கிளிநொச்சியில் 282 பேர் பார்வை இழந்துள்ளனர் - THAMILKINGDOM கிளிநொச்சியில் 282 பேர் பார்வை இழந்துள்ளனர் - THAMILKINGDOM
 • Latest News

  கிளிநொச்சியில் 282 பேர் பார்வை இழந்துள்ளனர்

  நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 282 பேர் பார்வை இழந்துள்ளதாக மாவட்ட செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது.


  கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் கடந்த 2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பிற்கு அமைய 282 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.இவர்களில் 43 போ் இரண்டு கண்களையும் இழந்துள்ளதுடன், 143 பேர் ஒரு கண் பார்வையை இழந்துள்ளனர்.

  மாவட்ட செயலக புள்ளிவிபரத்தின்படி, கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 108 போ் ஒரு கண்பார்வையையும் 18 போ் இரண்டு கண்பார்வையையும் இழந்துள்ளனர்.கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 49 போ் ஒரு கண் பார்வையையும் 12 போ் இரண்டு கண் பார்வையையும், பூநகாி பிரதேச செயலர் பிரிவில் 40 போ் ஒரு கண் பார்வையையும் 13 பேர் இரண்டு கண் பார்வையையும்,

  பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 42 போ் ஒரு கண் பார்வையையும் இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 2792 மாற்றுவலுவுள்ளோர் வசிப்பதாக மாவட்ட செயலகம் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: கிளிநொச்சியில் 282 பேர் பார்வை இழந்துள்ளனர் Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top