்­றைய தினம் வட்­டக்­கோட்டை அத்­தி­யடி விநா­யகர் ஆல­யத்­திற்கு அரு­கா­மையில் திறந்து வைக்­கப்­பட்­டது. இந்­நி­கழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

தமி­ழர்­களின் ஜன­நா­யக போராட்­டங்கள் நிரா­க­ரிக்­கப்­பட்டு அடக்­கி­யொ­டுக்­கப்­பட்­ட­போது ஆய­தப்­போ­ராட்டம் ஆரம்­பிக்­கப்­பட்டு முப்­பது வரு­டங்­க­ளுக்கு மேலாக தொடர்ந்து வந்­தி­ருந்­தது. உல­கத்தின் பல பாகங்­களில் ஜன­நா­ய­கப்­போ­ராட்­டங்­க­ளி­னாலும், ஆயு­தப்­பு­ரட்­சி­க­ளாலும் புதிய நாடுகள் உரு­வா­கி­யி­ருக்­கின்­றன. அவை சுதந்­திர நாடு­க­ளாக மாற்­ற­ம­டைந்து ஐக்­கிய நாடுகள் சபையில் அங்­கத்­துவம் வகித்து வரு­கின்­றன. 

எமது இனத்தின் விடு­த­லைப்­போ­ராட்­டத்­திற்­கான பய­ணத்தில் ஆயி­ர­மா­யிரம் உயிர்கள் இழக்­கப்­பட்­டி­ரு­கின்­றன. எமது தலை­வர்­களைக் கூட அவ்­வா­றான போராட்­டத்­தி­லேயே இழந்­தி­ருக்­கின்றோம். எத்­த­னையோ பொது­மக்கள் தமது உயிர்­களை அர்ப்­ப­ணித்­தி­ருக்­கின்­றார்கள். எமது தயாகம் கட்­டி­யெ­ழுப்­பட்டு எமது ஆட்சி உரு­வாக வேண்டும் என்­ப­தையே தந்தை செல்வா அவர்கள் அனை­வ­ரு­டைய உள்­ளத்­திலும் விதைத்துச் சென்­றுள்ளார். இத்­தனை இழப்­பக்­க­ளையும், அர்ப்­ப­ணிப்­பக்­க­ளையும் தியா­கங்­க­ளையும் கடந்து எமது சமு­கத்தின் அடி­நா­த­மாக அதுவே இன்றும் காணப்­ப­டு­கின்­றது.

ஆயு­தப்­போ­ராட்டம் முள்­ளி­வாய்க்­காலில் நிறை­வ­டைந்­த­தாக முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஷ அறி­வித்­தது மட்­டு­மன்றி விடு­த­லைப்­பு­லி­களை வெற்றி கொண்­டு­விட்டோம் எனக் கூறினார். வர­லாற்றில் தோற்­றுப்­போன சமூகம் எம்மைப் பார்த்துக் கூறினார். அதற்கு பின்னர் அவர் வடக்கு கிழக்­கிலே ஒரு­போதும் வெற்­றி­ய­டை­யா­த­வாறு எமது மக்கள் தக்க படிப்­பி­னையை வழங்­கி­யி­ரு­கின்­றார்கள். எம்மை நாம் ஆளு­வ­தற்­காக எங்­களை விலை­கொ­டுத்­த­வர்கள் என்­பதை அழுத்­த­மாகக் கூறி­யி­ரு­கின்­றார்கள்.

2009ஆம் ஆண்டு யுத்­தத்தில் வெற்றி பெற்­று­விட்­ட­தாக மார்பு தட்­டிய முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஷ முள்­ளுக்­கம்­பி­க­ளுக்குள் முகாம்­களில் நசுக்­கப்­பட்ட எமது மக்­களை மக்­களை பார்ப்­ப­தற்கு கூட அனு­ம­தியை மறுத்தார். எமது நிலங்­களை அப­க­ரித்து இன அடை­யா­ளத்தை இல்­லாமல் செய்­வ­தற்­கான பல நட­வ­டிக்­கை­களை எமது சமு­தா­யத்தின் மீது கட்­ட­விழ்த்து விட்டார். எவ்­வ­ளவு அடக்கு முறை­க­ளுக்குள் எமது மக்கள் நசுக்­கப்­பட்­டாலும் பேர­ழி­வு­க­ளுக்கு முகங்­கொ­டுத்­தாலும் எமது தேசத்தின் தந்தை காட்­டிய அந்த வீட்டுச் சின்­னத்­துக்கே வாக்­க­ளித்து வந்­தி­ருக்­கின்­றார்கள்.

பண்­ணாகம் மெய்­கண்டான் மண்­ட­பத்தில் நடை­பெற்ற பாரிய மாநாட்­டி­லேயே வட்­டுக்­கோட்டைத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. எம்மை நாமே ஆள­வேண்டும். இழந்த சுதந்­தி­ரத்தை மீளப்­பெ­ற­வேண்டும். சுய­நிர்­ணய உரிமை எமக்­குள்­ளது என்­பது இன்றும் எமது இத­யங்­க­ளி­லிலே வாழ்ந்­து­கொண்­டுதான் உள்­ளது. மாறி­வரும் சூழலில் அந்த இலட்­சி­யத்­திற்­கான பய­ணத்தின் வடி­வங்கள் மாறிக்­கொண்­டி­ருந்­தாலும் அடிப்­ப­டையில் எமது இலக்கு அது­வா­கவே உள்­ளது என்­பதை எம்மால் மறுக்­கவோ மறைக்­கவோ முடி­யாது.

கடந்த 08ஆம் திகதி நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­த­லின்­போத வடக்கு கிழக்கு மக்கள் எழுச்சி கொண்­டார்கள். அடக்கு முறை, சர்­வா­தி­காரம், ஊழல் மோசடி நிறைந்த நய­வஞ்­சக ஆட்­சிக்கு எதி­ராக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் ஒன்று திரண்டு மகிந்த ராஜ­ப­க்ஷவை வீட்­டுக்கு அனுப்­பி­னார்கள். எம்மை தோற்­றுப்­போ­ன­வர்கள் என கூறி­ய­வரை, எம்மை அடக்கி எமது அடை­யா­ளங்­களை மாற்­றி­ய­மைக்­க­வேண்டும், எமது இருப்பை ஒழிக்க வேண்டும் என திட்­ட­மிட்­ட­வரை ஆட்­சி­யி­லி­ருந்து அகற்­றி­னார்கள். இன்று பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களில் கைது செய்­யப்­ப­டு­வார்­க­ளாக என்ற அச்­சத்தில் வீட்டில் இருந்­தாலும் சிறைக்­குள்ளே இருக்கும் நிலை­யி­லேயே உள்­ளார்கள்.

ஆயு­த­மில்­லாமல் ஜன­நா­யக ரீதி­யாக இந்தப் புரட்­சியை தமிழ் மக்கள் நிகழ்த்­தி­யி­ருக்­கின்­றார்கள். இந்த நாட்டில் அக்­க­றை­கொண்­டதும், ஜன­நா­ய­கத்­தினை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் சர்­வ­தேச நாடு­களின் இரா­ஜ­தந்­தி­ரமும் ஒத்­து­ழைப்பை வழங்­கி­யுள்­ளது. ஆட்சி மாற்­றத்தின் பலன்கள் எமக்கு உட­ன­டி­யாக கிடைக்­காது விட்­டாலும் நல்­லெண்ணச் சூழ­லொன்று உரு­வா­கி­யுள்­ளது. நூறு­நாட்கள் திட்டம் அறி­விக்­கப்­பட்டு ஆறு­மா­தங்கள் கடந்த போதும் பல்­வேறு விட­யங்­கள்­தொ­டர்­பாக ஆக்­க­பூர்­வ­மான பேச்­சு­வார்த்­தை­களை பாரா­ளு­மன்­றத்­திற்கு உள்ளும் வௌியிலும் முன்­னெ­டுத்­துக்­கொண்­டுதான் இருக்­கின்றோம்.

எதிர்­கா­லத்தில் எவ்­வா­றான நிலை­மைகள் ஏற்­பட்­டாலும் எம்மை நாமே ஆள­வேண்டும் என்ற இலட்­சியம் , கொள்கை ஆகி­ய­வற்­றுக்­காக எமது ஜனநாக சந்தர்ப்பங்களை நாம் சரியாக பயன்படுத்தவேண்டும். சர்வதேச நாடுகள் தமிழர்கள் சார் நலனில் அக்கறை கொண்டுள்ளன. அதில் நாம் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றோம். ஆகவே எமது ஜனநாயக பலத்தை உறுதி செய்து சர்வசேத்தின் அக்கறையை தூக்கியெறியாது இராஜதந்திர ரீதியில் வெற்றி பெறுவதன் மூலமே எமது இலட்சியத்தை எட்டமுடியும் என்றார்.

இந்நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், வடமமாகாண சபை தவிசாளர் சி.வி.கே.சிவஞானம், புளொட் தலைவர் சித்தார்த்தன், வடமாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.