சமந்தாவின் கேட்ட ஒரு கேள்வியும் இரு பதில்களும் - THAMILKINGDOM சமந்தாவின் கேட்ட ஒரு கேள்வியும் இரு பதில்களும் - THAMILKINGDOM
 • Latest News

  சமந்தாவின் கேட்ட ஒரு கேள்வியும் இரு பதில்களும்

   அமெரிக்காவின் “பவர்” வந்துபோய்விட்டாலும்,
  அவர் கொடுத்த அதிர்வுகள் இன்றும் இலங்கை அரசியலரங்கில் எதிரொலித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

  யாழ்ப்பாணத்தில் முதலமைச்சரை சந்தித்த பவர், கொழும்பு திரும்பியவுடன் சாம் ஐயா தலைமையிலான குழுவினரைச் சந்தித்தார். இந்த இரு இடங்களிலும் அவர் ஒரே கேள்வியாத்தான் முதலில் கேட்டார். ஒரேவிதமான பதிலை அவர் எதிர்பார்த்தாரோ தெரியவில்லை இரண்டு விதமான பதில்கள் அவருக்குக் கிடைத்தன. 

  “தமிழர்களுடைய பிரச்சினையைப் பொறுத்தவரையில் புதிய அரசாங்கம் திருப்திகரமாகச் செயற்பட்டுள்ளதா?” என்பதுதான் அவருடைய கேள்வி. 

  முதலமைச்சர் ஒரே சொல்லில் பதிலளித்தார்: “நத்திங்“! “நத்திங்?” 

  பவர் ஆச்சரியமாகக் கேடட்டார். “ஆளுநர் மாற்றம், செயலாளர் மாற்றம் என சிலவற்றைச் செய்திருந்தாலும், காணிவிடுவிப்பு, இராணுவக் குறைப்பு மற்றும் மாகாண சபைக்கான அதிகாரங்களை வழங்குதல் போன்வற்றில் முன்னேற்றமில்லை” என இதற்கு முதல்வர் நீண்ட விளக்கம் கொடுத்தார் முதல்வர். 

  சாம் ஐயாவிடமும் அதேகேள்வி: 

  “பல விடயங்களில் முன்னேற்றம் உள்ளது. அவர்கள் ஆளுநரை மாற்றியுள்ளார்கள். காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படுகின்றது. மற்றக் கருமங்களையும் அவர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது” என்ற விதமாக ஐயா விளக்கம் கொடுத்தார். 

  பவர் மூன்று நாள் விஜயத்தில் என்னத்தைப் புரிந்துகொண்டாரோ இல்லையோ, நீதியசரையும் சட்டத்தரணிமாரையும் ஒரே அலைவரிசையில் கொண்டுவருவது மட்டும் சிரமம் என்பதைப் புரிந்துகொண்டிருப்பார்.  ஐ. நாவுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் twitterஇல் சொல்லும் செய்தி:

  1. மங்கள இலங்கை மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் 'எனது நண்பர்'. 

  2. முதலமைச்சர் நல்லிணக்கத்திற்கான இந்த தருணத்தை உறுதி செய்ய உதவ வேண்டுமென 'வலியுறுத்தினேன்'.

  3. சம்பந்தன் ஐயா தேசிய கருத்தொற்றுமை மூலம் தமிழர் உரிமைகளை வென்றெடுக்கிறார். யாரை நண்பன் என்கிறார், யாரை தட்டிக் கொடுக்கிறார், யாருக்கு எதனை வலியுறுத்தி சொல்கிறார் என்பதை கவனியுங்கள்.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சமந்தாவின் கேட்ட ஒரு கேள்வியும் இரு பதில்களும் Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top