தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 732 முறைப்பாடுகள் - THAMILKINGDOM தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 732 முறைப்பாடுகள் - THAMILKINGDOM

  • Latest News

    தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 732 முறைப்பாடுகள்

    தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து இது வரையில் 732 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

    அதிக படியாக 122 முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாடு பிரிவு தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 44 முறை்ப்பாடுகளும் , கம்பஹா மாவட்டத்தில் 31 முறைப்பாடுகள் குருநாகல் 39 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளது.

    இதனிடையே தேர்தல் அறிவித்ததன் பின்னர் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்ட பதவி உயர்வுகள் புதிய நியமனங்கள் என்பன குறித்து கிடைத்துள்ள எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகும் முறைப்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது .

    இந்த விடயங்கள் குறித்து 164 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன இதேவேளை சட்டவிரோதமாக தேர்தல் பிரசார சுவரோட்டிகள் ஒட்டுகள் மற்றும் பதாகைகள் காட்சிப்படுத்தல் என்பன குறித்து 156 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாடு பிரிவு தெரிவித்துள்ளது.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 732 முறைப்பாடுகள் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top