15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதிய சாதனை படைத்தார் கமல் ! - THAMILKINGDOM 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதிய சாதனை படைத்தார் கமல் ! - THAMILKINGDOM
 • Latest News

  15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதிய சாதனை படைத்தார் கமல் !

  திரையுலகில் சாதனைக்கு மேல் சாதனை படைப்பவர் கமலஹாசன். படத்துக்குப்படம் புதிய பரிமாணத்தில் வந்து அசத்துகிறார்.

  ஆரம்ப காலத்தில் கமல் நடித்த படங்கள் ஒரே வருடத்தில் 5 முதல் 7 வரை ரிலீஸ் ஆகி இருக்கின்றன. பின்னர் அவர் தனது வேடத்தில் தீவிர கவனம் செலுத்தியதால் வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள்தான் வெளியாகின.

  நீண்ட இடைவெளிக்குப்பிறகு கமல் திரைப்படங்கள் வெளியாகும் வேகம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஏற்கனவே ‘உத்தமவில்லன்’, பாபநாசம் ஆகிய படங்கள் வெளிவந்து விட்டன.இப்போது, ‘தூங்காவனம்’ படப்பிடிப்பும் முடிந்து விட்டது. தொழில் நுட்ப வேலைகளும் தொடங்கி விட்டன. இந்த படமும் இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் ரிலீஸ் ஆகிவிடும் என்று இந்த படக்குழுவினர் உறுதியாக தெரிவிக்கின்றனர்.

  15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு கமலின் 3 படங்கள் வெளியாதை அவரது ரசிகர்கள் சாதனையாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதிய சாதனை படைத்தார் கமல் ! Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top