சிவராமின் படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் - THAMILKINGDOM சிவராமின் படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் - THAMILKINGDOM
 • Latest News

  சிவராமின் படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

  சிரேஷ்ட ஊடகவியலாளர் எ.எம்.சிவராமின் படுகொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.


  இந்த ஆர்ப்பாட்டம் இன்று வெள்ளிக்கிழமை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ளது.

  அத்துடன் ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு பொறுப்பானர்கள் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

  சிவராம் மற்றும் கொல்லப்பட்ட கடத்தப்பட்ட ஏனைய ஊடகவியலாளர்களுக்காக அரசாங்கத்திடம் நீதி கோரியும், சிவராம் படுகொலை வழக்கை மீள ஆரம்பிக்குமாறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்படவுள்ளது.

  தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம், இலங்கை முஸ்லிம் மீடியா போரம், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம், இளம் ஊடகவியலாளர் சங்கம், ஊடக ஊழியர் சேவை தொழிற்சங்க சம்மேளனம், ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள், இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சிவராமின் படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top