Breaking News

தமிழ் மக்கள் பேரவை -சிறிதரனுக்கு உடன்பாடில்லை ?(காணொளி)

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை
தொடர்பில் மௌனம் காத்து வந்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் அந்த பேரவை தொடங்கப்பட்டது தொடர்பில் இன்று கலந்துகொண்ட நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டுள்ளார்.

எங்களிடம் மனச்சஞ்சலம் ஏற்படுகின்றபோது ரணில் விக்கிரமசிங்கவுக்கு அல்லது சிங்கள இனவாத அரசியலை நடத்துகின்றவர்களுக்கு மகிழ்ச்சியான விடயமாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். 

யாழ்ப்பாணம் – கச்சாய் பொது நூலகத்தில் இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ”தமிழ்தேசியக் கூட்டமைப்பு என்பது கூட, பலமான சக்தியாக இருக்கின்றபோது தான், நாங்கள் மக்கள் தந்த ஆணையோடு நடக்கின்றபோது தான், ஏனையவர்களும் எங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். 

ஏனெனில் ஆசியாக் கண்டத்தில் இலங்கை கேந்திர நிலையத்தில் அமைந்துள்ளது. உலகத்தில் எல்லா நாடுகளுக்கும் இலங்கை பற்றிய தேடல் இருக்கிறது. இலங்கையில் சீனா தனக்குச் சார்பான கட்சியை வைத்திருக்கும். இந்தியா தனக்குச் சார்பான சிலரை உருவாக்க முனையும். அமெரிக்கா தனக்குச் சார்பானவர்களை உருவாக்க முனையும். ஆனால் இந்த உருவாக்கங்களுக்கு ஊடாக எங்களை நாங்களாக நிலைநிறுத்திக் கொள்ள முடியும். 

நாங்கள் வரலாற்று ரீதியாக பலதுயரங்களோடு வந்தவர்கள். ஏகப்பட்ட வலிகளைச் சுமந்தவர்கள். இவற்றுக்கூடாக, விடுதலை பற்றிய, மற்றும் விடிவு பற்றிய பேச்சுகள் எடுபடுகின்றபோது, இலங்கையிலே புதிய அரசியல் யாப்பு கொண்டு வரப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றபோது, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா போன்ற நாடுகள் இந்த விடயத்தில் கூடிய கரிசனை கொள்ளுகின்றபோது இலங்கையிலும் சந்திரிக்கா குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, எங்களுடைய கட்சி இதனை விட சர்வதேச நிபுணர்களையும் உள்ளடக்கி இந்த புதிய அரசியல் யாப்பைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 



இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றபோதுதான் எங்களிடம் மனச்சஞ்சலம் - குழப்பங்கள் ஏற்படப்பார்க்கின்றன. இது ரணில் விங்கரமசிங்கவைப் பொறுத்தவரை அல்லது சிங்கள இனவாத அரசியலை நடத்துபவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருக்கூடிய விடயம். எங்களை உடைத்துச் சிதறப்பண்ணி எங்களுடைய பேரம் பேசும் சக்தியை இல்லாமல் செய்ய முனைபவர்களுக்கு மகிழ்ச்சியாக அமையும். நாங்கள் இந்த நேரத்தில் எங்களுடைய கால்களை நிதானமாக வைக்க வேண்டும். இந்தக் காலத்தை சரியாக பயன்படுத்தத் தவறினால் நாங்கள் அழிவதைத் தவிர வேறொன்றும் இருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய முன்னைய பதிவுகள்

தலைவர் பிரபாவிற்கு பிறகு காலத்தின் பதிவே விக்கினேஸ்வரன் -சிறீதரன்(காணொளி)