வெடிகுண்டு அங்கியை மறைத்து வைத்திருந்தவர் கைது! - THAMILKINGDOM வெடிகுண்டு அங்கியை மறைத்து வைத்திருந்தவர் கைது! - THAMILKINGDOM

  • Latest News

    வெடிகுண்டு அங்கியை மறைத்து வைத்திருந்தவர் கைது!

    சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உட்பட வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்த நபர் சற்று முன்னர் அக்கராயன் குளத்தில் வைத்து அக்கராயன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்டவர், ஒரு பிள்ளையின் தந்தையான 31 வயதுடைய எட்வர்ட் ஜுட் என்பவர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இவர் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் திருமணம் முடித்து, மணைவி, பிள்ளை மற்றும் தந்தையாருடன் யாழ்பாணம் சாவகச்சேரி வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

    இவர் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், பயங்கவரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.சாவச்சேரி, மறவன்புலோ என்ற இடத்திலுள்ள வீட்டிலிருந்து தற்கொலை அங்கியொன்று, 4 கிளேமோர் குண்டுகள், கிளேமோர் பெட்டரி 2, 12 கிலோ வெடிமருந்து, 100 துப்பாக்கி ரவைகள், மற்றும் 5 சிம்கார்ட்கள என்பன மீட்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.

    யாழ்ப்பாணம் சாவசக்சேரியில் தற்கொலை அங்கி உட்பட வெடிபொருட்கள் மீட்பு!யாழ்பாணம் சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உட்பட வெடிபொருட்கள் இன்று (புதன்கிழமை) அதிகாலை மீட்கப்பட்டுள்ளன.

    சாவச்சேரி, மறவன்புலோ என்ற இடத்தில் அமைந்துள்ள வீட்டிலிருந்து தற்கொலை அங்கியொன்று, 4 கிளேமோர் குண்டுகள், 2 கிளேமோர் பெட்டரிகள் , 12 கிலோ வெடிமருந்து, 100 துப்பாக்கி ரவைகள், மற்றும் 5 சிம்கார்ட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக சாவக்சேரி பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

    பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் புலனாய்வுப் பிரிவினர், சாகவக்சேரி பொலிஸார் இணைந்து இவற்றை மீட்டுள்ளனர்.குறித்த வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய அங்கு, சோதனைக்கு சென்ற போது வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

    இதன்போது, 31 வயதுடைய இளைஞர் ஒருவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாகவும், குறித்த நபர் இந்த வீட்டில் வாடகைக்கு இருந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.குறித்த வீடு தனியார் ஒருவருக்கு சொந்தமானது என்று குறிப்பிடும், சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: வெடிகுண்டு அங்கியை மறைத்து வைத்திருந்தவர் கைது! Rating: 5 Reviewed By: Tamilkingdom
    Scroll to Top