"புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி என்ற சொற்பதமே அவசியமில்லை'' - THAMILKINGDOM "புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி என்ற சொற்பதமே அவசியமில்லை'' - THAMILKINGDOM
 • Latest News

  "புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி என்ற சொற்பதமே அவசியமில்லை''

  பிரிக்­க­மு­டி­யாத தேசம் என்­பது அனை­வ­ராலும் ஏற்றுக்கொள்­ளப்­பட்­டுள்ள நிலையில். ஒற்­றை­யாட்சி என்ற பதமே புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு அவ­சி­ய­மில்லை என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரத்ன தெரி­வித்தார்.

  அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­ட­வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருக்கும் அதே­வேளை அதி­கா­ரங்­களை வலது கையால் வழங்கி தேசிய கொள்­கை­களின் பெயரால் இடது கையால் பறிக்க முடி­யாது எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

  புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான கருத்­த­ரங்கு நேற்று பத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்­டலில் நடை­பெற்­றது. இதன்­போது பிர­தி­நி­தித்­துவ அர­சாங்கம் தொடர்­பான அர்த்­தங்கள் இயற்­பண்­புகள் எனும் தொனிப்­பொ­ருளில் உரை­யாற்றுகையிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

  அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

  அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருக்­கின்றோம். அதன்­மூ­லமே ஜன­நா­யக ஆட்சி உறு­திப்­ப­டுத்­தப்­படும்.அந்­நி­லையில் அர­சியல் அமைப்பில் ஒற்­றை­யாட்சி என்ற சொற்­பி­ர­யோ­கத்தை பயன்­ப­டுத்­து­வதில் பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. என்­னு­டைய சில யோச­னை­களை முன்­வைக்­கின்றேன்.

  குறிப்­பாக ஒற்­றை­யாட்சி என்ற சொற்­பி­ர­யோ­கத்தை பயன்­ப­டுத்த வேண்டும் என்ற அவ­சி­ய­மில்லை. இது போன்ற சர்ச்­சைக்­கு­ரிய அடை­யா­ளங்­களை பயன்­ப­டுத்த வேண்­டிய தேவை­யில்லை என்றே கரு­து­கின்றேன்.

  பிரிக்­க­மு­டி­யாத தேசம் என்­பது அனை­வ­ராலும் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளது. அதைப் பிர­தி­ப­ளிக்கும் வகை­யி­லான சொற் பிர­யோத்தைப் பயன்­ப­டுத்­து­வது சிறந்­தது. ஆகவே அதனால் எவ்­விதப் பிரச்­சி­னை­களும் ஏற்­பட போவ­தில்லை.

  இது தொடர்­பாக பிரி­வினை ஏற்­படப் போகின்­றது எனக் கரு­து­ப­வர்கள் குறிப்­பாக கடும்­போக்­கர்­களை தவிர்த்து ஏனை­ய­வர்­க­ளுக்கு அவ்­வா­றான சந்­தேகம் ஏற்­ப­டு­மாயின் அதனை போக்க வேண்­டிய கடமை எமக்­குள்­ளது. இச் செயற்­பா­டு­களை நாம் முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ளது.

  13 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் பிர­காரம் உரு­வாக்­கப்­பட்ட மாகாண சபை­களை எடுத்­துக்­கொண்டால் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. எனினும் மாகா­ணங்கள் இணங்­கு­கின்ற போது ஒரு­மித்து இணங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் உள்­ளன.

  அது வொரு­பு­ற­மி­ருக்­கையில் மாகாண சபை­களில் பல்­கட்­சி­களின் பங்கு பற்­றல்கள் இருக்­க­வேண்டும்.இதன்­மூ­லமே நடை­முறை ரீதி­யாக பிரச்­சி­னை­களை அதி­க­ளவில் தீர்த்துக் கொள்ள முடியும்.

  விசே­ட­மாக மாகாண சபை­க­ளுக்கு காணப்­படும் அதி­கா­ரங்­களின் பிர­காரம் காணி அதி­கா­ரத்தைப் பிர­யோ­கிப்­பது தொடர்­பான பிரச்­சினை காணப்­ப­டு­கின்­றது. தேசிய காணி ஆணைக்­குழு அமைக்­கப்­பட்­டி­ருக்­குமானால் இந்தப் பிரச்­சினை இப்­போதே தீர்க்­கப்­பட்­டி­ருக்கும்.

  மாகாண சபை­களின் விருப்­ப­மில்­லாது மத்­திய அர­சினால் தீர்­மா­னங்கள் மேற்­கொள்­கின்­ற­போது பிரச்­சி­னைகள் எழு­கின்­றன. ஆகவே இரண்டாம் தர சபை ஒன்­றினை உரு­வாக்­கு­வது தொடர்பில் நான் யோச­னை­யொன்றை முன்­வைக்­கின்றேன். குறித்த அவையில் அனைத்து மாகா­ணங்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்த கூடி­ய­வ­கையில் முத­ல­மைச்சர் உள்­ள­டங்­க­ளாக 45 பிர­தி­நி­திகள் கொண்ட குழு உரு­வாக்­கப்­பட வேண்டும்.

  அதே­போன்று இந்த நாட்டில் பூர்­விகம் இல்­லா­த­வர்­க­ளுக்கும் இந்­திய வம்­சா­வ­ளி­யினர், ஆதி­வா­சிகள் மற்றும் பரங்­கியர் போன்ற இனக்­கு­ழுக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய குழு­வொன்று உரு­வாக்­கப்­பட வேண்டும்.

  தேசிய கொள்­கைகள் தொடர்­பான தீர்­மா­னங்­களை மேற்­கொள்­ளும்­போது இக்­கு­ழுக்­களின் யோச­னைகள், பரிந்­து­ரை­களை உள்­வாங்கி தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். இதன்­மூலம் மத்­தி­ய­ர­சு­ட­னான பல பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு எட்­டப்­படும்.

  அடுத்­த­தாக உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை கருத்திற் கொள்­ளும்­போது மத்­திய அர­சாங்­கத்தின் தலை­யீ­டு­க­ளின்றி இல­கு­வாக சட்­டங்­களை கையா­ளக்­கூ­டிய வகை­யி­லான மறு­சீ­ர­மைப்­புகள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டி­யுள்­ளன.

  கிரா­மிய மட்­டங்­களில் சபைகள் உரு­வாக்­கப்­ப­டு­வ­தனால் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் மக்­க­ளுடன் நெருக்­க­மாக செயற்­ப­டக்­கூ­டிய சூழல் ஏற்­ப­டு­கின்­றது. உதா­ர­ண­மாக அம்பாறை, பசறைப் போன்ற பகுதிகளிள் ஒரு குழுவினர் செறிந்து வாழும் நிலைமை காணப்படுகின்றது. ஆகவே அவ்வாறான குழுவினரும் பலன்களை பெறுகின்ற வகையில் ஏற்பாடுகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

  மக்களின் விருப்பமின்றி அரசியலமைப்பொன்றை நிறைவேற்ற முடியாது. அதேநேரம் அதிகாரங்களை பகிர்வதாக கூறி வலது கையினால் வழங்கிவிட்டு தேசிய கொள்கை என்ற பெயரினால் இடது கையினால் பெற்றுக் கொள்ள முடியாது. அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு சிறந்த அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என்றார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: "புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி என்ற சொற்பதமே அவசியமில்லை'' Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top