அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள நல்லிணக்க பொறிமுறை செயற்பாட்டின் ஒருங் கிணைப்பு செயலகத்தின் செயலாளராக அரச மற்றும் தனியார்துறையில் புகழ் பெற்ற முக்கியஸ்தராக விளங்கும் மனோ தித்தவெல நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்க வர்த்தக முயற்சிகள் மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாகவும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான விசேட செயலணி தலைவராகவும் மனோ தித்தவெல இதற்கு முன்னர் செயலாற்றியுள்ளார். வெளிநாட்டு கற்கைகளுக்கான கதிர்காமர் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையிலும் உறுப்பினராக மனோ தித்தவெல செயற்படுகின்றார்.