Breaking News

ஜீ.எல்., மஹிந்தவை விசாரிக்க வேண்டும்!

சர்­வ­தேச பொலிஸ் அமைப்­பான இன்­டர்போல் வலை­வீசி தேடும் முன்னாள் ரஷ்ய தூதுவர் உத­யங்க வீர­துங்­கவை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவே மறைத்து வைத்­துள்ளார். அவ­ரது தாய்­லாந்து விஜ­யத்தின் போது குறித்த விட யம் அம்­ப­ல­மா­கி­யுள்­ளது. 

எனவே இது தொடர்பில் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வி­டமும் ஜீ.எல்.பீரி­ஸி­டமும் உட­ன­டி­யாக வாக்­கு­மூலம் பெற்று உத­யங்க வீர­துங்­கவை கைதுசெய்ய வேண்டும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டார தெரி­வித்தார்.

அத்­துடன் இலா­ப­மீட்டும் நிறு­வ­ன­மான ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறு­வ­னத்தை தனது சுய நல­னுத்­திற்­காக அர­சு­டை­மை­யாக்கி மைத்­துனர் மயப்­ப­டுத்­தி­யது மஹிந்த ராஜ­ப­க்ஷ­வாகும். மக்­க­ளி­ட­மி­ருந்து கொள்­ளை­யிட்ட பணத்­தையே மே தினத்­திற்கு பொது எதி­ர­ணி­யினர் செல­வி­ட­வுள்­ளனர். தொகுதி அமைப்­பாளர் ஒரு­வ­ருக்கு ஒரு இலட்சம் ரூபா பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

ஜனா­தி­பதி தேர்தல் ஒன்று நடை­பெ­று­மானால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில விக்­கி­ர­சிங்­கவும் நேருக்கு நேர் மோத வேண்­டிய நிலைமை ஏற்­படும். அடுத்த தேர்­தல்கள் தொடர்பில் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கும் இடை­யில எந்­த­வொரு ஒப்­பந்­தமும் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வில்லை என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

பிட்ட கோட்­டேயில் அமைந்­துள்ள ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு நலின் பண்­டார எம்.பி மேலும் குறிப்­பி­டு­கையில்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தாய்­லாந்­திற்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்தார். இதன்­போது முன்னாள் ரஷ்ய தூது­வ­ராக பதவி வகித்­தி­ருந்த உத­யங்க வீர­துங்­கவை சந்­தித்து பேசி­யுள்ளார். இதன்­போது முன்னாள் அமைச்சர் ஜி.எல் பீரி­ஸூடன் இணைந்­தி­ருந்த எடுத்த புகைப்­படம் வெ ளியி­டப்­பட்­டுள்­ளது.

முன்னாள் ரஷ்ய தூது­வ­ராக பதவி வகித்­தி­ருந்த உத­யங்க வீர­துங்­க­விற்கு எதி­ராக பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ளன. அவற்றில் ஆயுதம் பரி­மாற்றல் மோசடி பார­தூ­ர­மா­ன­தாக உள்­ளது. மேலும் கொலை வழக்கில் சந்­தேக நப­ரா­கவும் அவர் விளங்­கு­கின்றார். இவர் மீதான விசா­ர­ணை­களை புல­னாய்வு பிரி­வினர் முன்­னெ­டுத்து வரும் நிலையில் அவர் வெ ளிநாட்டில் தலை­ம­றை­வா­கி­யி­ருந்தார். இத­னை­ய­டுத்து இலங்கை பொலிஸ் இன்­டர்­போலின் உத­வியை தற்­போது நாடி­யுள்ள தரு­வாயில் குறித்த புகைப்­படம் வெ ளியா­கி­யமை பெரும் பரப்­ப­ரபை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்­நி­லையில் தனது உற­வி­ன­ரான உத­யங்க வீர­துங்­கவை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவே மறைத்து வைத்­துள்ளார். எனவே அவர் தொடர்­பி­லான அனைத்து தக­வல்கள் மஹிந்த ராஜ­பக்ஷ அறிந்­தி­ருப்பார். தற்­போது இடை­ந­டுவே நிறுத்­தப்­பட்­டி­ருக்கும் உதய வீர­துங்­கவின் விசா­ர­ணை­களை மீளவும் ஆரம்­பிக்கும் வகையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வி­டமும் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரி­ஸி­டமும் உட­ன­டி­யாக வாக்­கு­மூ­லங்­களை பெற்று இன்­டர்­போலின் உத­வி­யுடன் உத­யங்க வீர­துங்­கவை கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கையை எடுக்க வேண்டும்.

எயார் லைன்ஸ் மோசடி

46 ஆயி­ரத்து 127 கோடி ரூபா நஷ்­டத்தில் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் இயங்­கு­வ­தற்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்வே பிர­தான கார­ண­மாகும். அதி­க­ளவில் இலா­ப­மீ்ட்டும் நிறு­வ­ன­மாக செயற்­பட்ட விமான சேவை நிறு­வ­னத்தை மைத்­துனர் மயப்­ப­டுத்­து­வ­தற்­காக அர­சு­டை­மை­யாக்­கினார். இதனால் தற்­போ­தைய அர­சாங்கம் பாரிய சிக்­க­லுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

அத்­துடன் விமான தயா­ரிப்பு பணி­களை பொறுத்­த­மட்டில் எட்டு விமா­னங்­களில் நான்கு விமா­னங்­க­ளுக்­கான தயா­ரிப்பு பணி­களை அவ­ச­ர­மாக இடை­நி­றுத்­தி­யுள்ளோம். எனவே நாட்டு மக்­களின் சுமையை குறைக்கும் வகையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சி்ங்க ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறு­வ­னத்தை தனி­யா­ருடன் கைகோர்த்து இலா­ப­மீட்­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­துள்ளார். எனினும் இதனை அர­சியல் கருப்­பொ­ரு­ளாக எடுத்து கொண்டு நாட்டின் உடை­மை­களை தனி­யா­ருக்கும் விற்­பனை செய்யும் திட்­டத்தை மீளவும் ஆரம்­பித்­துள்­ள­தாக பொது எதி­ர­ணி­யினர் குற்றம் சுமத்தி வரு­கின்­றனர். நாட்டின் பொரு­ளா­தார சீர்­கு­லைப்­ப­தற்கு பிர­தான கார­ணங்­களில் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸின் நட்டம் முக்­கிய இடத்தை வகிக்­கின்­றது.

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறு­வ­னத்தின் நஷ்டம் மற்றும் கடன் தொகை­களை கொண்டு கட்­டு­நா­யக்க அதி­வேக நெடுஞ்­சா­லையை போன்று 10 நெடுஞ்­சா­லை­களை நிர்­மா­ணிக்க முடியும். மேலும் துறை­முக நகர் திட்டம் போன்று 2 நகர்­களை உரு­வாக்க முடியும். மத்­தள விமான நிலையம் போன்று 18 விமான நிலை­யங்­களை நிர்­மா­ணிக்க முடியும். எனவே இவை­ய­னைத்து முன்­னைய ஆட்­சி­யாளர் கொள்­ளை­யிட்­டுள்­ளனர்.

இத­னூ­டாக விமா­னத்தில் செல்­வ­தனை கன­விலும் நினைத்­தி­ராத சாதா­ரண மக்கள் எயார் லைன்ஸின் கடனை போக்­கு­வ­தற்கு 23 ஆயி­ரத்து 63 ரூபா செலுத்த வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இதனால் மக்­களே பெரிதும் பாதிக்­கப்­ப­டுவார்.

மே தினம்

திரு­டர்கள் ஒன்று கூடும் கள­மாக இம் முறை பொது எதி­ர­ணியின் மே தினம் மாறி­யுள்­ளது. நாடு முழு­வ­தி­லி­ருந்தும் மக்­களை திரட்­டு­வ­தற்கு ஒரு அமைப்­பா­ள­ருக்கு ஒரு இலட்சம் ரூபா பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இவை­ய­னைத்தும் முன்­னைய அட்­சியின் கொள்­ளை­யி­டப்­பட்­ட­வை­யாகும். ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் போன்ற இலா­ப­மீட்டி கொண்­டி­ருந்த நிறு­வ­னத்தை மைத்­துனர் மயப்­ப­டுத்­தி­யமை ஊடாக கொள்­ளை­யி­டப்­பட்ட பணங்கள் மே தினத்தின் போது செலவிடப்படுகின்றது.

மைத்திரி்க்கும் ரணிலுக்கும் ஒப்பந்தமில்லை.

ஐந்து வருடங்களுக்கு பின்னர் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் அல்லது பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் எந்தவொரு ஒப்பந்தமும் கைச்சாத்திடவில்லை. அடுத்த தேர்தலின் போட்டியிட போவது தொடர்பில் இதுவரைக்கும் பேசவும் இல்லை. ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறுமானால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில விக்கிரசிங்கவும் நேருக்கு நேர் மோத வேண்டிய நிலைமை ஏற்படும் என்றார்.