கூட்டமைப்புக்குள்ளே துரோகிகளை நிராகரியுங்கள்-அனந்தி(காணொளி)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயும் அரசிற்கு
ஆதரவாகவும் தமிழ்த் தேசியத்திற்கு எதிராகவும் செயற்படும் நபர்களை மக்கள் இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்.  அவர்கள் இனவழிப்பு தீர்மானத்திற்கு எதிராக அறைமுகமாக செயற்பட்டதாகவும் தெரிவித்த வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்கள் அவர்களை இனங்கண்டு மக்கள் அவர்களை எதிர்வரும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார் அவருடனான செவ்வி இணைக்கப்படுகின்றது.
முன்னர் வடமாகாணசபை அனுமதியுடன் ஜெனீவா சென்ற அனந்தியை அங்கு உரையாற்றினால் நீங்கள் விடுதலைப்புலியின் மனைவி என்பதால் உங்கள் உரையை வெளிநாடுகள் வித்தியாசமாக பார்க்கும் எனவே நீங்கள் உரையாற்ற வேண்டாம் என தேசியப்பட்டியல் எம்.பி சுமந்திரன் தடுத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
 

 
 
 
 
 
 











