தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விஷேட நீதிமன்றம் இன்றுமுதல் இயக்கம் - THAMILKINGDOM தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விஷேட நீதிமன்றம் இன்றுமுதல் இயக்கம் - THAMILKINGDOM
 • Latest News

  தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விஷேட நீதிமன்றம் இன்றுமுதல் இயக்கம்  பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் மீதான விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக அரசாங்கம் அமைத்த விஷேட நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) முதல் இயங்கவுள்ளது.

  வழக்குகளை விசாரிப்பதற்காக சட்டத்துறையில் சுமார் 30 வருட கால அனுபவம் கொண்ட ஐராங்கனி பெரேரா நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

  பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் எவ்வித வழக்கு விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதோடு, இவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தை அடுத்து இந்த நீதிமன்றம் நியமிக்கப்பட்டுள்ளது.

  பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சுமார் 215 தமிழ் அரசியல் கைதிகள், பல வருட காலமாக நாடாளாவிய ரீதியில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 39 பேருக்கு அண்மையில் அரசாங்கம் பிணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விஷேட நீதிமன்றம் இன்றுமுதல் இயக்கம் Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top