Breaking News

சுசிலுடன் மஹிந்த அணி இன்று பேச்சு! பிரதமர் வேட்பாளர் தொடர்பில் தொடர்ந்தும் சிக்கல்

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பிர­தமர் வேட்­பாளர் யார் என்­பதில் கட்­சிக்குள் பனிப் போர் ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. மஹிந்­தவின் தலை­மையில் புதிய கூட்­ட­ணியில் போட்­டி­யிடும் தீர்­மா­னத்தில் மஹிந்த ஆத­ரவு அணி­யினர் உள்­ளனர்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை பிர­தமர் வேட்­பா­ள­ராக நிறுத்த முடி­யாது என்றும் வேண்­டு­மானால் சுத­ந்­திரக் கட்­சிக்கு ஆத­ர­வாக பிர­சா­ரத்தில் ஈடு­பட அனு­ம­திக்க முடியும் எனவும் ஜனா­தி­பதி மைத்­திரிபால சிறி­சேன திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­துள்ளார்.

கடந்த வியா­ழக்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­திரிபால­ சி­றி­சே­ன­வுக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்­கு­மி­டையில் இடம்­பெற்ற சந்­திப்பில் இந்த விட­யத்தை ஜனா­தி­பதி தெரி­வித்­துள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.

இந்த நிலையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செயற்­கு­ழுவில் 56 பேர் அங்கம் வகிக்­கின்­றனர் இவர்­களில் 42 பேர் மஹிந்­தவை பிர­தமர் வேட்­பா­ள­ராக நிறுத்­த­வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் உள்­ளனர். ஆனாலும் முன்­ன­ணியின் தலை­வரும் ஜனா­தி­ப­தி­யு­மான மைத்­திரி பால சிறி­சேன திட­மான முடிவில் இருப்­ப­தனால் இவர்கள் மாற்று அணி­யா­கவே போட்­டி­யிட வேண்­டிய நிலை தற்­போது தோன்­றி­யி­ருக்­கின்­றது.

இருந்­த­போ­திலும் மஹிந்த மைத்­தி­ரிக்கு இடையில் ஒருங்­கி­ணைப்பை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு அமைக்­கப்­பட்ட 6 பேர் கொண்ட குழு­வா­னது தொடர்ந்தும் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றது.

சுதந்­திரக் கட்­சியின் பிர­தமர் வேட்­பாளர் யார் என்­பது தொடர்பில் ஜூலை 1ஆம் திகதி நடை­பெறும் கட்­சியின் இறு­திக்­கட்ட பேச்­சுக்­களில் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வுள்­ளது. அன்­றைய தினம் கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டமும் இடம்­பெ­ற­வுள்­ளது.

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழு உறுப்­பி­னர்­களை ஒன்­றி­னைத்து நடத்­தப்­ப­ட­வி­ருக்கும் இந்தக் கூட்­டத்தில் ஜனா­தி­பதி நிய­மித்­துள்ள ஆறுபேர் கொண்ட குழு­வினர் கட்­சியின் பிர­தமர் வேட்­பாளர் தொடர்­பி­லான தமது அறிக்­கை­யினை சமர்ப்­பிக்­க­வுள்­ளனர். அதேபோல் கட்­சியின் அர­சியல் நகர்­வுகள் தொடர்பில் இன்றும் முக்­கிய கலந்­து­ரை­யா­டல்கள் நடை­பெ­ற­வுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

இது தொடர்பில் குழுவின் பேச்­சாளர் டிலான் பெரேரா தெரி­விக்­கையில்,

ஐக்­கிய மக்கள் சுதந்­தரக் கட்­சியின் அனை­வ­ரது ஆலோ­ச­னை­க­ளையும் ஆராய்ந்தும், அதேபோல் கட்­சியின் நிலைப்­பாட்­டினை தெரி­விக்கும் வகையில் எதிர்­வரும் ஜூன் 1 ஆம் திகதி நாம் ஜனா­தி­ப­தி­யிடம் எமது அறிக்­கை­யினை சமர்ப்­பிக்­க­வுள்ளோம். கட்­சிக்குள் பிள­வுகள் இல்­லாத வகை­யிலும், கட்­சியை ஒன்­றி­ணைக்கும் வகை­யி­லுமே நாம் கடந்த காலங்­களில் ஆராய்ந்தோம்.

ஆகவே ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லாளர் சுசில் பிரே­ம­ஜெ­யந்த நாளை(இன்று) நாடு திரும்­பி­ய­வுடன் இந்த விட­யங்கள் தொடர்பில் கலந்­தா­லோ­சிக்­கப்­ப­ட­வுள்­ளது. அதேபோல் எதிர்­வரும் 1ஆம் திகதி ஜனா­தி­ப­தி­யு­ட­னான பேச்­சு­வாத்­தையில் இறுதி முடிவு எடுக்­கப்­படும் எனத் தெரி­வித்தார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியின் பங்­காளிக் கட்சி தலை­வர்­களும் ஜனா­தி­ப­தி­யுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வுள்­ளனர். எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கட்­சியின் பங்­காளிக் கட்­சி­களை பலப்­ப­டுத்தும் நோக்­கத்தில் இந்த சந்­திப்பு நடை­பெ­ற­வுள்­ளது.

சுசி­லுடன் மஹிந்த அணி இன்று சந்­திப்பு

இந்­நி­லையில் மஹிந்த ஆத­ரவுக் கூட்­ட­ணி­யினர் இன்று ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியின் பொதுச் செய­லாளர் சுசில் பிரேம ஜெயந்­த­வுடன் முக்­கிய கலந்­து­ரை­யாடல் ஒன்றை மேற்­கொள்­ள­வுள்­ளனர். பிர­தமர் வேட்­பாளர் தொடர்பில் சுசில் தலை­மை­யி­லான குழு­வினர் தீர்­மானம் எடுத்து வரும் நிலையில் மஹிந்த ஆத­ரவுக் குழு­வினர் இந்த சந்­திப்பை நடத்­த­வுள்­ளனர்.

இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீர­வன்ச தெரி­விக்­கையில்,

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியின் பிர­தமர் வேட்­பாளர் தொடர்பில் ஜனா­தி­பதி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­க­ளுடன் தேவை­யான அளவு பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளோம். இனிமேல் எமது நிலைப்­பாட்டை எடுத்துக் கூற­வேண்­டிய அவ­சியம் இல்லை. ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கட்­சிக்கு தான் மஹிந்த தேவைப்­ப­டு­கின்றார்.

 எனவே எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கட்­சியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக மஹிந்­தவை கள­மி­றக்க வேண்டும். அவ்­வாறு இல்­லா­விட்டால் எம்­மிடம் இரண்­டா­வது திட்டம் ஒன்று உள்­ளது. முத­லா­வது திட்­டத்தை விடவும் இரண்­டா­வது திட்­டமே இப்­போது மஹிந்த ஆத­ரவுக் குழுவின் ஒரு­மித்த ்­வரும் பொதுத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக மஹிந்தவை களமிறக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் எம்மிடம் இரண்டாவது திட்டம் ஒன்று உள்ளது.

 முதலாவது திட்டத்தை விடவும் இரண்டாவது திட்டமே இப்போது மஹிந்த ஆதரவுக் குழுவின் ஒருமித்த விருப்பமாக உள்ளது. இம்முறை நாம் மஹிந்த தலைமையிலான கூட்டணியின் பொதுச் சின்னத்தில் தான் தேத்தலில் போட்டியிடவுளோம். இந்த முடிவில் மாற்றம் இல்லை எனக் குறிப்பிட்டார்.