மஹிந்தவின் மீள் எழுச்சியை குழிதோண்டி புதைப்பதே எமது நோக்கம் - பிரதமர் ரணில் தெரிவிப்பு - THAMILKINGDOM மஹிந்தவின் மீள் எழுச்சியை குழிதோண்டி புதைப்பதே எமது நோக்கம் - பிரதமர் ரணில் தெரிவிப்பு - THAMILKINGDOM

 • Latest News

  மஹிந்தவின் மீள் எழுச்சியை குழிதோண்டி புதைப்பதே எமது நோக்கம் - பிரதமர் ரணில் தெரிவிப்பு

  கடந்த ஜன­வரி 8 இல் ஆரம்­பிக்­கப்­பட்ட நல்­லாட்­சிக்­கான புரட்சியைத் தொடர்ந்தும் முன்­னெ­டுப்போம். 

  அதே­போன்று மஹிந்த ராஜபக் ஷவின் மீள் எழுச்­சி­யையும் ஊழல் மிக்க சிந்­த­னை­க­ளையும் குழி­தோண்டிப் புதைத்து, நாட்டில் மீண்டும் நல்­லாட்­சி­யையும் ஜன­நா­ய­கத்­தையும் உரு­வாக்­கு­வதே எமது ஒரே நோக்கம் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

  மஹிந்த ராஜபக் ஷவின் நோக்கம் மீண்டும் ஊழல்­மிக்க ஆட்­சி­யொன்றை உரு­வாக்­கு­வ­தே­யாகும். ஆனால் எமதுஎதிர்­பார்ப்போ ஜன­நா­ய­க­மிக்க நல்­லாட்­சி­யொன்றை ஏற்­ப­டுத்­து­வ­தே­யாகும். எனவே, ஊழல் மிக்க ஆட்­சியா? அல்­லது நல்­லாட்­சியா? என்­பதை மக்­களே இந்த சந்­தர்ப்­பத்தில் தீர்­மா­னிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்

  சிறிய தேயிலை தோட்ட உரி­மை­யா­ளர்­க­ளுக்கு நிதி நிவா­ரண வழங்கும் வைபவம் நேற்று முற்­பகல் 11 மணி­ய­ளவில் நாவ­லப்­பிட்­டியில் இடம்­பெற்­றது. அந்­நி­கழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய போதே பிர­தமர் இதனை தெரி­வித்தார்.

  அங்கு அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

  நல்­லாட்­சிக்­கான புரட்­சியை கடந்த ஜன­வரி 8 ஆம் திகதி நாம் ஆரம்­பித்தோம். அதனை தொடர்ந்தும் முன்­னெ­டுத்துச் செல்­வதே எமது நோக்கம். மஹிந்த ராஜபக் ஷ பிர­தமர் வேலட்­பா­ள­ராக போட்­டி­யி­டட்டும். அவரின் சிந்­த­னைகள் மற்றும் மீள் எழுச்­சியை நாம் குழி­தோண்டிப் புதைப்போம்.

  கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது நாம் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றி­யுள்ளோம். தொடர்ந்தும் அவ்­வாறே செயற்­ப­டுவோம். இந்த நாட்டில் பல கட்சி ஆட்­சி­மு­றை­யொன்று இருக்க வேண்டும் என்­ப­தையும் நாம் விரும்­பு­கின்றோம். எதிர்­வரும் தேர்­தலில் சில கட்­சி­களை இணைத்துக் கொண்டு நாம் போட்­டி­யி­டு­கின்றோம். அதே­போன்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் போட்­டி­யி­டு­கின்­றன.

  ஊழல் இல்­லாத நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­து­வதே எமது நோக்­க­மா­க­வுள்­ளது. அதற்­கா­கவே கடந்த ஜன­வரி எட்டாம் திகதி நாம் கூட்­டாக இணைந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வெற்­றி­பெறச் செய்தோம். அப்­போது அமைக்­கப்­பட்ட கூட்­ட­ணியின் உண்­மை­யான நோக்கம் ஊழல் மிக்க மஹிந்த ஆட்­சியை இல்­லா­தொ­ழிப்­ப­தே­யாகும் என்­பதை தெளி­வாகக் கூறி­யி­ருந்தோம்.

  இன்று எமது நாட்­டிற்குத் தேவை நல்­லாட்­சி­யுடன் கூடிய சமூக, பொரு­ளா­தா­ர­மிக்க சூழல் ஒன்றே. இத­னையே மக்கள் எதிர்­பார்த்­துள்­ளார்கள். இதனை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கே மஹிந்த ராஜபக் ஷவும் அவ­ரது அணி­யி­னரும் முயற்­சிக்­கின்­றனர்.

  பாரா­ளு­மன்­றத்தில் இருந்த பெரும்­பான்­மையை கொண்டு 19 ஆவது திருத்­தச்­சட்­டத்தில் காணப்­பட்ட முக்­கிய விட­யங்கள் பல­வற்றை மஹிந்த ராஜபக் ஷ இல்­லா­தொ­ழித்தார். ஆனால் நாம் அவ்­வா­றில்­லாமல் நாட்­டி­னதும் நாட்டின் எதிர்­கா­லத்­தையும் கருத்திற் கொண்டே செயற்­பட்டு வரு­கின்றோம்.

  தேர்­தலின் பின்னர் சகல கட்­சி­க­ளையும் ஒன்­றி­ணைத்துக் கொண்டு ஆட்­சி­ய­மைப்­பதே எமது நோக்கம். அவ்­வாறு இணைந்து கொள்­ளாத கட்­சி­க­ளையும் நாட்டின் அபி­வி­ருத்­தியில் பங்­கா­ளர்­க­ளாக சேர்த்­துக்­கொண்டு பிர­தே­சங்­களை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு அவர்­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­குவோம்.

  நாட்டை அவ­பி­வி­ருத்தி செய்ய வேண்­டு­மாயின் புதிய ஜன­நா­யக முறை­யொன்றும் நிரந்­த­ர­மான செயற்­றிட்­டமும் தேவை. இதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டே நாட்டை அபி­வி­ருத்தி செய்ய முடியும். நாட்டின் அபி­வி­ருத்திப் பணியை அடிப்­ப­டை­யாகக் கொண்டே நாம் தேர்தலை எதிர்கொண்டுள்ளோம்.

  இதனை கருத்திற் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும்பான்மை பலத்தை பெற்றுத் தாருங்கள். அதன் பின்னர் நாம் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களையும் நாட்டின் அபிவிருத்தியையும் சிறப்பாக முன்னெடுப்போம். அதற்காக சகல மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மஹிந்தவின் மீள் எழுச்சியை குழிதோண்டி புதைப்பதே எமது நோக்கம் - பிரதமர் ரணில் தெரிவிப்பு Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top