அதியுச்ச அதிகாரப்பகிர்வு - கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இணக்கம் - THAMILKINGDOM அதியுச்ச அதிகாரப்பகிர்வு - கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இணக்கம் - THAMILKINGDOM
 • Latest News

  அதியுச்ச அதிகாரப்பகிர்வு - கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இணக்கம்


  புதிய அர­சியலமைப்பில் தமிழ்,முஸ்லிம் சமூகங்களின் உரி­மைகள், அபி­லா­ஷைகள், நலன்­களை அதி­யுச்ச அதி­கா­ரப்­ப­கிர்வின் ஊடாக பெற்­றுக்­கொள்­வ­தற்­காக ஒரு­மித்த கருத்தை முன்­வைப்­பதற்கு தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் இடையே இணக்கம் ஏற்­பட்­டுள்­ளது.

  இலங்கை ஜன­நா­யக சோச­லிஸ குடி­ய­ரசின் புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கப்­ப­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் அடுத்­த­ வ­ருடம் முன்­னெ­டுக்­கப்படவுள்ளன.இந்நிலையில் தமிழ்,முஸ்லிம் தேசிய சமூ­கங்­களின் பிர­தி­நி­தித்­து­வங்கள், இருப்­புக்கள், பூரண பாது­காப்பு மற்றும் நீடித்த – நிலை­யான அர­சியல் தீர்வு போன்­ற­வற்றைக் கருத்­தில்­கொண்டு எடுக்­கப்­ப­ட­வேண்­டிய நட­வ­டிக்­கைகள் குறித்து எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கும் இடை­யி­லான முக்­கிய சந்­திப்பு நேற்று நடை­பெற்­றது.

  கொழும்பு –07இல் அமைந்­துள்ள எதிர்க்­கட்சித் தலை­வரின் உத்­தி­யோ­க­பூர்வ அலு­வ­ல­கத்தில் நேற்று நண்­பகல் நடை­பெற்ற மேற்­படி சந்­திப்­பி­லேயே மேற்­கண்ட இணக்­கப்­பாடு எட்டப்பட்டது. அத்­துடன் நேற்­றைய தினம் முதற்­கட்­ட­மாக இச்­சந்­திப்பு

  இடம்­பெற்­றி­ருந்­த­தோடு தொடாந்தும் சந்­தி­புக்­களை மேற்­கொண்டு விரி­வான பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுப்­ப­தெ­னவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

  சுமார் ஒரு மணி­நே­ரத்­திற்கு மேலாக நடை­பெற்ற இச்­சந்­திப்பில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் அதன் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன், இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா, தமி­ழ­ர­சுக்­கட்­சியின் வெளிவி­வ­கா­ரங்­க­ளுக்­கான செய­லா­ளரும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழுக்­களின் ஊட­கப்­பேச்­சா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் ஆகி­யோர் கலந்துகொண்டனர்.

  அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் அதன் தலை­வரும் நீர்­வ­ழங்கல் வடிகால் அமைப்பு அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், கட்­சியின் பிரதிச் செய­லாளர் நாய­கமும் கல்­முனை மாந­கர சபை மேய­ரு­மான நிஸாம் காரி­யப்பர், கட்­சியின் வெளிவி­வ­காரப் பணிப்­பாளர் சட்­டத்­த­ரணி ஏ.எம்.பாயிஸ், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முத்­தலி பாவா பாறுக் ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

  இச்­சந்­திப்பு குறித்து தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுக்­களின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் கேச­ரிக்கு தெரி­விக்­கையில்,

  அடுத்த ஆண்டின் ஆரம்­பத்தில் இந்த நாட்டில் புரை­யோ­டிப்­போ­யி­ருக்கும் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்வு காண்­பது உட்­பட பல விட­யங்­களைக் கருத்­தில்­கொண்டு புதிய அர­சியல் அமைப்­பினை உரு­வாக்கும் செயற்­பா­டு­களை அர­சாங்கம் முன்­னெ­டுக்­க­வுள்­ளது.

  இவ்­வா­றான நிலையில் இந்த நாட்டின் சிறு­பான்மை தேசிய இனங்­க­ளா­கவும் ஒரு­மொ­ழி­பேசும் சமூங்­க­ளா­கவும் தமிழ் முஸ்லிம் சமு­கங்கள் காணப்­ப­டு­கின்­றன. அவ்­வா­றி­ருக்­கையில் அமைக்­கப்­ப­ட­வுள்ள புதிய அர­சியல் அமைப்பில் தமிழ் முஸ்லிம் சமு­கங்­க­ளுக்­கான அபி­லா­ஷைகள், அர­சியல் தீர்வு, உள்­ளிட்ட அனைத்து விட­யங்­க­ளிலும் ஒரு­மித்த கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்தும் முக­மாக இணக்­கப்­பா­டு­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் கலந்­து­ரை­யா­ட­யி­ருந்தோம்.

  குறிப்­பாக இச்­சந்­திப்பு அவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பது தொடர்­பான முதற்­கட்­ட­மா­கவே அமைந்­தது. எதிர்­கா­லத்தில் நாம் தொடர்ந்தும் அவர்­க­ளுடன் பேச­வுள்ளோம். அத­ன­டிப்­ப­டையில் உத்­தேச அர­சியல் அமைப்பு வரைபில் எமது சமு­கங்­க­ளுக்­கான அபி­லா­ஷைகள், உரி­மைகள், நலன்கள் தொடர்­பான விட­யங்­களை முன்­வைப்­பது குறித்து ஆராய்ந்து இறு­தி­செய்­ய­வுள்ளோம் என்றார்.

  அதே­நேரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிரதி செய­லா­ளரும் கல்­முனை மாநா­கர மேய­ரு­மான நிஸாம் காரி­யப்பர் சந்­திப்பு குறித்து  தெரி­விக்­கையில்,

  அர­சியல் அமைப்பு பணிகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் அதி­யுச்ச அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்­கத்தின் ஊடாக உரி­மை­களை, அபி­லா­ஷை­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக இணைந்து செயற்­படும். இதுதொடர்பில் தேசிய கட்­சி­க­ளு­டனும் பேச்­சுக்­களை முன்­னெ­டுப்­ப­தெ­னவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இன்­றைய சந்­திப்பு(நேற்று) அதன் ஆரம்­ப­மா­கவே உள்­ளது. எதிர்­கா­லத்தில் விரி­வான பேச்­சு­வார்த்­தைகள் மேற்­கொள்­ளப்­பட்டு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன என்றார்.

  அதே­நேரம் கிழக்கு மாகா­ணத்தில் கல்­முனை உட்பட மற்றும் சில பகுதிகளில் தமிழ் முஸ்லிம் எல்லைக்கிராமங்களில் நிலவிவருகின்ற பிரச்சினைக்களுக்கு நிரந்தர தீர்வை எட்டும் முகமாக உள்ளுர் மட்டத்தலைமைகள் மத்தியில் சுமுகமான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதெனவும் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

  இதேவேளை எதிர்வரும் 9ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாகமாற்றும் பிரேரணையை பாராளுமன்றில் சமர்ப்பித்து விசேட உரையாற்றவுள்ளார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: அதியுச்ச அதிகாரப்பகிர்வு - கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இணக்கம் Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top