Breaking News

எந்தத் தடைகள் வந்­தாலும் சம்பூர் அனல் மின்­நி­லை­யத்தை அமைத்தே தீருவோம்!

சம்பூர் அனல்மின் உற்­பத்தி நிலையம் அமைப்­பதில் பின்­னிற்க மாட்டோம். இதில் காணப்­ப­டு­கின்ற தடை­க­ளையும் சவால்­க­ளையும் வெற்றி கொண்டு இதனை அமைத்தே தீருவோமென மின்­வலு மற்றும் புதுப்­பிக்­கத்­தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்­ப­லா­பிட்­டிய தெரி­வித்தார்.

“மின்­தடை” தொடர்பில் ஒரு­வ­ருக்­கொ­ருவர் சுட்டு விரலைக் காட்டிக் கொண்­டி­ருக்­காது எதிர்­கா­லத்தில் கூட்டுப் பொறுப்­புடன் செயல்­பட உறுதி பூணு­வோ­மென்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

கொழும்பில் அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் ரஞ்சித் சியம்­ப­லா­பிட்­டிய மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்

நாட்டின் மின்­சார தேவை அதி­க­ரித்­துள்­ளது. எனவே மின் உற்­பத்தி நிலை­யங்கள் மேலும் மேலும் தேவைப்­ப­டு­கி­றது. இவ்­வா­றா­னதோர் நிலையில் “சம்பூர்” அனல்மின் உற்­பத்தி நிலையம் அமைக்­கப்­பட வேண்­டி­யது கட்­டா­ய­மாகும். எனவே இதனை நிர்­மா­ணித்தே தீருவோம்.

இதனால் சூழல் மாச­டையும் என சூழ­லி­ய­லா­ளர்கள் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­கின்­றனர். இவ்­வா­றான திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­படும் போது சூழல் பிரச்­சி­னைகள் தலை­யெ­டுக்கும்.

எனவே சம்பூர் மின்­நி­ல­யைத்தை அமைப்­பது தொடர்பில் சூழல் விடங்­களை ஆராய குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. இக் குழுவின் அறிக்கை இன்னும் இரு­வா­ரங்­களில் கிடைக்­க­வுள்­ளது.

சம்பூர் அனல் மின்­நி­லை­யத்தை அமைப்­பது தொடர்பில் இந்­தி­யா­வுடன் 2008 ஆம் ஆண்­டி­லேயே உடன்­ப­டிக்கை செய்­து­கொள்­ளப்­பட்­டது. இது தொடர்பில் இந்­தி­யா­வுடன் பேசு­வ­தற்கு அவ­சி­ய­மேற்­ப­ட­வில்லை. சூழல் தொடர்­பான விடயம் தொடர்­பி­லேயே ஆரா­யப்­பட வேண்­டி­யுள்­ளது. குழுவின் அறிக்கை கிடைத்­த­வுடன் நிர்­மாணப் பணிகள் ஆரம்­ப­மாகும்.

அதே­வேளை இதன் இரண்டாம் கட்­டத்தை நிர்­மா­ணிப்­ப­தற்கு ஜப்பான் பொறுப்­பேற்­றுள்­ளது. சம்பூர் மின் உற்­பத்தி நிலையம் நாட்­டுக்கு அவ­சியம் தேவைப்­ப­டு­கின்­றது.எனவே இதனை கைவிட முடி­யாது. எந்தத் தடைகள் சவால்கள் வந்­தாலும் அனைத்­தையும் வெற்றி கொள்வோம்.

சூழல் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தி இத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­படும். கடந்த காலத்தில் ஏற்­பட்ட மின்­சார தடை தொடர்பில் பொலிஸ் அறிக்கை கிடைக்­க­வில்லை. அதே­வேளை இது தொடர்பில் ஒரு­வ­ருக்­கொ­ருவர். சுட்டு விரலைக் காட்டி குற்­றங்­களை சுமத்திக் கொண்டிருக்காது நாமனைவரும் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும். எதிர்காலத்தில் சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை பெறுவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது. அதற்கான திட்டங்களை விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம் என்றார்.