ஒபாமா, கமரூன் போன்று விமான வசதிகளை அனுபவிக்க முயன்ற மஹிந்த - THAMILKINGDOM ஒபாமா, கமரூன் போன்று விமான வசதிகளை அனுபவிக்க முயன்ற மஹிந்த - THAMILKINGDOM
 • Latest News

  ஒபாமா, கமரூன் போன்று விமான வசதிகளை அனுபவிக்க முயன்ற மஹிந்த

  சர்­வ­தேச நாடு­களின் பிர­பல தலை­வர்­க­ளான பராக் ஒபாமா, சுல்தான் இள­வ­ரசர் மற்றும் டேவிட் கமரூன் ஆகியோரைப் போன்று விமா­னங்­களில் நட்­சத்­திர அறை­களை ஸ்தாபிக்கும் நோக்கில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ 4 பில்­லியன் அமெ­ரிக்க டொலரை செல­வி­டு­வ­தற்­காக எயார் லங்­கா­வுடன் ஒப்­பந்தம் செய்­திருந்ததாக சமூக நலன்­பு­ரிகள் இரா­ஜங்க அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க குற்றம் சுமத்­தினார்.

  எயார் லங்கா நிறு­வ­னத்­து­ட­னான ஒப்­பந்­தத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிரா­க­ரித்­துள்ள போதும் குறித்த நிறு­வ­னத்­திற்கு அர­சாங்கம் 1.4 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் செலுத்த வேண்­டி­யி­ருப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

  ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

  இரா­ஜங்க அமைச்சர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

  பிர­பல சர்­வ­தேச தலை­வர்­க­ளான பராக் ஒபாமா, சுல்தான் இள­வ­ரசர் மற்றும் டேவிட் கமரூன் ஆகி­ய­வர்­களின் விமான அறை­களை போன்று தான் பய­ணிக்கும் விமான அறை­களை புது­பிப்­ப­தற்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ எயார் லங்­கா­வுடன் ஒப்­பந்தம் செய்து கொண்­டுள்ளார். இத­னூ­டாக 4 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் செல­விட திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.

  தற்­போது எயார் நிறு­வ­னத்­து­ட­னான ஒப்­பந்­தத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிரா­க­ரித்­துள்ள போதிலும் குறித்த நிறு­வ­னத்­திற்கு அர­சாங்கம் 1.4 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் செலுத்த வேண்­டி­யுள்­ளது.

  நாட்டு மக்கள் பல்­வேறு துன்­பங்­களை அனு­ப­வித்து வரும் சூழலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தன்­னு­டைய வெளி­நாட்டு பயணம் எப்­படி இருக்க வேண்டும் என்­பது பற்­றியே சிந்­தித்­துள்ளார். இதற்­காக பல கோடிக்­க­ணக்­கான மக்­களின் பணம் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளது. மக்கள் மூவேளை சாப்­பிட முடி­யாமல் இருக்கும் தரு­வாயில் மஹிந்த ராஜ­பக்ஷ உலகின் பிர­ப­லங்­களை போன்று வாழ்­வ­தற்கு முனைந்­துள்ளார்.

  இதன்­படி விமா­னத்தில் நட்­சத்­திர அறை­களை ஸ்தாபிப்­ப­தற்கு 4 அமெ­ரிக்க டொலர் பில்­லியன் கணக்கில் எயார் லங்கா சேவை­யுடன் ஒப்­பந்தம் செய்­துள்ளார். இவை அனைத்தும் மக்­க­ளு­டைய பண­மாகும். இவ்­வாறு மக்­களின் பணத்தின் மீது ஆசை கொண்­டதன் பய­னா­கவே தற்­போது சிறைச்­சாலை மற்றும் நீதி­மன்ற வளா­கங்கள் மீது காலடி எடுத்து வைக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

  இதே­வேளை ராஜ­பக்ஷ குடும்­பத்­தி­ன­ரையும் அவ­ருக்கு சார்­பாக செயற்­ப­டு­ப­வர்­க­ளையும் கைது செய்­யாமல் இருப்­ப­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் டீல் செய்­தி­ருப்­ப­தாக குற்றம் சுமத்­தி­யி­ருந்­தனர். எனினும் தற்­போது யோசித்த ராஜ­பக்ஷ கைது செய்­யப்­பட்­டுள்ளார். அது­மாத்­தி­ர­மின்றி வர­லாற்றில் முதற்­த­ட­வை­யாக இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழு­வினால் பிர­பல அர­சி­யல்­வா­திகள் கைது செய்­யப்­பட்­டுள்­ளமை இதுவே முதற்­த­ட­வை­யாகும்.

  அது­மாத்­தி­ர­மின்றி நேற்றைய தினம் மஹிந்தானந்த அளுத்கமகே தொடர்பாகவும் விசாரணை செய்யப்பட்டது. இதன்படி பசில் ராஜபக்ஷ, சஜின் வாஸ் குணவர்தன, சரண குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர். எனவே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டே தீருவார்கள். குற்றவாளிகளை தப்பிக்க விட வேண்டிய தேவை எமக்கு கிடையாது என்றார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஒபாமா, கமரூன் போன்று விமான வசதிகளை அனுபவிக்க முயன்ற மஹிந்த Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top