Breaking News

தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்

சுதந்திரதின நிகழ்வுகளின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கம்பஹா – கௌனி கல்பொரல்ல பிரதேசத்தைச் சேர்ந்த வித்தானகே சஞ்ஜிய சுதத் பெரேரா, பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த பிரதீப் ஆசிரி சொய்ஸா மற்றும் கௌனியைச் சேர்ந்த தொன் பிரேமரத்ன ஆகியோரால் நேற்று(வெள்ளிக்கிழமை) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமையானது முற்றுமுழுதாக அரசியலமைப்பை மீறும் செயல் என மனுதாரர்கள் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மனுவில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பலரது எதிர்ப்புகளையும் மீறி சுதந்திர தின நிகழ்வின் போது தமிழ் மொழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.