Breaking News

வடமாகாண சபையின் அரசியலில் தலையிட மாட்டேன்! - வடக்கு ஆளுநர்

வட­மா­கா­ண­சபை தனது அர­சி­யலை மேற்­கொள்­ளட்டும். அதில் நான் தலை­யிடப் போவ­தில்லை. ஆனாலும் நான் எனது கட­மையைச் சரி­வர நிறை­வேற்­றுவேன் என வட­மா­காண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரி­வித்­துள்ளார்.

நேற்­றைய தினம் சர்­வோ­த­யத்தின் ஏற்­பாட்டில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்­டி­ருந்த ஆளு­ந­ரிடம் ஊட­க­வி­ய­லாளர்கள் கேள்­வி­களை முன்­வைத்­தனர். அதற்­க­மைய, கடந்த காலங்­களில் வட­மா­காண சபைக்கும் முன்னர் கட­மை­யாற்­றிய ஆளு­ந­ருக்­கு­மி­டையில் பல்­வேறு விட­யங்­களில் முரண்­பா­டுகள் காணப்­பட்­டி­ருந்­தன. தற்­போது வட­மா­கா­ணத்தின் புதிய ஆளு­ந­ராக நீங்கள் பத­வி­யேற்­றுள்ள நிலையில் மாகா­ண­ச­பைக்கும் உங்­க­ளுக்­கு­மான நிலைப்­பாடு எத்­த­கைய வகையில் அமையும் எனக் கேள்­வி­யெ­ழுப்­பப்­பட்­டது. இதன்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு பதி­ல­ளித்தார்.

இதே­வேளை வட­மா­கா­ணத்தில் அத்­து­மீ­றிய சிங்­கள குடி­யேற்­றங்கள் தொடர்­பா­கவும் பௌத்த விகாரை அமைப்­பது தொடர்­பா­கவும் வட­மா­காண சபையில் பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள நிலையில் உங்­க­ளு­டைய கருத்­து­நிலை எத்­த­கை­யது என ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேள்­வி­யெ­ழுப்­பினர்.

இதன்­போது ஆளுநர் கருத்துத் தெரி­வித்­த­தா­வது,

வட­மா­காண சபையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைகள் தொடர்பில் எனக்கு எதுவும் தெரி­யாது. எனவே அது தொடர்பில் ஆராய்ந்தே பதி­ல­ளிக்­க­வேண்டும். இந்­நாட்டில் யாரும் எங்­கேயும் குடி­யே­றலாம். அதுவே இந்­நாட்டின் நீதி. உதா­ர­ண­மாக கொழும்பு வெள்­ள­வத்தை ஒரு குட்டி தமிழ்­நாடு போன்றே உள்­ளது. அது போன்று எந்த மக்­களும் எங்கும் வாழலாம்.

வட­மா­கா­ணத்தில் தமிழ் மக்­க­ளுக்கு காணிகள், நிலங்கள் வழங்­கப்­ப­டு­கின்­ற­போது அவர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­ப­டலாம். அதன் பின்னர் எஞ்­சிய இடங்­களில் ஏனைய மக்­களும் இருப்­ப­தற்கு அனு­ம­திக்­கப்­ப­ட­வேண்டும் என அவர் தெரி­வித்தார்.

இதே­வேளை வட­மா­கா­ணத்தில் அதி­க­ரித்­துள்ள போதைப்­பொருள் கடத்­தல்கள் தொடர்­பான கேள்­விக்கு ஆளுநர் பதி­ல­ளிக்­கையில்,

இந்­தி­யாவில் இருந்தே இந்தப் போதைப் பொருட்கள் பெரு­ம­ளவில் இங்கே கடத்தி வரப்­ப­டு­கின்­றது. இதற்கு காரணம் இந்­தி­யா­விற்கும் இலங்­கைக்­கு­மான இடை­வெ­ளி­யாகும். அதா­வது பயண தூரம் குறை­வாக இருப்­பதால் இல­கு­வாக போதைப்­பொருட்­களை இங்கே கடத்தி வரு­கி­றார்கள். எனினும் அத்­த­கைய கடத்தல் சம்­ப­வங்­களை தடுப்­ப­தற்கு கடற்­ப­டை­யி­னரும் பொலி­ஸாரும் இணைந்து செயற்­ப­டு­கின்­றனர். அத்­துடன் பொது மக்­களும் ஒத்­துழைக்க வேண்டும்.

மேலும் போதைப் பொருட்­களை கடத்தி கொண்டு வரு­கின்­ற­வர்கள் குற்­ற­வா­ளிகள் என கூறப்­படும் நிலையில் அதனைப் பெற்றுக்கொள்பவர்களும் குற்றவாளிகளே. எனவே இவற்றை உணர்ந்து இக் கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவர்கள் தொடர்பில் தகவலறிந்தால் அதனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தி போதைப் பொருள் கடத்தல் செயற்பாட்டை இல்லாதொழிக்க அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.