ஜனவரி 4இல் அமைச்சரவை மாற்றம் - THAMILKINGDOM ஜனவரி 4இல் அமைச்சரவை மாற்றம் - THAMILKINGDOM
 • Latest News

  ஜனவரி 4இல் அமைச்சரவை மாற்றம்

  இலங்கை அமைச்சரவை வரும் ஜனவரி 4ஆம் திகதி மாற்றியமைக்கப்படவுள்ளதாக, அதிகாரபூர்வ அரசாங்க வட்டாரங்கள் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் உறுதிப்படுத்தியுள்ளன.

  இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, ஐதேக பொதுச்செயலர் கபீர் காசிம் மற்றும் முன்னாள் அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

  அரச தொழில்முயற்சிகள் அமைச்சராக இருக்கும், கபீர் காசிம் நி்தியமைச்சராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக இருந்த நான்கு பேர், வரும் 4ஆம் திகதி அரசாங்கத்தில் சேர்ந்து கொள்ளவுள்ளனர். இவர்களுக்கு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளன.

  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். அவர் வரும் ஜனவரி 2ஆம் திகதி நாடு திரும்புவார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.இதன் பின்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: ஜனவரி 4இல் அமைச்சரவை மாற்றம் Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top