Breaking News

மஹிந்தவிடம் நாட்டை ஒப்படைத்தால் பாரிய குழப்­பத்­திற்கு உள்­ளாகும் - ரணில் எச்சரிக்கை

மஹிந்­த­ – மைத்­திரி உறவில் விரிசல் காணப்­படும் நிலையில் மஹிந்­த­விடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்­ப­டைத்தால் நாடு பாரிய குழப்­பத்­திற்கு உள்­ளாகும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எச்சரித்தார்.

எனவே, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­தி­ய­தனை போன்று நாட்டை சிறந்த பாதைக்கு ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யினால் மாத்­தி­ரமே கொண்டு செல்ல முடியும். ஆகையால் பெரும்­பான்மை பலத்தை எம்­மிடம் ஒப்­ப­டை­யுங்கள், 60 மாதங்­களில் புதிய நாட்டை உரு­வாக்கித் தருவோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பொரளை தொகுதி அமைப்­பா­ளரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் கொழும்பு மாவட்ட வேட்­பா­ள­ரு­மான ஜயந்த டி சில்­வாவின் ஏற்­பாட்டில் நேற்று மாலை பொரளை சந்­தியில் இடம்­பெற்ற பிர­சாரக் கூட்­டத்தில் பேசும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில், தற்­போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ பிர­தமர் கனவு காண்­கின்றார். இருந்­த­போ­திலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன

மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு பிர­தமர் பதவி வழங்­கப்­படமாட்­டாது என்று உறு­திப்­பட கூறி­யுள்ளார். இத்­த­கைய நிலையில் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் எவ்­வாறு பிர­த­ம­ராக முடி­யாது. அதனை மீற மஹிந்த ராஜ­ப­க்ஷ­விடம் ஆட்சி பொறுப்பை ஒப்­ப­டைத்தால் நாட்டை பாது­காக்க முடி­யாது. ஆகவே மஹிந்­த-­மைத்­திரி உறவில் விரிசல் காணப்­படும் நிலையில் மஹிந்­த­விற்கு ஆட்சி பொறுப்பை ஒப்­ப­டைத்தால் நாடு பாரிய குழப்­பத்­திற்கு உள்­ளாகும்.

அது மாத்­தி­ர­மின்றி பாரா­ளு­மன்றம் பிள­வ­டைந்து ஒன்­றுமே செய்­வ­தற்கு இய­லாது. நாடு என்றும் இல்­லாத அள­விற்கு பாரிய குழப்­பங்­க­ளுக்கு உள்­ளாக நேரிடும். எனவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­தி­ய­தனை போன்று நாட்டை சிறந்த பாதைக்கு ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யினால் மாத்­தி­ரமே கொண்டு செல்ல முடியும். ஆகையால் பெரும்­பான்மை பலத்தை எம்­மிடம் ஒப்­ப­டை­யுங்கள் 60 மாதங்­களில் புதிய நாட்டை உரு­வாக்கி தருவோம்.

இம்­முறை பாரா­ளு­மன்ற தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை மிகவும் அமை­தி­யா­ன­தா­கவும் நியா­ய­மா­ன­தா­கவும் நடைப்­பெற்று வரு­கின்­றது. சுமார் பத்து வரு­டங்­களின் பிறகு இத்­த­கைய நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. மேலும் தேர்தல் பிர­சா­ரங்­களின் போது ஆளும் மற்றும் எதிர்க்­கட்­சி­க­ளி­டையே போட்­டி­களோ மோதல்­களோ காண­மு­டி­கின்­றமை அரி­தா­கவே உள்ளது.

மேலும் சுவ­ரொட்­டிக்­களை அவ­தா­னிக்க முடி­கின்­றமை குறை­வா­கவே இருக்­கின்­றது. தேர்தல் சட்­ட­வி­தி­மு­றை­களை உரிய வகையில் நிறை­வேற்றுவதற்கு முழு­மை­யான சுதந்­திரம் காணப்­ப­டு­கின்­றது.

தேர்தல் சட்­டத்தை நிலை­நாட்­டு­வது தொடர்­பி­லான சட்­ட­ரீ­தி­யான உத்­த­ர­வினை ஜனா­தி­ப­தியோ அல்­லது பிர­த­மரோ வழங்­கு­வ­தில்லை. அதற்கு மாறாக தேர்தல் ஆணை­யா­ளரே இது குறித்­தான உத்­த­ர­வினை வழங்­கு­கின்றார். இவ்­வா­றா­ன­தொரு சுதந்­திரம் வழங்­கப்­ப­டு­கின்­றது.

ஜன­வரி 8 ஆம் திகதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­பதி கதி­ரையில் அமர்த்­தி­யதன் ஊடாக நல்­லாட்­சியை உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளோம். அர­சியல் கட்­சி­களையும் அர­சி­யல்­வா­தி­களும் சட்­டத்­திற்கு அடிப்­ப­ணிய வைத்­துள்ளோம். சட்­டத்தின் ஆட்சி இம்­முறை தேர்­தலின் போது உரிய முறையில் பாது­காக்­கப்­ப­டு­கின்­றது. இது ஜன­வரி 8 ஆம் திகதி நாம் பெற்றுக் கொண்ட ஜன­நா­யக புரட்­சிக்கு கிடைத்த பாரிய வெற்­றி­யாகும்.

ஆகவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான புரட்­சியை முன்­ந­கர்த்த வேண்­டி­யுள்­ளது. இந்­நி­லையில் ஆகஸ்ட மாதம் 17 ஆம் திகதி இதற்­கான முக்­கிய தீர்­மா­னங்­களை எடுக்­க­வேண்­டி­யுள்­ளது. இதற்­கான சந்­தர்ப்பம் நாட்டு மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இதன்­பி­ர­காரம் ஜன­வரி 8 புரட்­சியை தொடர்ந்து கொண்டு சென்றால் நாட்டில் வெள்ளைவேன் கலா­சாரம், ஊழல் மோசடி, போதைப்­பொருள் பாவனை உள்­ளிட்­டவை முற்­றாக ஒழிக்­கப்­பட்டு நாடு நல்­லாட்சி ஏற்­ப­டுத்­தப்­பட்டு சட்டம் நிலை­நாட்­டப்­பட கூடிய சூழல் உரு­வாகும்.

60 மாதங்­களில் புதிய இலங்­கையை உரு­வாக்க முடியும். அதற்­கான திட்­டங்­களை நாம் முன்­வைத்­துள்ளோம். பொரு­ளா­தாரம் , அபி­வி­ருத்தி நாடு வேக­மான முறையில் பய­ணித்து வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்­க­ளுக்கு சிறப்­பா­ன­தொரு வாழ்க்கையை வாழமுடியும். சுதந்திரமான தமது கருத்துக்களை தெரிவிக்க முடியும். முழு நாடுமே எதிர்பார்த்திராத அளவிற்கு புதிய இலங்கையை பெற்று தர முடியும்.

ஜனவரி 8 புரட்சியை உறுதிப்படுத்துவதற்கு மாறாக வாக்களித்தால் திருட்டு கும்பலின் ஆதிக்கம் அதிகரித்து, அரச குடும்பம் சுவர்க்கலோகத்தை பெற்று சுகபோக வாழக்கையை அனுபவிப்பார்கள். ஆனால் நாட்டில் வாழும் சாதாரண குடும்பம் துன்பங்களை எதிர் கொள்ள நேரிடும் என்றார்.