Breaking News

பரஸ்பர அடிப்படையில் இலங்கை - இந்திய மீனவர்கள் விடுதலை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேசினி கொலன்ன தெரிவித்துள்ளார். 

இலங்கையால் கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 120 பேர் உள்ளனர், அதேபோல் இந்தியாவில் கைதான இலங்கை மீனவர்கள் 36 பேர் உள்ளனர், இவர்களை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் இது குறித்த நடவடிக்கைகள் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மஹேசினி கொலன்ன, கூறியுள்ளார். 

அத்துடன் இது முற்றிலும் மனிதாபிமான அடிப்படையிலான நடவடிக்கை ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

எதுஎவ்வாறு இருப்பினும் திங்கட்கிழமை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நவம்பர் முதல் வாரம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 34 பேரும் இந்த எண்ணிக்கையில் அடங்குவார்களா, என்பது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தௌிவான விளக்கத்தை வழங்கவில்லை.