யாழ்ப்பாணத்தில் சிறுவர் பாலியல் பலாத்காரத்தை ஆராய விசேட குழு - THAMILKINGDOM யாழ்ப்பாணத்தில் சிறுவர் பாலியல் பலாத்காரத்தை ஆராய விசேட குழு - THAMILKINGDOM
 • Latest News

  யாழ்ப்பாணத்தில் சிறுவர் பாலியல் பலாத்காரத்தை ஆராய விசேட குழு

  புங்குடுதீவு மாணவி கொலையை அடுத்து யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சிறுமியர் மீதான பாலியல் பலாத்காரங்கள், தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளது.

  இந்தக்குழுவில் சட்டம், சமூக, மருத்துவம் மற்றும் சிறுவர் நலன் உட்பட்ட துறைகளில் உள்ளவர்கள் உள்ளடக்கப்பபட்டுள்ளனர். இந்தக்குழுவினர் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளது.

  இந்தக்குழுவில் இளைப்பாறிய பொலிஸ் அத்தியட்சகர் மெக்ஸி புரக்டர், ஹேய்லிஸ் குழுமத்தின் முன்னாள் பாதுகாப்பு முகாமையாளர் பிரசாந்தி மஹேந்திரரட்ன, சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னக்கோன், சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி சிவயோகன், சிறுவர் உரிமை நடவடிக்கையாளர் ஜே தட்பரன் உள்ளிட்டோர் அடங்கியுள்ளனர்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: யாழ்ப்பாணத்தில் சிறுவர் பாலியல் பலாத்காரத்தை ஆராய விசேட குழு Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top