ஜெயலலிதாவுடன் சட்டமன்றத்துக்கு செல்லவிருக்கும் பெண்களின் எண்ணிக்கை தெரியுமா? - THAMILKINGDOM ஜெயலலிதாவுடன் சட்டமன்றத்துக்கு செல்லவிருக்கும் பெண்களின் எண்ணிக்கை தெரியுமா? - THAMILKINGDOM

 • Latest News

  ஜெயலலிதாவுடன் சட்டமன்றத்துக்கு செல்லவிருக்கும் பெண்களின் எண்ணிக்கை தெரியுமா?

  தமிழக சட்டமன்ற தோ்தலில் போட்டியிட 779 பெண்கள் மற்றும் மூன்று திருநங்கைகள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

  தமிழக தேர்தல் வரலாற்றில் இம்முறை தான் அதிக எண்ணிக்யைில் பெண்கள் தோ்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இறுதியில் 320 பெண் வேட்பாளர்களே தேர்தலில் போட்டியிட்டனர். நேற்று வெளியான 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவில் மொத்தம் 15 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

  ஆளும் அதிமுக கட்சியில் 12 பெண் வேட்பாளர்களும், பிரதான எதிர்கட்சியாக உருவெடுத்துள்ள திமுக-வில் 2 பெண் வேட்பாளர்களும், காங்கிரஸ் கட்சியில் ஒரு பெண் வேட்பாளரும் வெற்றிப் பெற்றுள்ளனர்.

  2016ல் தேர்தலில் வென்ற அதிமுக பெண் வேட்பாளர்கள்

  * ஜெயலலிதா – அ.தி.மு.க – ஆர்.கே.நகர்
  * கீதா- அ.தி.மு.க – கிருஷ்ணராயபுரம்
  * பரமேஸ்வரி – அ.தி.மு.க – மணச்சநல்லூர்
  * வளர்மதி – அ.தி.மு.க – ஸ்ரீரங்கம்
  * சரோஜா – அ.தி.மு.க – ராசிபுரம்
  * சரஸ்வதி – அ.தி.மு.க – திருச்செங்கோடு
  * கஸ்தூரிவாசு – அ.தி.மு.க – வால்பாறை
  * மனோரஞ்சிதம் – அ.தி.மு.க – ஊத்தங்கரை
  * சத்யா – அ.தி.மு.க – பண்ருட்டி
  * ஜெயந்தி – அ.தி.மு.க – குடியாத்தம்
  * சந்திரபிரபா – அ.தி.மு.க – ஸ்ரீவில்லிபுத்தூர்
  * உமா மகேஷ்வரி – அ.தி.மு.க – விளாத்திகுளம்

  2016ல் தேர்தலில் வென்ற திமுக பெண் வேட்பாளர்கள்:
  * பூங்கோதை – தி.மு.க – ஆலங்குளம்
  * கீதாஜீவன் – தி.மு.க – தூத்துக்குடி

  2016ல் தேர்தலில் வென்ற காங்கிரஸ் பெண் வேட்பாளர்:
  * விஜயதாரணி – காங் – விளவங்கோடு
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஜெயலலிதாவுடன் சட்டமன்றத்துக்கு செல்லவிருக்கும் பெண்களின் எண்ணிக்கை தெரியுமா? Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top