Breaking News

ரணிலை பாதுகாக்கவே பாராளுமன்றம் கலைப்பு

பிர­தமர் ரணிலை பாது­காக்­கவே பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­டது. ஜனா­தி­ப­தியும் ரணிலை மறை­மு­க­மாக ஆத­ரிக்­கின்றார் என்று தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்தார்.

கடந்த தேர்­தலில் மக்கள் விட்ட வர­லாற்­றுத்­த­வறை இம்­முறை நிவர்த்­தி­செய்து மஹிந்­தவை மீண்டும் ஆட்­சிக்கு கொண்­டு­வர வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின்போதே அவர் மேற்­கண்­ட­ வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

தேசிய அர­சாங்கம் அமை­யப்­பெற்ற பின்னர் நூறு நாட்­களில் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும் என அர­சாங் கம் மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி கொடுத்­தது. ஆனால் இவர்கள் தொடர்ந்து பாரா­ளு­மன்­றத்தை கொண்­டு­செல் லும் முயற்­சியில் தான் இத்­தனை காலமும் செயற்­பட்­டனர். நூறு நாட்கள் முடி­வ­டைந்­த­வுடன்

பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட வேண் டும் என நாம் ஒவ்­வொரு முறையும் தெரி­வித்தோம். ஆனால் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது பத­வியை தக்­க­வைத்துக் கொள்ளும் முயற்­சியில் செயற்­பட்டார். ஆனால் ஒரு கட்­டத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஊழல் செயற்­பா­டுகள் வெளி­வர ஆரம்­பித்து விட்­டது. மத்­திய வங்கி ஆளுநர் விட­யத்­திலும் ,நிதி அமைச்­சரின் விட­யத்­திலும் ஊழல் செயற்­பா­டுகள் தொடர்பில் கோப் அறிக்கை வெளி­வ­ர­யி­ருந்த நிலையில் இப்­போது பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த வாரம் பாரா­ளு­மன்றம் கலைக்­கா­தி­ருந்தால் இந்த வாரம் பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்கை இல்லா பிரே­ரணை மற்றும் கோப் அறிக்கை வெளி­வந்­தி­ருக்கும். ஆகவே இப்­போது பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­னது பிர­தமர் ரணிலின் ஊழல்­களை மறைப்­ப­தற்­கா­க­வே­யாகும். ரணிலை காப்­பாற்­றவே உட­ன­டி­யாக பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­டுள்­ளது.

அதேபோல் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் மறை­மு­க­மாக ரணிலை காப்­பாற்ற பார்க்­கின்றார். ஜனா­தி­ப­தியின் நெருங்­கிய நட்பு வட்­டாரம் இந்த செயலில் ஈடு­ப­டு­வ­தாக எமக்கு தக­வல்கள் கிடைத்­துள்­ளது.

மேலும் இந்த அர­சாங்­கத்தின் நோக்கம் என்­ன­வென்­பது எமக்கு நன்­றா­கவே தெரியும். ஜன­வரி மாதம் 8 ஆம் திக­தி­யுடன் இந்த நாட்டில் பிரி­வினை வாதத்­துக்­கான அடித்­தளம் மீண்டும் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசியக் கூட்­ட­மைக்கு தனி நாட்டுக் கோரிக்கை நிறை­வேற்­றப்­படும் என்ற ஜனா­தி­ப­தியின் வாக்­கு­றுத்­திக்கு அமை­யவே அவ­ருடன் கைகோர்த்­தி­ருந்­தது.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் அண்­மையில் தனியார் தொலை­காட்சி ஒன்­றுக்கு வழங்­கி­யுள்ள அர­சியல் செவ்­வி­யொன்றில் இதை உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார். ஒன்­று­பட்ட இலங்­கையில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு இல்லை என்­பதை அவர் வெளிப்­ப­டை­யாக தெரி­வித்­துள்ளார்.

அதேபோல் வடக்கு கிழக்கு இணைந்த தாயக எண்­ணத்­தி­லேயே அவர்கள் ஜனா­தி­ப­தி­யுடன் கைகொர்த்­துள்­ள­தா­கவும், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் அர­சாங்­கத்­துக்கு இடையில் இர­க­சிய ஒப்­பந்­தங்கள் நடந்­துள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

அதேபோல் புலம்­பெயர் புலி­களை மீண்டும் நாட்­டுக்குள் கொண்­டு­வந்து அவர்­க­ளுக்கு மாநாடு நடத்தும் திட்­டத்தை அர­சாங்கம் மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றது. விடு­தலைப் புலி­களின் பணத்தில் நாட்டை அபி­வி­ருத்தி செய்ய அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. அத்­தோடு புலி­களின் தேவைக்­காக இரா­ணு­வத்தை பழி­வாங்கும் நட­வ­டிக்கை இன்றும் தொடர்­கின்­றது. வடக்கில் யுத்த காலத்தில் கொல்­லப்­பட்ட பலர் சிவில் புலி­களே ஆவர். விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்தில் சிவில் இயக்­கமும் இயங்­கி­யுள்­ளது. ஆகவே அவர்­களை கொன்­றமை மனித உரிமை மீற­லா­காது.

மேலும் கைது செய்­யப்­பட்­டுள்ள விடு­தலைப் புலிகள் உறுப்­பி­னர்­களை விடு­தலை செய்து இரா­ணு­வத்தை சிறையில் அடைக்கும் முயற்­சி­களை சர்­வ­தேச புலிகள் ஆத­ரவு இயக்­கங்கள் மேற்­கொண்டு வரு­கின்­றன.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒத்­து­ழைப்பும் இதில் உள்­ளது. ஆகவே கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்கள் பாரிய தவ­றினை செய்­துள்­ளனர். நாட்டை தவ­றான பாதையில் கொண்டு செல்வதற்கான அடித்தளத்தை மக்கள் போட்டுவிடக்கூடாது.

எனவே கடந்த தேர்தலில் மக்கள் செய்த தவறை இந்தத் தேர்தலுடன் நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். மீண்டும் இந்த நாட்டுக்கான சிறந்த தலைவரை உருவாக்கி ஒன்றிணைந்த இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும். மகிந்தவே இந்த நாட்டின் சிறந்த தலைவர். ஆகவே அவரை பிரதமராக்கி மீண்டும் நாட்டில் நல்ல ஆட்சியை உருவாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.