Breaking News

புதிய அரசியலமைப்பின் மூலம் பொருத்தமான அதிகாரப்பகிர்வு உறுதிப்படுத்தப்படும்!

நாட்டின் ஒரு­மைப்­பாட்­டிற்கும் ஐக்­கி­யத்­திற்கும் பாதிப்பு ஏற்­ப­டாத வகையில் அதி­கா­ரத்தை பகிர்ந்­த­ளிக்­க­வுள்ளோம். உலக நாடு­களில் பல்­வே­று­வ­கை­யி­லான அதி­கார பகிர்ந்­த­ளிப்­புகள் அமுலில் உள்­ளன. இருந்­த­போ­திலும் புதிய அர­சி­ய­ல­மைப்பில் இலங்­கைக்கு ஏற்­றதும் பொருத்­த­மா­ன­து­மான அதி­கார பகிர்ந்­த­ளிப்பை முன்­னெ­டுப்போம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

நாம் அனை­வ­ரையும் ஒன்­றி­ணைத்து பய­ணிக்­கவே திட்­ட­மிட்­டுள்ளோம். எமது பய­ணத்தை முறி­ய­டிக்க நினைப்­பவர் உண்­மை­யான பௌத்தர் கிடை­யாது. விகா­ரை­க­ளுக்கு செல்­வது மாத்­திரம் பௌத்தம் கிடை­யாது. அடுத்த பாரா­ளு­மன்ற நட­வ­டிக்­கை­களின் போது உண்­மை­யான பௌத்­தர்­களை இணங்­கண்டு கொள்­ள­மு­டியும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான விசேட செய­ல­மர்வு நேற்று பத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள வோட்டர் ஏஜ் ஹொட்­டலில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இந்த செய­ல­மர்வில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்ற ஆலோ­சனைக் குழுக்­களின் பிர­தி­நி­திகள் உத்­தி­யோ­கத்­தர்கள் உள்­ளிட்ட பலர் கலந்­து­கொண்­டனர்.

அங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்

எதிர்­வரும் 2017 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்­றத்தின் 70 ஆவது நிறை­வாண்டு விழா கொண்­டா­டப்­ப­ட­வுள்­ளது. இதன்­படி அடுத்த வருடம் அளவில் நாட்­டிற்கு தேவை­யான புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரித்து நிறை­வேற்ற முடியும் என்று நம்­பு­கின்றேன். இதற்­காக பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யாக மாற்றி அதற்­கான வேலைத்­திட்­டங்­களை ஆரம்­பித்­துள்ளோம். அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபையின் இறுதி அறிக்­கையை சம­ரப்­பித்து அதற்­கான அனு­ம­தியை பாரா­ளு­மன்­றத்­திடம் கோருவோம். இதே­வேளை புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் 70 வரு­ட­கால அணு­கு­மு­றை­களை இது வரைக்­காலம் பின்­பற்­றி­வந்­துள்ளோம். எனினும் இம்­முறை அர­சி­ய­மைப்பு உரு­வாக்கம் முற்­றிலும் மாற்­ற­மா­ன­தாக அமையும்.

1943 ஆம் ஆண்டின் போது அரச மந்­தி­ரிகள் சபை கபினட் முறை­மை­யி­லான அர­சி­ய­ல­மைப்­பினை கோரி­யி­ருந்­தது. இதன்­படி உலக யுத்தம் நிறை­வ­டைந்த பின்னர் குறித்த அர­சி­ய­ல­மைப்­பினை வழங்­கு­வ­தாக பிரித்­தா­னியா எமக்கு உறு­தி­ய­ளித்­தது. அந்­த­வ­கை­யி­லேயே இலங்­கையின் முத­லா­வது குடி­ய­ரசு யாப்பு பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்ட போதிலும் அதற்­கான எந்­த­வொரு அனு­ப­வமும் எமக்கு இருக்­க­வில்லை. இருந்­தாலும் அப்­போ­தைய அர­சாங்­கத்­திற்கு மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை பலம் இருந்­தது. இரண்­டா­வது குடி­ய­ரசு யாப்­பிலும் அவ்­வா­றான நிலைமை காணப்­பட்­டது. இந்த இரண்டு அர­சி­ய­ல­மைப்­பிற்கும் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை காணப்­பட்­டது. 

ஆனாலும் குறித்த அர­சி­ய­ல­மைப்­பு­களில் பல்­வேறு குறை­பா­டுகள் நில­வு­கின்­றன. அதே­போன்று அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்­தச்­சட்டம் தொடர்­பி­லான வேலைத்­திட்­டத்தின் போது சுதந்­திரக் கட்­சியை தவிர அனைத்து கட்­சி­களும் கலந்து கொண்­டி­ருந்­தன. இதன்­போது ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யினர் கலந்­து­கொண்­டி­ருந்தால் 1988 ஆம் ஆண்டு தேர்­தலின் போது சுதந்­திரக் கட்­சி­யினால் பல்­வேறு மாகாண சபை­களை வெற்­றிக்­கொள்ள முடிந்­தி­ருக்கும். இது தொடர்பில் அவர்கள் சிந்­திக்­க­வில்லை.

இந்­நி­லையில் தற்­போ­தைக்கு புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­காக எந்­த­வொரு கட்­சிக்கும் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை கிடை­யாது. இதன்­கா­ர­ண­மாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் தேசிய அர­சாங்­கத்தை நிறு­வி­யுள்ளோம். இது­வரைக் காலம் அல்­லாமல் இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைந்­துள்­ளன. ஜனா­தி­பதி தேர்­தலின் போது ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்டி ஐக்­கி­யத்தை நிலை­நாட்­டு­மாறு மக்கள் வழங்­கிய ஆணைக்கு மதிப்­ப­ளிக்கும் முக­மா­கவே இந்த பய­ணத்தை நாம் ஆரம்­பித்து தேசிய அர­சாங்­கத்தை நிறு­வினோம்.

அர­சி­ய­ல­மைப்­பிற்­கான வரைபு கிடை­யாது

இதற்­க­மைய அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபையின் ஊடாக அனைத்து கட்­சி­களும் ஒன்­றி­ணைந்­துள்­ளன. இந்­நி­லையில் தற்­போது அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் அர­சாங்­கத்­தினால் வரைபு தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை. அதே­போன்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியோ அல்­லது ஐக்­கிய தேசியக் கட்­சியோ வரைபு தயா­ரிக்­க­வில்லை. எனவே தற்­போ­தைக்கு எம்­மிடம் எந்­த­வொரு வரைபும் கிடை­யாது.

நிர்­ணய சபைின் பிர­தான குழு நிய­மனம்

எதிர்­வரும் ஐந்தாம் திகதி பாரா­ளு­மன்ற நிர்­ணய சபைக்­கான பிர­தான குழுவை நிய­மிக்­க­வுள்ளோம். இதன்­பின்னர் வரைபு தொடர்பில் தீர்­மா­னங்­களை எடுக்க முடியும். மக்­களின் அபி­லா­ஷை­களே மிகவும் முக்­கி­ய­மாகும். இதற்­க­மைய மக்­களின் அபி­லா­ஷை­களை மூன்று வித­மாக வகைப்­ப­டுத்த முடியும். நாம் அனை­வரும் இலங்­கையர் என்ற சகோ­த­ரத்­து­வமும் சமத்­து­வமும் பிர­தான அங்­க­மாகும்.. அனை­வ­ருக்கும் மத்­தியில் சமத்­துவம் மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது. அதே­போன்று சர்­வ­ஜன வாக்­கு­ரிமை இதன் ஒரு அங்­க­மாகும். இதனை நிலை­நாட்டும் வகையில் சுயா­தீன தேர்தல் ஆணை­கு­ழு­வினை நிய­மித்­துள்ளோம். இதேபோல் அடிப்­படை உரிமை சிறப்­பம்சம் வாய்ந்­தது. தற்­போ­தைய சூழலில் அடிப்­படை உரிமை எது என்­ப­தனை புதிய அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டா­கவே தீர்­மா­னிக்க வேண்­டி­யுள்­ளது.

மக்கள் கருத்து கோரு­வ­தற்கு உப­குழு

இதற்­க­மைய புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்கு மக்­களின் கருத்­துக்­களை கோரு­வ­தற்கு முக்­கி­யத்­துவம் அளிக்­க­வுள்ளோம். மக்­களின் கருத்­துக்­களை கோரும் குழு­வி­னது அறிக்­கையின் பின்னர் அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுப்போம். அத்­துடன் தேவை­யேற்­படின் உப­குழு நிய­மிக்­கவும் முடியும். இதற்கு மக்கள் கருத்து கோரும் குழு­வி­னது ஆலோ­சனை எமக்கு அவ­சி­ய­மாகும்.

தேர்தல் முறைமை

இதே­வேளை அர­சி­ய­ல­மைப்பில் தேர்தல் முறை­மைக்கு முக்­கி­யத்­துவம் அளிக்­க­வுள்ளோம். தற்­போ­தைக்கு குறித்த விட­ய­தா­னத்தின் மூல அம்சம் தொடர்பில் அனைத்து கட்­சி­க­ளி­டத்­திலும் இணக்கம் ஏற்­பட்­டுள்­ளது. எனினும் கலப்பு தேர்தல் முறை­மையில் பங்­கீ­டுகள் தொடர்பில் உறு­தி­யான தீர்­மானம் அவ­சி­ய­மாகும். அதே­போன்று விகி­தா­சார முறை­மையில் தேசி­யப்­பட்­டி­யலை உள்­ள­டக்­கு­வது தொடர்பில் தீர்­மா­னங்கள் எடுக்க வேண்­டி­யுள்­ளது. தேர்தல் முறை­மையின் எத்­த­கைய வழி­மு­றை­களை உள்­ள­டக்­கு­வது என்­பது தொடர்பில் கட்சி தலை­வர்­க­ளுடன் பேசி வரு­கின்றோம். இதற்­கா­கவே கால­அ­வ­காசம் தேவைப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் மேற்­கு­றித்த விட­யங்­க­ளி­லேயே கட்­சி­க­ளுக்கு இடையில் இணக்கம் ஏற்­பட வேண்­டி­யுள்­ளது. எந்­த­வொரு கட்­சியும் தன்­னு­டைய கட்­சியின் பிர­தி­நி­தித்­து­வத்தை இழப்­ப­தற்கு விரும்ப கொள்­வ­தில்லை. ஆகவே இந்­த­வி­ட­யத்தில் இணக்கம் காண­வேண்­டி­யுள்­ளது.

அதே­போன்று நிறை­வேற்று அதி­கா­ரத்தை பாரா­ளு­மன்­றத்­திற்கு வழங்­கு­த­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பூரண இணக்கம் தெரி­வித்­துள்ளார். ஆகவே தற்­போது பாரா­ளு­மன்­றத்தின் அதி­கா­ரத்தை வலுப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. இதனை எந்த அணு­கு­மு­றையில் முன்­னெ­டுப்­பது என்­ப­தனை அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை தீர்­மா­னிக்கும்.

அதி­கார பகிர்ந்­த­ளிப்பு

புதிய அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிப்பின் போது அதி­கா­ரத்தை பகிர்ந்­த­ளிப்­பது தொடர்பில் விசேட அவ­தானம் செலுத்­த­வேண்­டி­யுள்­ளது. ஒற்­றை­யாட்­சிக்கும் ஐக்­கி­யத்­திற்கும் பாதிப்பு ஏற்­ப­டாத வகையில் அதி­கா­ரத்தை பகிர்ந்­த­ளிக்க வேண்டும். உலக நாடு­களில் பல்­வேறு அதி­கார பகிர்ந்­த­ளிப்­புகள் அமுலில் உள்­ளன. இதற்­க­மைய அமெ­ரிக்கா மற்றும் இந்­தியா போன்ற நாடு­களில் பல்­வேறு வித­மான அதி­கார பகிர்ந்­த­ளிப்­புகள் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இதன்­பி­ர­காரம் புதிய அர­சி­ய­ல­மைப்பில் இலங்­கைக்கு ஏற்­றதும் பொருத்­த­மா­ன­து­மான அதி­கார பகிர்ந்­த­ளிப்பை முன்­னெ­டுப்போம்.

இதே­வேளை தேவைக்கு அப்பால் அமைச்­சுக்­க­ளுக்கு அதி­கா­ரங்கள் உள்­ளதா என்­பது தொடர்­பிலும் ஆரா­ய­வேண்­டி­யுள்­ளது. இது தொடர்பில் அதி­கா­ரங்­களை பர­வ­லாக்கம் செய்ய கூடிய வழி­மு­றை­களும் உள்­ளன.

அத்­துடன் பழைய முறை­மையின் பிர­காரம் பாரா­ளு­மன்ற ஆலோ­சனை குழுவை நிறுவி அனை­வ­ரது ஆலோ­ச­னை­க­ளையும் பெறு­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளோம். இத­னூ­டாக பார­ளு­மன்றம் வலுப்­ப­டுத்­தப்­படும்.

புத்­தரின் போத­னையை நினை­வூட்­டிய சம்­பந்தன்

அத்­துடன் எனக்கு சென்ற வார­ம­ளவில் தேசிய சட்ட சம்­மே­ள­ணத்தின் போது புத்­தரின் போதனை குறித்து எதிர்­கட்சி தலைவர் இரா. சம்­பந்தன் நினை­வூட்­டினார். அதா­வது அனை­வரும் சமா­தா­னத்­துடன் ஒன்றிணைய வேண்டும். சமாதானமாக பேச வேண்டும். சமாதானமாக கலைந்து செல்லவேண்டும். இதுவே புத்தரின் ஆலோசனையாகும். இந்த புத்தரின் ஆலோசனையை நாம் ஏற்று நடக்க வேண்டும்.

இதற்கு மாறாக பாராளுமன்ற நடவடிக்கைகளில் செயற்படாதவர் உண்மையான பௌத்தராக இருக்கமுடியாது. நாம் அனைவரையும் ஒன்றிணைத்து பயணிக்கவே திட்டமிட்டுள்ளோம். ஆகவே எமது பயணத்தை முறியடிக்க நினைப்பவர்கள் நிச்சியமாக பௌத்தராகவோ, இந்துவாகவோ ,முஸ்லிமாகவோ, கிறிஸ்தவராகவோ இருக்க முடியாது. ஆகவே அடுத்த பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது உண்மையான பௌத்தர்களை இணங்கண்டு கொள்ளமுடியும்.

இந்த செயலமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா எம்.பி கலந்து கொண்டுள்ளார். ஆகவே இவர் புத்தரின் போதனைகளை பின்பற்ற கூடியவராக மாறியுள்ளார். பௌத்த மதத்தை பின்பற்றுபவர் என்ற பெயரில் விகாரைகள் வாயிலாக செல்பவர்கள் உண்மையான பௌத்தர்கள் அல்ல. விகாரைகளுக்கு செல்வது மாத்திரம் பௌத்தம் அல்ல. ஆகவே விகாரைகளுக்கு மாத்திரம் செல்லாமல் உண்மையான பௌத்தர்களாக செயற்படவேண்டும் என்றார்.